vjsthasia-386-modi-report-card > app > tamil > embed

Test Page

Click here for a list of include paths

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Integer a purus eu nisl porta aliquam. Morbi pharetra aliquet dolor a cursus. In auctor dolor a felis feugiat ultrices. Phasellus sagittis aliquet mattis. Etiam turpis neque, auctor a pulvinar a, vestibulum consequat ante. Morbi ut dui eget sapien vulputate viverra. Curabitur luctus malesuada nunc.

Nullam gravida erat ut porttitor sollicitudin. Aliquam feugiat odio rutrum arcu tincidunt vehicula. Donec nec dolor rhoncus, consectetur metus eget, consectetur enim. Duis euismod, arcu non efficitur porta, nibh eros viverra risus, ac gravida lorem ex in dui. Morbi pulvinar varius erat, quis facilisis ligula mollis vel. Nulla efficitur augue quam, ac aliquet mi ornare vitae. In ornare nisl eget tortor aliquam consectetur id nec lorem. Pellentesque massa dolor, placerat ac risus a, aliquam rhoncus nulla.

நரேந்திர மோதி அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது?

2014 பொதுத் தேர்தலில், நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இக்கூட்டணியின் 5 ஆண்டுகால ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வரவுள்ள சூழலில், பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிகளின் நிலை என்ன என்பதை நாங்கள் ஆய்வு செய்தோம்.

ஆய்வின் முறைகள்

இந்த திட்டத்திற்காக, 2014 அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தை கண்காணிக்கும் வகையில் மூன்று நிலை வகைகளை அமைத்திருக்கின்றோம்.

நிறைவேறியது: வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்பட்டன.

முன்னேறி வருகிறது: இந்த அரசு, புதிய திட்டங்களைச் சேர்த்தும், நிதியினை அதிகரித்தும் மற்றும் திருத்தங்களைச் செயல்படுத்துவதன் மூலம் சில முன்னேற்றங்களைச் செய்திருக்கிறது.

முன்னேற்றம் இல்லை: இந்த அரசாங்கத்தின், எவ்வித முன்னேற்றத்தையும் எட்டாத வாக்குறுதிகள். இது, இந்த அரசு முன்மொழிந்த வாக்குறுதிகளை உள்ளடக்கியது, ஆனால் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையை அமைக்க, எங்கள் தரவு குழு ஒவ்வொரு வாக்குறுதிக்குள்ளும் கைமுறையாக சென்றது. மேற்கொள்ளப்பட்ட செயல்முறைகள் அனைத்தும், பாராளுமன்ற வினாக்கள், உத்தியோகபூர்வ அறிக்கைகள், மற்றும் முன்னேற்றங்களை தீர்மானிக்க செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு வாக்குறுதியும் அதன் நிலை மற்றும் தகவலின் ஆதாரங்களுக்கான இணைப்புகள் பற்றிய விளக்கத்துடன் வருகின்றன.

2014 அறிக்கையில் இருந்து 393 வாக்குறுதிகளை நாங்கள் எடுத்தோம், ஆனால் எங்கள் பகுப்பாய்வுகளில் 346 வாக்குறுதிகள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன. சில வாக்குறுதிகள் திரும்பத் திரும்பச் சொல்லப்படிருந்தன. சில, இயல்பிலேயே நிரூபிக்க கடினமான வகையில் பொதுப்படையாக இருந்தன. மீதமுள்ள 47 வாக்குறுதிகளின் பட்டியலையும், அவற்றை ஏன் நாங்கள் ஆய்வுக்கு எடுக்கவில்லை என்பதையும் பார்க்க இந்த இணைப்பை கிளிக் செய்க.

புரொடக்ஷன்: மஹிமா சிங் மற்றும் ஷதாப் நஸ்மி

டெவெலப்மெண்ட்: அபிஷேக் ஜெய்ரத், ஜுலியட் கார்டர்

டிசைன்: மஹிமா சிங், ககன் நரே

இலிஸ்ட்ரேசன்: புனீத் பர்னாலா

புதிய சுகாதாரக் கொள்கையைத் தொடங்குதல்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

2017ல் தேசிய சுகாதாரக் கொள்கை உருவாக்கப்பட்டது. அனைவருக்கும் சுகாதார வசதி கிடைத்தல், அனைத்து மக்களுக்கும் கட்டுபடியாகும் செலவில் தரமான சுகாதார சேவைகள் கிடைக்கச் செய்வது ஆகியவை இதன் நோக்கங்கள்.

மேலும் விவரங்களுக்கு

நடப்பு முறைகளின் சவால்களுக்கு பொருந்துமாறு, இந்தியாவின் அணு ஆயுதக் கோட்பாட்டை விரிவாக ஆராய்ந்து, அதை மாற்றியமைத்தல் மற்றும் மேம்படுத்தல்.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

1950-களில் இருந்து இந்தியாவின் மூன்று-நிலை அணுசக்தி திட்டத்தை இந்த அரசு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா தற்போது, இரண்டாம் கட்டத்தில் பணிபுரிந்துகொண்டு, மூன்றாம் கட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. 2015 ஆம் ஆண்டில், அணுசக்தித் திட்டத்தை விரிவுபடுத்தவும், கூடுதல் நிதி தேவைகளை பூர்த்தி செய்யவும், இந்திய பொதுத்துறை நிறுவனங்களுடன் கூட்டு நிறுவனங்களை அமைத்து செயல்படுத்துவதற்காக, இந்தியாவின் அணு சக்தி கழகம் (NPCIL), அணு ஆற்றல் சட்டம், 1962ல், திருத்தம் செய்தது.

மேலும் தகவல்கள்

60 வயதுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நலத் திட்டங்களை உருவாக்குதல்

வகை: வேளாண்மை நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக அடல் ஓய்வூதியத் திட்டத்தை (APY) 2015-ல் அரசு தொடங்கியது. கிராமப்புற ஏழைகள், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதி பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்கு 2019 ஆம் ஆண்டில் ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் ஜன ஆரோக்கியா திட்டத்தை (PMJAY) அரசு தொடங்கியது. நகர்ப்புற தொழிலாளர்களில் தொழில் பிரிவினர் அடையாளம் காணப்பட்டனர். இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS), பிரதமரின் சுரக்சா பீமா திட்டம் (PMSBY), முதியோருக்கான ஒருங்கிணைந்த திட்டம் (IPOP), ராஷ்ட்ரீய வயோஸ்ரீ திட்டம் (RVY) உள்ளிட்ட நடைமுறையில் உள்ள மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டங்களும் விவசாயிகளுக்கு அமலில் உள்ளன. 2019 மத்திய பட்ஜெட்டில் ``பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதி (PM-KiSaN)'' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இத் திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயக் குடும்பங்கள் அனைத்திற்கும், வயது அடிப்படை ஏதுமின்றி, ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு

வேளாண் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்துதல்

வகை: வேளாண்மை நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

வறட்சி, வெள்ளம், பூச்சிகள், நோய்கள், புயல் போன்ற பரவலான பேரழிவு நிகழும் பகுதிகளில் பயிர்களுக்கு ஆபத்து நிவாரணக் காப்பீடு வழங்குவதற்காக 2016ல் பிரதமரின் பசல் பீமா திட்டம் தொடங்கப் பட்டது. ஏற்கெனவே அமலில் இருந்த வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை (WBCIS) மறு சீரமைப்பு செய்து 2016ல் திருத்தி அமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (RWBCIS) தொடங்கப்பட்டது. பற்றாக்குறை அல்லது உபரி மழை, அதிக அல்லது குறைவான வெப்பம், ஈரப்பதம் போன்ற வானிலை மாறுபாடுகளால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க இந்தத் திட்டம் காப்பீட்டு வசதி அளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு

கடலோர மாநிலங்களை ஒன்று சேர்த்து, கடல் பாதுகாப்பு மற்றும் காவல் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க ஒரு பொதுவான தளத்தினை அமைப்பது.

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர காவல்படை உள்ளிட்ட கடலோர மாநிலங்களைப் பாதிக்கும் விவகாரங்களைப் பற்றி விவாதிக்க, அவ்வப்போது, கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உள்துறை அமைச்சர்கள், பிரதம செயலாளர்கள் மற்றும் காவல் துறை இயக்குநர்கள் இடையே கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் தகவல்கள்

குறைந்த அளவில் தண்ணீர் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து ஊக்குவித்தலா.

வகை: வேளாண்மை நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

பாசனத்தில் தண்ணீரை சேமிக்கும் தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு 2015 ஆம் ஆண்டில் அரசு பிரதமரின் கிரிஷி சிஞ்சயி திட்டத்தை தொடங்கியது. `ஹர் கேட் கோ பாணி' மற்றும் `ஒவ்வொரு துளிக்கும் அதிக பயிர் சாகுபடி' என்ற முழக்கங்களைக் கொண்டதாக இரு இருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு

வேளாண்மை மற்றும் ஊர வளர்ச்சியில் அரசு முதலீட்டை அதிகரிப்பது

வகை: வேளாண்மை நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

பட்ஜெட் செலவின அறிக்கைகளின்படி, வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கு 2014ல் செலவிட்ட தொகை ரூ.111056 கோடியாக இருந்து, 2018ல் ரூ.170003 கோடியாக உயர்ந்திருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு

சுயவேலை வாய்ப்பில் இளைஞர்களை ஊக்குவித்து அதிகாரம் அளித்தல்

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), பிரதமரின் முத்ரா திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் (DAY-NRLM) மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் (NULM) போன்ற குறிப்பிட்ட இலக்கு சார்ந்த திட்டங்கள் மூலம் சுயவேலை வாய்ப்பை அரசு ஊக்குவிக்கிறது. இதில் NULM திட்டம் 2013ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தொடங்கப் பட்டது. இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பு தொழிலில் ஊக்கம் தந்து, வங்கிக் கடன்கள் அளித்து அதிகாரம் தருவதற்கு கிராமப்புற சுயவேலை பயிற்சி நிலையங்களை [RSETI] வங்கிகள் அமைத்து வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு

அதிக தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் துறைகள், சுற்றுலாத் துறை போன்றவற்றை திட்டமிட்டு வளர்ப்பது.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

அரசு முந்தைய அரசின் பல திட்டங்களை தொடர்ந்தது மற்றும் புதிய திட்டங்களையும் தொடங்கியது. அதிக தொழிலாளர்கள் வேலை பார்க்கும் துறைகளில் ஏற்றுமதிகள், ஃபோக்கஸ் மார்க்கெட்டிங் திட்டம், மார்க்கெட்டுடன் இணைந்த ஃபோக்கஸ் உற்பத்திப் பொறுள் திட்டம் மற்றும் ஃபோக்கஸ் உற்பத்திப் பொருள் திட்டம் என்பவை போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் ஊக்குவிக்கப் பட்டன. 2015-20ல் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை இடைக்காலத்தில் ஆய்வு செய்தபோது, இந்தியாவில் இருந்து வணிகப் பொருள்களின் ஏற்றுமதிகள் (MEIS), முக்கியமான தொழிலாளர் துறைகளில் 2% அதிகரித்திருக்கிறது. நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தவும் ஊக்குவிக்கவும் சுற்றுலா அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சுதேசி தர்ஷன் திட்டம் கோட்பாடு-சார்ந்த சுற்றுலா திட்டங்களை ஊக்குவிக்கிறது. யாத்ரிகர்கள் புத்துணர்வாக்கல் மற்றும் ஆன்மிக, கலாச்சார மேம்பாட்டு முன்முயற்சி (PRASHAD) திட்டம், அடையாளம் காணப்பட்ட புனிதத் தலங்களை ஆத்மார்த்தமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. பாரம்பரிய தலங்கள்/ நினைவிடங்கள் மற்றும் இதர சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா வசதிகள் பராமரிப்பில் கவனம் செலுத்துவதற்கு, பாரம்பரிய தளத்தை தத்தெடுக்கும் திட்டம் அமல் செய்யப் படுகிறது.

மேலும் விவரங்களுக்கு

கிராமப்புற ஏழைகளை விவசாயம் மற்றும் அதனுடன் இணைந்த செயற்பாடுகளில் பணி அமர்த்துவதை நோக்கமாகக் கொண்டது.

வகை: சிறுபான்மையினர் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தை அரசாங்கம் தொடர்கிறது. 2018 ம் ஆண்டில், MGNREGS-ன் கீழ் அனுமதிக்கப்பட்ட 260 வேலைகளில், 164 பணிகள், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடையவை. விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளுக்‍கான 2017-18 ம் ஆண்டின் செலவு, 67% ஆகும்.

மேலும் தகவல்கள்

எரிசக்தி உள்கட்டமைப்பு மேம்பாடு, மனித வள மேம்பாடு, தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துதல்.

வகை: சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் வழங்குவதற்காக, 2017ம் ஆண்டில், சவுபாக்கியா திட்டம் அறிவிக்கப்பட்டது. இது ஆற்றல் உள்கட்டமைப்பு அமைப்பதையும் உள்ளடக்கியது. திறமையான மனித வளத்தை உருவாக்கும் நோக்கத்துடன், 2015ம் ஆண்டில் திறன் இந்தியா பிரச்சாரமும் தொடங்கப்பட்டது.

மேலும் தகவல்கள்

தொழில் கல்வித் திட்டங்கள்

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

ஜூலை 15,2015 அன்று ‘இந்தியா திறன் இயக்கம்’ தொடக்கப்பட்டது. தேசிய திறன் மேம்பாட்டு லட்சியத் திட்டம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுக்கான தேசியக் கொள்கை ஆகியவை இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இடம் பெற்றன. இந்தியாவின் மிகப்பெரிய திறன் சான்றுறுதித் திட்டமான பிரமரின் திறன் மேம்பாட்டுத் திட்டமும் அதே நாளில் தொடக்கப்பட்டது. பிறகு இந்த திட்டம் மேலும் நான்கு ஆண்டுகள் செயல்பட (2016-2020) ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

ஜி.எஸ்.டி.யை ஏற்பதில் அனைத்து மாநில அரசுகளையும் இசைவுறச் செய்வது

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

2017ல் ஜி.எஸ்.டி. நிறைவேற்றப்பட்டது

மேலும் விவரங்களுக்கு

சுற்றுலாவுக்கென சிறப்புக் கல்வித் திட்டம்

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

2015 ஜூலையில் எம்.பி.ஏ. சுற்றுலா என்ற கல்வியை சுற்றுலாத் துறை அமைச்சகம் தொடங்கியது. அமர்கண்டக்கில் உள்ள இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன் இதற்கான பாடத் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இதுதவிர 2018 நவம்பரில் சுற்றுலா உதவியாளர்களுக்கான சான்றிதழ் கல்வித் திட்டம் தொடங்கப் பட்டது.

மேலும் விவரங்களுக்கு

போக்குவரத்து வசதிக்கு நீர்வழித் தடங்களை உருவாக்குவது

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

106 உள்நாட்டு நீர்வழித் தடங்களை தேசிய நீர்வழித் தடங்களாக மாற்றுவதற்கு 2016-ல் இந்திய நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப் பட்டது. தேசிய அளவில் நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் சாகர்மாலா திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் முதலாவது நீர்வழித் தடங்கள் 2018ல் பயன்பாட்டுக்கு வந்தன.

மேலும் விவரங்களுக்கு

புனிதப் பயண ரயில் உள்பட சுற்றுலா ரயில் வசதி அளித்தல்

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

நாடு முழுக்க புனிதத் தலங்களுக்கு பல்வேறு சுற்றுலா ரயில்களை ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் அளித்து வருகிறது. இவற்றில் புனிதப் பயண ரயில்களும் அடங்கும். பரிஷ்தா நகரிகா தீர்த்த யாத்திரை திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்களுக்கான புனிதப் பயண திட்டம் அளிக்கப் படுகிறது. புனிதப் பயண ரயில்கள் மூலம் இது அமல் செய்யப் படுகிறது. புத்த மார்க்கம் தொடர்பான இடங்களை இணைக்கும் வகையில் புத்தமார்க்க சர்க்யூட் சுற்றுலா ரயில் வசதியை சமீபத்தில் இந்திய ரயில்வே புதுப்பித்தது.

மேலும் விவரங்களுக்கு

சுங்க அனுமதிகள் பெறுவதை எளிதாக்குவதற்கு வர்த்தக மைய உதவிகளை உருவாக்குதல்

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

உலக வர்த்தக அமைப்பின் (WTO) வர்த்தக வசதி ஏற்படுத்தும் ஒப்பந்தம் (TFA) 2017ல் அமலுக்கு வந்தது. அதற்கு 2016ல் ஏற்பளிப்பு அளிக்கப் பட்டிருந்தது. வர்த்தகத்தை எளிதாக்குதல் மற்றும் சுங்க இசைவு விஷயங்களில் சுங்கம் மற்றும் தொடர்புடைய இதர துறைகளுக்கு இடையே சிறப்பான ஒத்துழைப்பை உருவாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. ஏற்றுமதியாளர்கள் பொதுவான மின்னணு அறிவிக்கை தாக்கல் செய்ய உதவும் வகையில் 2016 ஏப்ரலில், வர்த்தகத்திற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு ஒற்றைச்சாளர இடைமுகத்தை (SWIFT) மத்திய கலால் & சுங்க வாரியம் தொடங்கியது. அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர் திட்டம் (ACP), அத்தாட்சி பெற்ற பொருளாதார செயல்பாட்டாளர் (AEO) ஆகிய இரண்டு திட்டங்களும் ஒன்றாக சேர்க்கப்பட்டு, ஏற்றுமதியாளர்கள் / இறக்குமதியாளர்களுக்கு வசதிகள் / ஆதாயங்கள் அளிப்பதற்காக, மூன்றடுக்கு கொண்ட AEO திட்டமாக மாற்றப்பட்டது. 19 கடல் துறைமுகங்களிலும், 17 விமான சரக்கு வளாகங்களிலும் வாரத்தில் எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய சுங்க அனுமதி வசதி தொடங்கப் பட்டுள்ளது. ஏற்றுமதி/ இறக்குமதி நடைமுறைகள் தொடர்பான ஆவணங்களின் எண்ணிக்கையை அரசு குறைத்துள்ளது. சுங்க அனுமதி அளிக்கும் கமிட்டி (CCFC) 2015ல் அமைக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

முதலீடு மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய முன்முயற்சியாக சேமிப்புகளை ஊக்கப்படுத்துவது

வகை: பொருளாதாரம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

வீடுகளில் நிதி சேமிப்பை அதிகரிப்பதற்காக அரசு பல திட்டங்களை தொடங்கியது மற்றும் பல திட்டங்களை தொடர்ந்து அமல் செய்தது. 2015ல் தொடங்கப்பட்ட சுகன்யா சம்ரிதி திட்டம், தங்கள் மகள்களுக்காக பெற்றோர்கள் சேமிப்பதை ஊக்குவிக்கிறது. 2014 ஆம் ஆண்டின் பிரதமரின் ஜன-தன் திட்டம் (PMJDY), குடிமக்களுக்கு நிதி சேவைகள் கிடைப்பதை எளிதாக்குகிறது. தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு, வருமான வரி சட்டத்தில் அளிக்கப்படும் கழிவுத் தொகை வரம்பு உயர்வு உள்ளிட்ட பிற முயற்சிகளும் இருக்கின்றன. மூத்த குடிமக்கள் வங்கிகளில் வைத்திருக்கும் வைப்புத் தொகைகளுக்கு வட்டி வருமானத்துக்கு விலக்கு அதிகரிப்பு, மூத்த குடிமக்களுக்கு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்துக்கு வரம்பு மாற்றம் போன்ற வகைகளில், வீடுகளில் சேமிப்பை ஊக்குவிக்கும் திட்டங்கள் 2018-19 பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டன.

மேலும் விவரங்களுக்கு

வங்கி சேவைகள் எளிதில் கிடைப்பதை மேம்படுத்துவது, பொறுப்பேற்பு நிலை குறித்து வங்கி சீர்திருத்தங்களை மேற்கொள்வது.

வகை: பொருளாதாரம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

வங்கிக் கணக்குகள், பணம் செலுத்துதல், கடன், காப்பீடு, ஓய்வூதியம் போன்ற நிதிச் சேவைகள் கட்டுபடியாகும் வகையில் கிடைக்கச் செய்வதற்கும், அவற்றை விரிவுபடுத்துவதற்கும் பிரதமரின் ஜன்-தன் திட்டத்தை 2014ல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வாடிக்கையாளர் இணக்கநிலை, பொறுப்பான வங்கிச்சேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் வங்கிகளுக்கு மறுமுதலீடு செய்தல் மற்றும் விரிவான சீர்திருத்தத் திட்டங்களை 2018 ஆரம்பத்தில் அரசு அறிவித்தது.

மேலும் விவரங்களுக்கு

கருப்புப் பணம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக வெளிநாட்டு அரசுகளுடன் ஈடுபாட்டை உருவாக்குவது.

வகை: பொருளாதாரம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

வரி குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வதை மேம்படுத்துவதற்காக பல நாடுகளுடன் இந்தியா வரி தொடர்பான ஒப்பந்தங்கள் போட்டுக்கொண்டுள்ளது. வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும், கருப்புப் பணத்தை தடுக்கவும் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டன. வரி தொடர்பான தகவல் பரிமாற்று ஒப்பந்தங்கள், வரி விவகாரங்களில் பரஸ்பர நிர்வாக உதவிக்கான பன்முக ஒப்பந்தம், சார்க் பன்முக ஒப்பந்தம் ஆகியவற்றில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஜூன் 2016 நிலவரப்படி 139 நாடுகள்/ அதிகாரப் பகுதிகளுடன் இந்தியாவுக்கு வரி தொடர்பான ஒப்பந்தங்கள் உண்டு.

மேலும் விவரங்களுக்கு

கருப்புப் பணப் பிரச்சினையைக் கையாள்வதற்கு பணிக் குழு நியமித்தல்

வகை: பொருளாதாரம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

கருப்புப் பணத்தை பதுக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட முகமூடி நிறுவனங்களை மூடுவதற்காக 2017 பிப்ரவரியில் ஒரு பணிக் குழு உருவாக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

வெளிநாட்டு வங்கிகள் மற்றும் வெளிநாட்டு கணக்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தைக் கண்டறிந்து, கொண்டு வந்து சேர்க்கும் நடவடிக்கைகளை தொடங்கி வைப்பது

வகை: பொருளாதாரம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

கருப்புப் பணம் (அறிவிக்கப்படாத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துகள்) மற்றும் வரிகள் விதிப்புச்சட்டம் 2015ல் அமலுக்கு வந்தது. அப்போதிருந்து, வேறு பல திட்டங்களும், பினாமி பரிவர்த்தனை (தடுப்பு) திருத்தச் சட்டம் போன்றவை உருவாக்கப்பட்டு, பணிக் குழுக்கள் மற்றும் புலனாய்வுக் குழுக்களின் பணியுடன் சேர்க்கப் பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு

வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் (FIPB) செயல்பாட்டை இன்னும் செம்மையானதாகவும், முதலீட்டாளர்களுக்கு உகந்ததாகவும் மாற்றுவது.

வகை: பொருளாதாரம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தை (FIPB) 2017ல் அரசு ரத்து செய்துவிட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அதிக அம்சங்கள் கொண்டதாகவும், வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொழில் செய்வதை மிகவும் எளிதாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு

இந்தியாவின் உள்நாட்டு தோரியம் தொழில்நுட்ப திட்டத்தில் முதலீடு செய்தல்

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

இந்தியாவில் தோரியத்தின் முதன்மை ஆதாரம் மோனாசைட் ஆகும். ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான அணுசக்தி கனிம இயக்குநரக தரவுகளின் அடிப்படையில், மோனாசைட் வளங்கள், 12.47 மில்லியன் டன் என மதிப்பிடப்பட்டுள்ளன. 2012-2013ம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட அறிக்கையின்படி, டிராம்பேயில் உள்ள தோரியம் ஆலையின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்காக ரூ.1.50 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு எந்த பணமும் செலவழிக்கப்படவில்லை. தோரியம் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் 300 மெகாவாட் மேம்பட்ட கன நீர் உலைகளை கண்டுபிடிப்பதற்காக, தாராபூர் மகாராஷ்டிரா தளத்திற்கு (டி.எம்.எஸ்), 2016 டிசம்பரில் அரசாங்கம் கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துது. தோரியம் அடிப்படையிலான அணு உலைகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்காக மொத்தம் ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தகவல்கள்

முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்கு வங்கிச் சேவை அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (NBFC) கடுமையான ஒழுங்குமுறை விதிகள் உருவாக்கப்படும்.

வகை: பொருளாதாரம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த NBFC-களுக்கான ஒழுங்குமுறை விதிகளை 2014ல் ரிசர்வ் வங்கி திருத்தி அமைத்தது. NBFC துறையை வலுப்படுத்துவதையும், அதில் தொடர்புடையவர்களைப் பாதுகாப்பதையும் உறுதி செய்வதற்கு, இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு

வங்கித் துறையில் வராக் கடன்கள் அளவைக் குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்தல்.

வகை: பொருளாதாரம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

பொதுத் துறை வங்கிகளில், வாராக்கடன்கள் வசூலை விரைவுபடுத்தவும், தீர்வை செய்யவும் அரசு பல நடவடிக்கைகள் எடுத்தது. வங்கி திவால் சட்டம் 2016 (IBC), வங்கித் துறையில் திவால் அறிவிப்பு தரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்மூலம் வங்கித் துறையில் வாராக் கடன் சொத்துகள் அளவு குறையும். 2017ல் வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம் 1949 திருத்தப்பட்டது. நெருக்கடியில் உள்ள சொத்துகளைக் கையாள்வதற்குத் தேவையான விதிகள் இதில் சேர்க்கப்பட்டன. வாராக்கடன்களை வசூலிக்கும் முறைகளை அளிக்க வகை செய்யும் SARFAESI சட்டத்தை அரசு தொடர்ந்து அமல் செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு

ஜிஎஸ்டி அமல் செய்வதற்கு அதிவேக செயல்பாடுள்ள தகவல் தொழில்நுட்ப நெட்வொர்க் உருவாக்குதல்

வகை: பொருளாதாரம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2017ல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டியின் முதுகெலும்பாக 2013ல் தொடங்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் (GSTN) இருக்கிறது. இன்போசிஸ் நிறுவனம் அதை உருவாக்கியது.

மேலும் விவரங்களுக்கு

ஒரே `தேசிய வேளாண் சந்தையை' உருவாக்குதல்

வகை: பொருளாதாரம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

வேளாண் விளைபொருட்களுக்கு ஒருங்கிணைந்த தேசிய சந்தையை உருவாக்கும் வகையில், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள APMC சந்தைகளை நெட்வொர்க் மூலம் இணைத்து, விவசாயிகளுக்கு ஆன்லைன் வர்த்தக முனையத்தை ஏற்படுத்தும் வகையில், தேசிய வேளாண்மைச் சந்தை (eNAM) 2016ல் அரசால் ஏற்படுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

விலை உத்தரவாத நிதி உருவாக்குதல்

வகை: பொருளாதாரம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

வேளாண்-தோட்டக்கலை உற்பத்திப் பொருட்களின் விலைகளை ஒழுங்குபடுத்த உதவும் வகையில், வேளாண்மை, கூட்டுறவு & விவசாயிகள் நலன் (DAC & FW) துறையின் கீழ் 2014-ல் விலை உத்தரவாத நிதி (PSF) ஏற்படுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

தேசிய சூரியசக்தி மின்சார லட்சியத் திட்டத்தை விரிவுபடுத்துதல்

வகை: சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

தேசிய சூரிய மின்சக்தி லட்சியத் திட்டம் 2015ல் மறு ஆய்வு செய்யப்பட்டு, சூரிய மின் உற்பத்தித் திறனுக்கான இலக்கு அதிகரிக்கப்பட்டது. அதற்கடுத்த ஆண்டில், இந்தத் திறன் இரண்டு மடங்காக உயர்ந்தது என்று சொல்லப் படுகிறது.

மேலும் விவரங்களுக்கு

நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பது

வகை: சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தகவலின் படி, 2016-17ல் நிலக்கரி உற்பத்தியில் உலகில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாக இருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் நிலக்கரி தேவை மற்றும் உற்பத்தி அதிகரித்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு

நீர் மின் உற்பத்தித் திட்டங்கள் தொடங்குவது

வகை: சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு பல நீர் மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய திறமையான மனித வளங்களை அபிவிருத்தி செய்வதில் சிறப்பு கவனம்

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

நாட்டின் திறன் வளர்ச்சியை மேம்படுத்த, ஒரு வலுவான நிறுவன கட்டமைப்பை வழங்குவதற்காக, 2015ல் தேசிய திறன் மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டது. பல்வேறு துறைகளில் மக்‍களுக்‍கு பயிற்சி அளிக்‍க, 2015ம் ஆண்டு, திறன் இந்தியா பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் தகவல்கள்

`இமயமலை குறித்த தேசிய லட்சியத் திட்டம்' தொடங்குதல்

வகை: சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

2015ல் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த அமைச்சகம் இமயமலை ஆய்வுகளுக்கான தேசிய லட்சியத் திட்டத்தை (NMHS) தொடங்கியது.

மேலும் விவரங்களுக்கு

அரசில் திறந்தநிலை செயல்பாட்டை ஊக்குவித்தல், முடிவெடுக்கும் நடைமுறைகளில், தொடர்புடைய அனைவரும் பங்கெடுக்கும் வாய்ப்பை உருவாக்குதல்.

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கவும், முடிவெடுக்கும் நடைமுறைகளில் பங்கெடுத்துக் கொள்ளவும் அதிகாரிகளுடன் குடிமக்கள் கலந்து செயல்படும் வாய்ப்பை வழங்கும் வகையில் பல இணையதளங்களை அரசு தொடங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

தேர்தல் செலவின வரம்புகளை மாற்றியமைத்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

தேர்தல் நடத்தை விதிகள் 1961-ல் திருத்தம் செய்வதற்கு 2014 பிப்ரவரியில் அரசு ஒப்புதல் அளித்து, பெரும்பாலான மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களுக்கான செலவின வரம்பை ரூ.70 லட்சமாக உயர்த்தியது. சட்டமன்றத் தொகுதிகளைப் பொருத்த வரையில், அதிகபட்ச வரம்பு ரூ.28 லட்சமாக உயர்த்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

காலவதியான சட்டங்களை மறு ஆய்வு செய்து சீரமைத்தல் / ரத்து செய்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

``காலாவதியான சட்டங்களை அடையாளம் காணுதல்'' திட்டம் முந்தைய அரசின் 19வது சட்ட ஆணையத்தால் மேற்கொள்ளப் பட்டது. ஆணையத்தின் பதவிக் காலம் முடிந்துவிட்டதால், அதன் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அந்தப் பணிகளைத் தொடர 20வது சட்ட ஆணையம் முடிவு செய்தது. ``காலாவதியான சட்டங்கள்: உடனடியாக ரத்து செய்யும் கட்டாயத் தேவை'' என்பது குறித்து அந்த ஆணையம் நான்கு அறிக்கைகள் தாக்கல் செய்தது. சட்டங்களை ரத்து செய்வதற்கு அந்த அறிக்கைகளில் பரிந்துரைகள் செய்யப்பட்டது. காலாவதியான சட்டங்களை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்வதற்கு 2014ல் இரு நபர் கமிட்டி ஒன்றை பிரதமர் அலுவலகம் நியமித்தது. மொத்தம் 1,824 சட்டங்களை ரத்து செய்ய வேண்டியிருப்பதாக அந்தக் கமிட்டி அடையாளம் கண்டறிந்தது. பெரிய அளவில் சட்டங்களை ரத்து செய்வதற்கு அப்போதிருந்து ஐந்து மசோதாக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. ரத்து செய்ய வேண்டும் என்று அடையாளம் காணப்பட்ட 1824 சட்டங்களில், 1428 சட்டங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு

நிதி பங்கேற்பை உறுதி செய்வதற்கு செல்போன் மற்றும் மின்னணு-வங்கியியல் சேவையைப் பயன்படுத்துதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

2014-ல் இருந்து பிரதமரின் ஜன்-தன் திட்டம் (PMJDY) சுமார் 29 கோடி புதிய கணக்குகளைப் பெற்றிருக்கிறது. UPI அடிப்படையிலான செல்போன் பட்டுவாடா ஆப் BHIM-ஐ பிரதமர் மோதி தொடங்கி வைத்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு

காவல் துறையினருக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு வசதிகள் செய்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

பல்வேறு திட்டங்கள் மற்றும் பயிற்சி நிலையங்கள் மூலம் காவல் துறையினருக்கு மத்திய அரசு பயிற்சிகள் அளித்து வருகிறது. காவல் துறை படைகளை நவீனப்படுத்துவதற்காக `காவல் படையினர் நவீனமயமாக்கல் (MPF) திட்டத்துக்கு' மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதிகள் அளித்து வருகிறது. பயிற்சியில் உதவி செய்வதும் இதில் அடங்கும். சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய காவல் துறை அகாடமி, காவல் துறை ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பு, வடகிழக்கு காவல் துறை அகாடமி, லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் தேசிய குற்றவியல் மற்றும் தடயவியல் அறிவியல் பயிற்சி நிலையம் ஆகியவை, பல்வேறு நிலைகளில் தடயவியல் அறிவியலில் பயிற்சிக் கல்வித் திட்டங்களை அளிக்கின்றன. தேசிய குற்ற ஆவண மையத்தின் பயிற்சிப் பிரிவு, இந்திய காவல் துறை அதிகாரிகளுக்குப் பல்வேறு பயிற்சித் திட்டங்களை அளிக்கிறது. மத்திய ஆயுதப்படை காவல் துறை (CAPF) மற்றும் மத்திய காவல் அமைப்புகளின் கீழ் (CPO) செயல்படும் சிறப்புப் பயிற்சி நிலையங்கள் மூலமாக மத்திய அரசு, தங்கள் படையினருக்கும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறையினருக்கும் ஆண்டுதோறும், பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு

காவல் படைகளை நவீனமாக்கல், அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கிடைக்கச் செய்தல்.

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

காவல் படைகளை நவீனப்படுத்துவதற்கு அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது. ``காவல் படைகளை நவீனமாக்கும் (MPF)'' ஒரே குடையின் கீழான திட்டத்துக்கு, 2017-18 முதல் 2019-20 வரையிலான மூன்று ஆண்டு காலத்துக்கு அரசு 2017 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. ரூ.25,061 கோடியில் இதற்கு அனுமதி அளிக்கப் பட்டது. நவீன கால ஆயுதங்கள் வாங்குவது, சாதனங்களைப் பயன்படுத்தும் பயிற்சி அளிப்பது, முன்னேறியுள்ள தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பெறுவது, தடயவியல் சாதனங்கள் வாங்குவது போன்றவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப் படுகிறது. MPF-க்கு அப்பாற்பட்டு, 2018ல் அரசு குற்றம் மற்றும் குற்றவியல் நெட்வொர்க் மற்றும் முறைமைகளை (CCTNS), புலனாய்வுகள் மற்றும் குடிமக்கள் சேவைகளுக்கான ஆன்லைன் வசதி என்ற வகையில் அரசு தொடங்கியது. காவல் நிலையங்களுக்கு இடையே கருத்தாடல் செய்வது மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இந்த முனையம் உதவிகரமாக உள்ளது. பல்வேறு துறைகள் மூலமாக கணினிசார் தடயவியல் பயிற்சி வகுப்புகளை மத்திய அரசு நடத்தி வருகிறது. தகவல் பாதுகாப்புக் கல்வி மற்றும் விழிப்புணர்வு முனையம், Cert-in, காவல் துறை ஆராய்ச்சி & மேம்பாட்டு பயிற்சிப் பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கணினிசார் குற்றத்தடுப்பு திட்டம், சிபிஐ போன்றவற்றிலும் பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன. கணினிசார் பாதுகாப்பில் தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களும் கூட வகுப்புகள் நடத்துகின்றன. அனைத்து வகையான கணினிசார் குற்றங்களையும் கையாள்வதற்கு, உள்துறை அமைச்சகமும், ``இந்திய கணினிசார் குற்ற ஒத்துழைப்பு மையம் (I4C)'' -க்கு 2018ல் ஒப்புதல் அளித்தது.

மேலும் விவரங்களுக்கு

புலனாய்வுத் தகவல்களைப் பகிர்வது மற்றும் குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்கு நாடு முழுக்க காவல் நிலையங்களின் நெட்வொர்க் உருவாக்குதல்.

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

குற்றம் மற்றும் குற்றச் செயல் டிராக்கிங் நெட்வொர்க் மற்றும் முறைமைகள் (CCTNS) 2018 இறுதியில் தொடங்கப்பட்டது. இதற்கு 2009 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப் பட்டிருந்தது. இந்திய அரசின் தேசிய மின்னணு-நிர்வாகத் திட்டத்தின் கீழான லட்சிய நோக்குடைய திட்டமாக CCTNS உள்ளது. காவல் பணி மற்றும் மின்னணு நிர்வாகத்தை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்ட இணையதளமாக CCTNS உள்ளது. குடிமக்கள் சார்ந்த மற்றும் புலனாய்வு சேவைகளின் அனைத்துத் தேவைகளுக்கும் தீர்வளிக்கும் ஒரே இடமாக இது கருதப் படுகிறது. காவல் நிலையங்களுக்கு இடையில் கருத்தாடல் செய்வது மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இந்த முனையம் உதவுகிறது. 2018 நவம்பர் நிலவரப்படி, நாட்டில் 14764 காவல் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

காவல் துறையினருக்கு கணினிசார் குற்றங்கள் தொடர்பாகப் பயிற்சி அளித்து தொழில்நுட்ப அறிவைப் புகட்டுதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

பல்வேறு துறைகள் மூலமாக கணினிசார் தடயவியல் பயிற்சி வகுப்புகளை மத்திய அரசு நடத்தி வருகிறது. தகவல் பாதுகாப்புக் கல்வி மற்றும் விழிப்புணர்வு முனையம், Cert-in, காவல் துறை ஆராய்ச்சி & மேம்பாட்டு பயிற்சிப் பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கணினிசார் குற்றத்தடுப்பு திட்டம், சிபிஐ போன்றவற்றிலும் பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன. கணினிசார் பாதுகாப்பில் தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களும் கூட வகுப்புகள் நடத்துகின்றன. இந்திய கணினிசார் குற்றவியல் ஒத்துழைப்பு மையம் (I4C) ஒன்றை ரூ.415.86 கோடி மதிப்பீட்டில் 2018-20 காலக்கட்டத்தில் உருவாக்குவதற்கு உள்துறை அமைச்சகம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு

ஒருங்கிணைக்கப்பட்ட நகர்ப்புற திட்டமிடல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

ஒருங்கிணைந்த நகர்ப்புற திட்டமிடலுக்கான முன்னோடி திட்டத்தை உருவாக்க ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை 2016 ஜூன் 25 ஆம் தேதி பிரதமர் மோதி தொடங்கி வைத்தார்.

மேலும் விவரங்களுக்கு

முன்மாதிரி நகரங்களில் ஒருங்கிணைந்த கழிவுகள் மேலாண்மை

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் அமைச்சகம் 2017 டிசம்பர் 23 ஆம் தேதி கங்கை நதியை ஒட்டிய 4470 கிராமங்களில் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மையை ஊக்குவிப்பதற்காக ``கங்கா கிராம்'' திட்டத்தைத் தொடங்கியது. முந்தைய 2016 ஆம் ஆண்டில், கழிவு மேலாண்மைக்குப் பதிவு செய்து, மேற்பார்வையிடுவதற்காக தொழிற்சாலைகளுக்கான இணையதளம் சார்ந்த மென்பொருளை சுற்றுச்சூழல் அமைச்சர் தொடங்கி வைத்தார். அதே ஆண்டில், பல்வேறு வகையான கழிவுகள் தொடர்பாக பல விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு

`பிரதமரின் கிராம சிஞ்சயி திட்டம்' தொடங்குதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

PMKSY-ன் முதலாவது கூட்டம் 2015 ஜூலை 1 ஆம் தேதி நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு

கழிவுநீர் சுத்திகரிப்பு

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

கங்கை நதியில் மேலும் மாசு ஏற்படுவதைக் குறைப்பதற்கு கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கான குழாய்கள் பதிக்கும் திட்டத்தை 2018 டிசம்பரில் பிரதமர் மோதி தொடங்கி வைத்தார். புதிய கழிவுநீர் நெட்வொர்க், 7 நீரேற்று நிலையங்கள் மற்றும் 3 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் அதே நிகழ்ச்சியில் அவர் அடிக்கல் நாட்டினார். கங்கா / யமுனா பகுதிகள் இதனால் பயன்பெறும். நீர்வள அமைச்சகத்தின் தகவல்களின்படி இதுபோன்ற 10 திட்டங்கள் ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு

கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைத்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

ஒடிசாவின் கடலோரத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அமைக்கப்பட்டு வருவதாக 2017 பிப்ரவரியில் அணுசக்தித் துறை தெரிவித்துள்ளது. சென்னை கல்பாக்கத்தில் மற்றொரு சுத்திகரிப்பு நிலையம் ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்து வருகிறது. மகாராஷ்டிராவில் கடலோரப் பகுதியில் இதுபோன்ற நிலையம் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை.

மேலும் விவரங்களுக்கு

நிலத்தடி நீர் தரத்தை ஆய்வு செய்வது

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

நிலத்தடி நீரின் தரத்தை மத்திய நிலத்தடி நீர் வாரியம் (CGWB) ஆண்டுதோறும் கண்காணிக்கிறது. மாநிலத்தால் தகவல் கணக்கெடுப்புகள் நடத்தி, புளோரைடு, நைட்ரே், ஆர்சனிக், இரும்பு, கனரக உலோகங்கள், உப்புத்தன்மை குறித்த அளவீடுகள் பெறப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு

சாகர்மாலா திட்டம் உருவாக்குவது

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

சாகர்மாலா திட்டம் 2015 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

அரசு ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பாகப் பல திட்டங்களை அரசு மேற்கொண்டுள்ளது, பலவற்றைத் தொடர்ந்து அமல் செய்கிறது. நில ஆதாரவளங்கள் துறை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தின் டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனப்படுத்தல் திட்டத்தை (DILRMP) பின்பற்றி வருகிறது.இதற்காக இதுவரையில் ரூ.1399.83 கோடி விடுவிக்கப் பட்டுள்ளது. கையெழுத்துப் பிரதிகளை ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதலுக்காக தேசிய கையெழுத்துப் பிரதி லட்சியத் திட்டத்தை NMM) கலாச்சார அமைச்சகம் தொடங்கியது. இதுவரையில் அதன்படி 43.16 லட்சம் கையெழுத்துப் பிரதிகள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. பல்வேறு பிரதிகள் மற்றும் மொழிகளில் இருந்து அவை ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. அருங்காட்சியகங்களில் உள்ள தொகுப்புகளை டிஜிட்டல் மயமாக்கும் பணியையும் கலாச்சாரத் துறை மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 18 அருங்காட்சியகங்கள் அரசின் நிதி உதவியைப் பெறுகின்றன. நாடு முழுக்க உள்ள உயர் நீதிமன்றங்களில் உள்ள வழக்கு ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு நிலைகளில் பணிகள் நடந்து வருகின்றன. இந்திய தேசிய ஆவணக்காப்பக தொகுப்புகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடர் நடவடிக்கையாக உள்ளது. அனைத்து ஆவணத் தொகுப்புகளும் அணுகும் வகையில், பகிரக்கூடிய இணையதளம் - abhilekh-patal - 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தாள்களாக உள்ள ஆவணங்களைத் தொகுப்பாக சேகரித்து டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் டிஜிட்டல் மயமாக்குவதற்கு டிஜிட்டல் இந்தியா தளம் (DIP) ஒன்றை அரசு தொடங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

வழக்கறிஞர்களுக்கு உதவும் வகையில் விரிவான தேசிய மின்னணு - நூலகம் உருவாக்குதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2018 ஆம் ஆண்டில் இந்திய தேசிய டிஜிட்டல் நூலகம் திட்டத்தைத் தொடங்கியது. இலவசமாகக் கற்பதற்கான கல்வி ஆதாரங்கள் இதில் உள்ளன. இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் விவரங்களுக்கு

நமது சட்டங்களை அவ்வப்போது ஆய்வு செய்து, செம்மைப்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்குவது.

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

``காலாவதியான சட்டங்களை அடையாளம் காணுதல்'' திட்டம் முந்தைய அரசின் 19வது சட்ட ஆணையத்தால் மேற்கொள்ளப் பட்டது. ஆணையத்தின் பதவிக் காலம் முடிந்துவிட்டதால், அதன் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அந்தப் பணிகளைத் தொடர 20வது சட்ட ஆணையம் முடிவு செய்தது. ``காலாவதியான சட்டங்கள்: உடனடியாக ரத்து செய்யும் கட்டாயத் தேவை'' என்பது குறித்து அந்த ஆணையம் நான்கு அறிக்கைகள் தாக்கல் செய்தது. சட்டங்களை ரத்து செய்வதற்கு அந்த அறிக்கைகளில் பரிந்துரைகள் செய்யப்பட்டது. காலாவதியான சட்டங்களை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்வதற்கு 2014ல் இரு நபர் கமிட்டி ஒன்றை பிரதமர் அலுவலகம் நியமித்தது. மொத்தம் 1,824 சட்டங்களை ரத்து செய்ய வேண்டியிருப்பதாக அந்தக் கமிட்டி அடையாளம் கண்டறிந்தது. பெரிய அளவில் சட்டங்களை ரத்து செய்வதற்கு அப்போதிருந்து ஐந்து மசோதாக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. ரத்து செய்ய வேண்டும் என்று அடையாளம் காணப்பட்ட 1824 சட்டங்களில், 1428 சட்டங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு

``தேசிய வளர்ச்சிக் கவுன்சில்'' மற்றும் ``மாநிலங்களிடை கவுன்சில்'' போன்ற அமைப்புகள் புதுப்பிக்கப்படும்.

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

மாநிலங்களுக்கு இடையிலான சர்ச்சைகளை புலனாய்வு செய்து ஆலோசனைகள் வழங்கும் பணியாற்றி வந்த மாநிலங்களிடை கவுன்சில், பிரதமர் நரேந்திர மோதியை தலைவராகவும், ஆறு மத்திய அமைச்சர்கள் மற்றும் அனைத்து முதல்வர்களையும் உறுப்பினர்களாகவும் கொண்டதாக மீண்டும் உருவாக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

எங்கள் வேலைவாய்ப்பு பரிமாற்றங்களை, வேலைவாய்ப்பு மையங்களாக மாற்றுதல்.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

2013 முதல், தேசிய வேலைவாய்ப்பு சேவை மற்றும் வேலைவாய்ப்புப் பரிமாற்றங்களின் இணைப்பிற்காக, தொழிலாளர் செயலகம், தேசிய தொழில் சேவை (NCS) திட்டத்தை ஒரு பணி முறை திட்டமாக, செயல்படுத்தி வருகின்றது. வேலை தேடுவோருக்கு ஆலோசனை சேவைகள் வழங்குவதற்காக, வேலைவாய்ப்பு பரிமாற்றங்களை, வேலைவாய்ப்பு மையங்களாக மாற்றுவதையும் மேற்பார்வையிடுகிறது.

மேலும் தகவல்கள்

ஆசிரியர் பயிற்சி நிலையங்களின் பணி கலாச்சாரத்தை மாற்றி அமைப்பது

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் பயிற்சி பெறாத ஆசிரியர்கள், தொடர்ந்து ஆசிரியர்களாகப் பணியாற்ற வேண்டுமானால் 2019 மார்ச் 31க்குள் B.Kl. Ed (Bachelor of Elementary Education) அல்லது D. El.Ed. (Diploma in Elementary Education) கல்வித் தகுதிகளைப் பெற வேண்டும் என்று மக்களவையில் அண்மையில் மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது. நான்காண்டு கால B.Ed. ஒருங்கிணைந்த படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பன்முக வாய்ப்புகள் கொண்ட இந்த வகுப்புகள் 2019-20ல் தொடங்குகின்றன. ஐ.ஐ.எம்.கள் தங்கள் சேர்மன்களை தேர்வு செய்வதற்கு அதிக சுதந்திரம் அளிக்கப் பட்டுள்ளது. ``உயர் சிறப்பு கல்வி நிலையங்கள்'' திட்டம் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அது தொடங்கப் பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

பள்ளிக்கூட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிகாரம் அளிக்கச் செய்யும் வகையில் தேசிய மின்னணு நூலகம் ஏற்படுத்துதல்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2018ல் இந்தி தேசிய டிஜிட்டல் நூலகம் திட்டத்தைத் தொடங்கியது. இலவசமாகக் கற்பதற்குரிய ஆதாரவளங்கள் இதன் மூலம் எல்லோரும் அணுகும் வகையில் அளிக்கப் பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு

சர்வ சிக்சா அபியான் தி்டத்தின் செயல்பாடுகளை தணிக்கை செய்வது

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

சர்வ சிக்சா அபியான் திட்டத்துக்காக `ShaGun' என்ற இணையதளத்தை 2017ல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தொடங்கி வைத்தார். அதற்கு இரண்டு முக்கிய நோக்கங்கள் இருந்தன. மாநிலங்களில் இத் திட்டத்தின் முன்னேற்றத்தை `ஆன்லைனில் கண்காணிப்பது.' பள்ளிகளில் ஆசிரியர்கள் உடனுக்குடன் இதில் தகவல்களைப் பதிவு செய்வார்கள். `களஞ்சியம்' என்பது இத் திட்டத்தில் சிறப்பான செயல்பாடுகள், அறிக்கைகளை ஆவணப்படுத்துவதாகும். சில அறிக்கைகளை மட்டுமே மக்கள் பார்க்க முடியும்.

மேலும் விவரங்களுக்கு

யோகா மற்றும் ஆயுஷ்-ல் அரசு முதலீட்டை அதிகரிப்பது

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

பட்ஜெட் செலவின அறிக்கைகளின்படி, 2014ல் ஆயுஷ் திட்டத்துக்கான அரசு செலவின மதிப்பீடு ரூ.892 கோடியாக இருந்தது. 2018ல் அது ரூ.1626 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு

வேளாண் உற்பத்தி மற்றும் மார்க்கெட்டிங் கமிட்டி APMC சட்டத்தை திருத்தி அமைத்தல்

வகை: வேளாண்மை நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

2017 ஆம் ஆண்டில் ``வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடைகள் விற்பனை (ஊக்குவித்தல் மற்றும் வசதிகள் செய்தல்) சட்டத்தை'' அரசு அமல்படுத்தியது. நுகர்வோர்களுடன் விவசாயிகளுக்கு நேரடியாகத் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் இந்தச் சட்டம் அமல்படுத்தப் பட்டது. APMC சட்டத்துக்கும், மேலாக புதிய முன்மாதிரி சட்டம் கணிசமான முன்னேற்றகரமான விஷயங்களுடன் சேர்த்து உருவாக்கப் பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

தொலைநோக்குத் திட்டமாக மக்கள் தொகைப் பெருக்கத்தை நிலைப்படுத்துவது பற்றி ஆய்வு செய்வது.

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

அதிக கருத்தரிப்பு உள்ள 146 மாவட்டங்களில் மக்கள் தொகைப் பெருக்கத்தை நிலைப்படுத்துவதற்கு, 2017ல் கருத்தடை வசதிகள் கிடைக்கச் செய்வதற்கான பரிவார் விகாஸ் தொலைநோக்குத் திட்டத்தை அரசு தொடங்கியது. மக்கள் தொகைப் பெருக்கத்தை நிலைப்படுத்தலுக்கான கொள்கை வழிகாட்டுதல் மற்றும் நோக்கங்களை தேசிய சுகாதாரக் கொள்கை (NHP) 2017 குறிப்பிடுகிறது. புதிய கருத்தடை வாய்ப்புகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

பெருமளவில் திறந்தநிலை ஆன்லைன் கல்தி திட்டங்களை உருவாக்குதல்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

``ஆர்வம் உள்ள இளைஞர்கள் தீவிரமாகக் கற்பதற்கான கல்வி இணையதளங்கள் (SWAYAM)'' திட்டத்தை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2016ல் தொடங்கியது. பெருமளவில் திறந்தநிலை ஆன்லைன் கல்தி திட்டங்களை (MOOC) அளிக்கும் இணையதளமாக, ஒருங்கிணைந்த தளத்தை அளிப்பதாக இது இருக்கிறது. பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டங்களுடன் SWAYAM பாடத் திட்டங்களை சேர்ப்பதற்கு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுவரையில் SWAYAM திட்டத்தின் கீழ் மொத்தம் 1,082 பாடத் திட்டங்கள் பட்டியலிடப்பட்டு, 25,57,118 பேர் பதிவு செய்திருக்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு

பணிப் பயிற்சி சட்டத்தை மீள்பார்வை செய்தல்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

பணிப் பயிற்சிகள் (திருத்த) மசோதா 2014 நவம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இளைஞர்கள் மற்றும் தொழில் துறைக்கு அதிக பொறுப்பு ஏற்படுத்தும் வகையில் பணிப் பயிற்சி இருக்க வேண்டும் என்பது இதன் நோக்கமாக உள்ளது. வேலை தருபவர்களுக்கு அளவுக்கு அதிகமான அதிகாரங்கள் தருவதாக இந்தச் சட்டம் உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கவலை தெரிவித்தனர். விதிகளை சிறிதளவு மீறினாலும் தண்டனை வழங்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு

நாட்டில் மிகவும் பின்தங்கிய 100 மாவட்டங்களை அடையாளம் காண்பது.

வகை: சிறுபான்மையினர் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

இந்தத் திட்டத்தின் கீழ் 2017ல் அரசு பணிகளைத் தொடங்கியது. அந்த மாவட்டங்களை ``வேகமாக வளர்ச்சி அடையச் செய்ய'' 12 அமைச்சகங்களை ஈடுபடுத்தியது. 2018 ஏப்ரல் முதல் 2019 மார்ச் வரையில் இந்த மாவட்டங்கள் தங்களுக்குள் போட்டியிட்டு, 48 அம்சங்களில் சமூகப் பொருளாதார குறியீடுகளில் மேம்பாடு காட்ட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு

``பழங்குடியினர் மேம்பாட்டு ஆணையத்தால்'' மேற்பார்வை செய்யப்படும் ``வான் பந்து கல்யாண் திட்டம்'' தேசிய அளவில் தொடங்கப்படும்.

வகை: சிறுபான்மையினர் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

பழங்குடியின மக்கள் நலனுக்காக வான் பந்து கல்யாண் திட்டத்தை (VKY) அரசு 2014ல் தொடங்கியது.

மேலும் விவரங்களுக்கு

பழங்குடியினர் நலண் மற்றும் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது.

வகை: சிறுபான்மையினர் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

நாட்டில் பழங்குடியினர் நலனுக்காக அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களின் கீழ் 2015 வரையில் அரசு ரூ.4792.19 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. 2017ல் அது ரூ.5300.14 கோடியாக அதிகரித்தது. 2018ல் பழங்குடியினர் துணை-திட்டத்தின் (TSP) கீழ் ரூ.7802.94 கோடி ஒதுக்கீடு செய்ய அரசு அறிவிப்பு செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு

இயற்கைப் பேரழிவுகளை சமாளிப்பதற்கு மக்களின் இயற்கை வள அடிப்படைகளை பலப்படுத்துவது.

வகை: சிறுபான்மையினர் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

பேரழிவு ஆபத்துகளைக் குறைப்பது தொடர்பாக ஆசிய அமைச்சரகங்கள் மாநாட்டை 2016ல் பிரதமர் மோதி தொடங்கி வைத்தார்.

மேலும் விவரங்களுக்கு

ராணுவத் தளவாடங்கள் மற்றும் தளங்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் உள்நாட்டுத் தொழில் துறை பெருமளவு பங்கேற்பதற்கு ஊக்கம் தருவது.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

அரசுத் துறை, தனியார் துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (MSME) உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வரைவு பாதுகாப்புத் துறை உற்பத்திக் கொள்கையை 2018ல் அரசு வெளியிட்டது. 2015-17ல் இருந்து 99 இந்திய விற்பனையாளர்களுடனும், 61 வெளிநாட்டு விற்பனையாளர்களுடனும் பாதுகாப்புத் துறை சாதனங்களை வாங்குவதற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் பட்டுள்ளன. பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து, தாயக உற்பத்தித் திறனை அதிகரிப்பதை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்புத் துறை கொள்முதல் நடைமுறைகளில் (DPP) பல திருத்தங்கள் செய்யப் பட்டுள்ளன. ``மேக் இன் இந்தியா'' திட்டத்தை, பாதுகாப்புத் துறை சாதனங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு மற்ற கொள்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அரசின் வழிமுறை வரம்புகளை மாற்றும் வகையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டு (FDI)கொள்கை திருத்தி அமைக்கப் பட்டது.

மேலும் விவரங்களுக்கு

ஊரக வளர்ச்சிக்காக தொழில்நுட்பக் கல்வி நிலையங்களை உருவாக்குவது.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

குவஹாட்டி ஐ.ஐ.டி.யில் ஊரக தொழில்நுட்ப மையம் 2016ல் தொடங்கப்பட்டது. 2014ல் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உன்னத் பாரத் அபியான் திட்டத்தை தொடங்கி, ஐ.ஐ.டி.கள், என்.ஐ.டி.கள், ஐ.ஐ.எஸ்.ஈ.ஆர்.கள் போன்ற உயர் கல்வி நிலையங்களை இணைக்கும் நோக்கில் 2018ல் அதை புதுப்பித்தது. பொருத்தமான தொழில்நுட்பங்கள் மூலம் வளர்ச்சிக்கான சவால்களை சந்திக்கும் உள்நாட்டு வளத்தை பயன்படுத்தும் வகையில் இது செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்களைப் பொருத்தவரை, வெளிநாட்டு நேரடி முதலீட்டுக் கொள்கையை தாராளமயமாக்கியது, தொழிற்சாலைகளுக்கு உரிமங்கள் அளிக்கும் கொள்கைகளை தாராளமயமாக்கியது, ஏற்றுமதி விதிகளை எளிமையாக்கியது உள்பட, கொள்கை அளவில் அரசு சில மாறுதல்களை செய்தது. உள்நாட்டில் வடிவமைத்து, உருவாக்கி, பாதுகாப்பு சாதனங்களை, தளங்களை, முறைமைகளை உருவாக்குவதில், அரசின் `மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிப்பதற்காக விதிமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், பாதுகாப்புத் துறை கொள்முதல் விதிமுறைகள் 2016ல் திருத்தப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு

ஒரே அந்தஸ்துள்ள பதவியில் இருந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம்

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

ஒரே அந்தஸ்துள்ள பதவியில் இருந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம் (OROP) திட்டத்தை மோதி அரசு 2018 ஜூலையில் அறிவித்து, 2014 ஜூலை 1 என முன்தேதியிட்டு அமல் செய்தது.

மேலும் விவரங்களுக்கு

போர் நினைவுச் சின்னம் எழுப்புதல்

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

2019 பிப்ரவரி 25 அன்று இந்தியா கேட் பகுதியில் தேசிய போர் நினைவுச் சின்னத்தை திறந்துவைத்தார் பிரதமர்

மேலும் விவரங்களுக்கு

அறிவியலை பிரபலமயமாக்கலுக்கான திட்டங்களை ஊக்குவித்தல்.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்க, ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த நிதி’ (FIST), ‘பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் சிறப்புத்திறன் ஊக்குவித்தல்’ (PURSE), ‘புதுமை மற்றும் விரிவாக்கத்திற்கான பல்கலைக்கழக ஆராய்ச்சி கழகம்’ (CURIE) மற்றும் ‘அதிநவீன பகுப்பாய்வு கருவி வசதிகள்’ (SAIF) போன்ற திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து வருகிறது. 2004 ஆம் ஆண்டு முதல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான வெளிப்படையான செயல்பாடுகளை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்புக்கான தேசிய கவுன்சில், கவனித்து வருகிறது. அதன்பின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக, இந்த அரசு, புதிய கூறுகள் மற்றும் திட்டங்களைச் சேர்த்துள்ளன. இந்தியாவில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்த, இந்த அரசு, இரண்டு அறிவியல் தொடர்புள்ள முயற்சிகளை மேற்கொண்டுள்ளது; 15 ஜனவரி 2019ல், ‘DD அறிவியல்’ மற்றும் ‘இந்திய அறிவியல்’ என்ற இரு ஒளிபரப்பு சேனல்களை வெளியிட்டுள்ளது.

மேலும் தகவல்கள்

மக்களுக்கு டிஜிட்டல் அதிகாரம் அளிக்கும் தேசியத் திட்டம் தொடங்குதல்

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

பிரதமரின் கிராமப்புற டிஜிட்டல் சக்ஷர்தா அபியான் (PMGDISHA) திட்டத்தை இந்திய அரசு 2017ல் தொடங்கியது. 40% கிராமப்புற வீடுகளுக்கு டிஜிட்டல் வசதிகளை கொண்டு சென்று, டிஜிட்டல் கற்றலை உருவாக்குவது இந்தத் திட்டத்தின் நோக்கம்.

மேலும் விவரங்களுக்கு

`தேசிய பன்முக-திறன் தொலைநோக்குத் திட்டம்' தொடங்குதல்

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

தேசிய தொழில் திறன் மேம்பாட்டு தொலைநோக்குத் திட்டம் 2015ல் தொடங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டுக்குள் புதிய தொழில் திறன்களில் 500 மில்லியன் பேருக்கு பயிற்சி அளிப்பது என்ற இலக்கில் இருந்து இன்னும் வெகு தொலைவில் அரசு இருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு

மூத்த குடிமக்களுக்கு வரி சலுகைகள்

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் உள்ள டெபாசிட்களுக்கு கிடைக்கும் வட்டி வருமானத்துக்கான வரி விலக்கு வரம்பு ரூ.10,000ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. 194A பிரிவின் கீழ் TDS கழிவு பிடிக்கப்பட வேண்டியதில்லை. அனைத்து நிரந்தர வைப்பு நிதிகள் மற்றும் தொடர் வைப்பு நிதிகளுக்கும் இந்தப் பயன்கள் உண்டு.

மேலும் விவரங்களுக்கு

முதியோர் இல்லங்கள் அமைப்பது மற்றும் மேம்படுத்துவதில் முதலீடு செய்தல்.

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

2016-17ல் மொத்தம் 396 முதியோர் இல்லங்களுக்கு மோதி அரசால் மானிய உதவிகள் அளிக்கப் பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு

``மாற்றுத் திறனாளிகள் உரிமை மசோதா (RPWD)'' நிறைவேற்றுதல்

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

21 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சட்டம் 1995-ஐ ரத்து செய்து மக்களவையில் ``மாற்றுத் திறனாளிகள் உரிமை மசோதா -2016'' நிறைவேற்றப் பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

புதுமை சிந்தனை மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக `மாவட்ட அளவிலான அடிப்படை யோசனை மற்றும் விரைவுபடுத்தல் திட்டத்தை' தேசிய அளவில் தொடங்குவது.

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

புதுமை சிந்தனை, தொழில்முனைவு நிலை, வேளாண் தொழில் (Aspire) ஆகியவற்றை ஊக்கப்படுத்துவதற்கான திட்டம் 2015ல் உருவாக்கப்பட்டது. தொழில்முனைவோருக்கான சிந்தனைக மையங்களை உருவாக்குதல் மற்றும் விரைவுபடுத்துதல் இதன் நோக்கங்களாக உள்ளன.

மேலும் விவரங்களுக்கு

சிறப்புத் திறன் பெற்ற குழந்தைகளுக்கு மின்னணு - கற்றல் வசதி

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

வாய்ப்புகள் மிகவும் மறுக்கப்பட்டவர்கள் உள்பட அனைவருக்குமான சிறந்த கற்றல் ஆதார வளங்களை அளிக்கும் வகையிலான ``ஸ்வயம்'' என்ற திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

மாற்றுத்திறனாளிகளுக்கு யுனிவர்சல் அடையாள அட்டைகள்

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் துறையின் முன்முயற்சி காரணமாக தொடங்கப்பட்ட UDID திட்டம், மாற்றுத் திறனாளிகளை அடையாளம் காணுதல் மற்றும் மாற்றுத்திறன் விவரங்களை தெரிவித்தல் என அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்த, யுனிவர்சல் ID & மாற்றுத்திறன் சான்றிதழ்கள் அளிப்பதாக இருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு

மாற்றுத்திறனாளியின் குடும்பத்துக்கு வரிச் சலுகை

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

மாற்றுத்திறனாளி நபர் தங்களை சார்ந்துள்ளவரின் உறவினர்களுக்கு, மாற்றுத்திறன் அளவைப் பொருத்து ரூ.100,000 வவரையில் வரிச் சலுகை அளிக்க வருமான வரிச் சட்டம் 1961-ன் 80 DD பிரிவு வகை செய்கிறது. மிகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர் சார்ந்துள்ள குடும்பத்திற்கு இந்த வரம்பை ரூ.125,000 ஆக உயர்த்தும் வகையில் நிதி மசோதா 2015ல் திருத்தம் முன்மொழிவு செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய விளையாட்டு வீரர்களுக்கு சிறப்புத் திட்டம் உருவாக்குதல்

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்குப் பதக்கம் வென்ற முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்தை 2017 மார்ச் மாதம் இந்திய அரசு அறிவித்தது. 2018 பிப்ரவரியில், ``சிறந்த விளையாட்டு வீரர்களின் ஓய்வூதியத்துக்கான நிதியின்'' கீழ், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் இரட்டிப்பாக்கப் படுவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் அறிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு

`தேசிய விளையாட்டு திறனறி முறையை' தொடங்குதல்

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

`தேசிய விளையாட்டு திறனறி முறைக்கான இணையதளத்தை 2018ல் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார்.

மேலும் விவரங்களுக்கு

விளையாட்டுத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2018 பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு மொத்தம் ரூ.2196.36 கோடி ஒதுக்கீடு செய்தார். 2017ல் இது ரூ.1938.16 கோடியாக இருந்தது.

மேலும் விவரங்களுக்கு

இளம் தலைவர்கள் திட்டம் உருவாக்குதல்

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

2014-15 பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, 2014 டிசம்பரில் தேசிய இளம் தலைவர்கள் திட்டம் (NYLP) அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் இதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

பெண் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது

வகை: பெண்கள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

2015க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்திய காவல் துறையில் பெண்களின் எண்ணிக்கை 123,000-ல் இருந்து 140,000-க்கும் மேல் அதிகரித்தது. இருந்தபோதிலும், மொத்த காவலர்கள் எண்ணிக்கையில் பெண்களின் அளவு வெறும் 8% என்ற அளவில் மட்டுமே இருக்கிறது. அதுவும் பெரும்பாலும் அடிமட்ட நிலையில் (அதிகாரிகள் அல்லாத) பிரிவுகளில் தான் உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு

திராவக வீச்சு தாக்குதலுக்கு ஆளானவர்களுக்காக அரசு நிதி ஏற்படுத்துவது.

வகை: பெண்கள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

பாலியல் துன்புறுத்தல் மற்றும் இதர குற்றச் செயல்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கான நஷ்ஈடு வழங்கும் திட்டம் 2018ல் தொடங்கப்பட்டது. கற்பழிப்பு, திராவக வீச்சு, பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறை உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் இதில் சேர்க்கப் பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு

கற்பழிப்புக்கு ஆளானவர்களுக்கு உதவி செய்வதற்கு அரசு நிதியை செயல்படுத்துதல்.

வகை: பெண்கள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

பாலியல் துன்புறுத்தல் மற்றும் இதர குற்றச் செயல்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கான நஷ்ஈடு வழங்கும் திட்டம் 2018ல் தொடங்கப்பட்டது. கற்பழிப்பு, திராவக வீச்சு, பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறை உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் இதில் சேர்க்கப் பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு

பெண்கள் ஆரோக்கிய திட்டங்களை விரிவுபடுத்துதல்

வகை: பெண்கள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ரொக்க ஊக்கத் தொகையை இந்திய அரசு அறிவித்துள்ளது. 2017 ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து இது அமலுக்கு வந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு

பெண்களுக்கென சிறப்பு தொழில் திறன் பயிற்சி மற்றும் வணிக திட்டமிடல் பூங்கா.

வகை: பெண்கள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

பிரதமரின் கவ்ஷால் விகாஸ் திட்டத்தின் (PMKVY) இரண்டு கட்டங்களில் உன்னதமான மைல் கல்லாக 17.72 லட்சம் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 2015 ஜூலை - 2016 ஜூன் வரையில் 8.63 லட்சம் பேர் பயிற்சி பெற்றதும் இதில் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு

பெண்கள் பாதுகாப்புக்கு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்

வகை: பெண்கள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

இந்திய அரசு Umang app -ஐ தொடங்கியுள்ளது. கல்வி உதவித் தொகைகள், பெண்கள் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம், மின்னணு-மாவட்டம், பாஸ்போர்ட் சேவை மற்றும் பிற விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன. ஒட்டுமொத்தமாக, மத்திய, மாநில அரசுகளின் 100க்கும் மேற்பட்ட சேவைகள் ஒரே தளத்தில் கிடைக்கும். பயனாளர்கள் 12 வெவ்வேறு மொழிகளில் இதைப் பயன்படுத்த முடியும்.

மேலும் விவரங்களுக்கு

பெண் குழந்தைகள் மீது கவனம் செலுத்தும் ஒரு திட்டத்தை உருவாக்குதல்.

வகை: பெண்கள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

2015-ல் தொடங்கப்பட்ட Beti Bachao Beti Padhao இயக்கம் (BBBP), குறைந்துவரும் குழந்தைகள் பாலின விகித (CSR) பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் தொடர்பான விஷயங்கள் பற்றியும், மனப் போக்கை மாற்றுவது மற்றும் பெண் குழந்தைகளுக்கு மதிப்பை உருவாக்குவதும் இதில் அடங்கும். 2014-15ல் இந்தத் திட்டத்துக்கு ரூ.1337.49 லட்சம் ஒதுக்கப்பட்டது. 2017-18ல் இது ரூ.3298.84 லட்சமாக (உத்தேசம்) உயர்ந்திருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டி விகிதம் குறைவு.

வகை: பெண்கள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் வட்டி தள்ளுபடி திட்டத்தை 2016 ஆகஸ்ட் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன் மூலம் 250 மாவட்டங்களில் வருடாந்திர வட்டி விகிதம் 7% என்ற நிலைக்கு குறையும். இந்தத் திட்டம் கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கும், தேசிய ஊரக வாழ்வாதார தொலைநோக்குத் திட்டமான தீன்தயாள் அந்தோயதயா திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கும் மட்டும் அமலாகும்.

மேலும் விவரங்களுக்கு

தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய்களின் உற்பத்தியை ஊக்குவித்தல்

வகை: சிறுபான்மையினர் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

பருப்பு வகைகள், தானியங்கள் மற்றும் அத்தியாவசிய சமையல் எண்ணெய்களின் உற்பத்தியை மேம்படுத்த உள்ள அமைப்புகளான தேசிய உணவு பாதுகாப்பு நிறுவனம் மற்றும் எண்ணெய் வித்துக்கள் மற்றும் பனை எண்ணெய் பற்றிய தேசிய திட்டங்களை இந்த அரசு தொடர்ந்தது. அறிவிக்கப்பட்ட காரீப் மற்றும் ரபி பயிர்களுடன் பருப்பு வகைகள் உட்பட மற்ற வணிக ரீதியான பயிர்களுக்கு உண்டான குறைந்தபட்ச ஆதரவு விலையினை இந்த அரசு கூட்டியது.

மேலும் தகவல்கள்

சமுதாய சுகாதாரத் திட்ட தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியம் அளித்தல்

வகை: பெண்கள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

அங்கன்வாடி மற்றும் ஆஷா தொழிலாளர்களுக்கு சுமார் 50% ஊதிய உயர்வு அளிக்கப்படுவதாக 2018 செப்டம்பரில் நிதியமைச்சகம் அறிவித்தது. அந்த ஆண்டு அக்டோபரில் இருந்து அது அமல் செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

மகளிருக்கான சிறப்பு வணிக மேம்பாட்டு மையம்

வகை: பெண்கள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான ஆன்லைன் முனையமாக Udyam Sakhi -யை 2018 மார்ச் 8 ஆம் தேதி அரசு தொடங்கியது.

மேலும் விவரங்களுக்கு

Beti Bachao - Beti Padhao திட்டம் தொடங்குதல்

வகை: பெண்கள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்' (Beti Bachao - Beti Padhao) திட்டம் 2015ல் தொடங்கப்பட்டது. குறைந்து வரும் குழந்தைகள் பாலின விகிதம் (CSR) பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மற்றும் பெண் குழந்தை கல்விக்கு உதவி செய்வது ஆகியவை இதன் நோக்கங்கள்.

மேலும் விவரங்களுக்கு

ஊனமுற்றோரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல்

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

2017 ஏப்ரலில், மாற்று திறனாளிகளின் உரிமை சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு, ஒன்பது மாதங்களுக்கு பிறகு, அவர்களை வேலையில் அமர்த்துவதற்கான விதிகளையும், மன இறுக்கம், கீழ் நோய்க்குறி மற்றும் அறிவுசார் குறைபாடுகளை கொண்டவர்களுக்கு, 3% முதல் 4% வரை அரசு வேலைகளுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்தும், அறிவித்தது.

மேலும் தகவல்கள்

தொழில்முறை கல்வி தகுதிகளை சமநிலைபடுத்துதல்

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள ‘திறன் இந்தியா’ என்ற திட்டத்தின் மூலம், கடந்த மூன்று ஆண்டுகளில், 2.5 கோடி மக்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

மேலும் தகவல்கள்

ஆளில்லா ரயில்வே கடவுகளை அகற்றுவது.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

செப்டம்பர் 2018ல், ஆளில்லா ரயில்வே கடவு பாதைகளின் எண்ணிக்‍கையை, அரசு, 1,300-ஆக அதிரடியாக குறைத்தது. ஆறு மாதங்களுக்கு முன்னர், அதன் எண்ணிக்கை 3,400-க்கும் அதிகமாக இருந்தது. ஆளில்லா ரயில்வே கடவு பாதைகளின் எண்ணிக்‍கையை குறைக்‍கும் வகையில், ஆட்கள் நியமிக்‍கப்பட்டதுடன், பிற இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்‍கப்பட்டன அல்லது கடவு பாதைகள் மூடப்பட்டன. இறுதி ஆளில்லா ரயில்வே கடவு பாதையும் 2019 ஜனவரியில் ஒழிக்‍கப்பட்டது.

மேலும் தகவல்கள்

சுத்திகரிப்பு எரிபொருட்களை ஊக்குவித்தல்

வகை: சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், 2015ல், எத்தனால் எரிபொருள், எத்தனால் வாகனங்கள் விஸ்தரிப்பு ஜிஎஸ்ஆர் 412(E) ஆகியவற்றிற்கான தரநிலைகளை அறிவித்தது. 2015ம் ஆண்டுமுதல், நாட்டில் மின்சார மற்றும் கலப்பின வாகன தொழில் நுட்பத்தை ஊக்‍குவிக்‍கும் விதமாக, FAME-India (இந்தியாவில் மின்சார மற்றும் கலப்பின வாகன தொழில்நுட்பத்தை வேகமாக முன்னெடுக்‍க) முதல்கட்ட திட்டத்தை, கனரக தொழில்துறை நடைமுறைப்படுத்தியது. 2015ம் ஆண்டில், தேசிய சுத்திகரிப்பு ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலுக்‍கு ரூ.5,234.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2017ம் ஆண்டில் அது ரூ.7,342.8 கோடியாக உயர்த்தப்பட்டது. எரிபொருள் சுத்திகரிப்புக்காக, 2017ம் ஆண்டு, போர்ச்சுகல் உடன் அரசாங்கம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அரசு பின்பற்றும், 2010ம் ஆண்டின் ஜவஹர்லால் நேரு நேஷனல் சோலார்திட்டம் (JNNSM), சூரியஒளி ஆற்றலை ஒன்று திரட்டவும்/பயன்படுத்தவும் ஊக்‍குவிக்‍கிறது,

மேலும் தகவல்கள்

பசுமை கட்டிடங்கள் மற்றும் ஆற்றல்மிக்க பணியிடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

வகை: சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

ஆற்றல் மற்றும் வளங்கள் அமைப்பு உண்டாக்கிய, ஒருங்கிணைந்த வாழ்வாதாரத்திற்கான பசுமை மதிப்பீடு, பசுமை கட்டடங்களுக்கான தேசிய மதிப்பீட்டு முறையாக, 2007ம் ஆண்டு, அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் சமீபத்திய மாற்றம் 2015ம் ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. நகரங்களின் நிலையான வளர்ச்சிக்கான, பசுமை கட்டட தேசிய மதிப்பீட்டு முறை 2018-ம் ஆண்டில் கட்டமைக்கப்பட்டது. எரிசக்தி செயல்திறமிக்க கட்டிடங்கள் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல்களை, ஆற்றல் செயல்திறன் அமைப்பு, 2017-ம் ஆண்டில் வெளியிட்டது. 2016ம் ஆண்டின் சட்டப்படி, வீட்டு வசதி மற்றும் நகர விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட மாதிரி கட்டிடம், பசுமை கட்டடங்களுக்கான பல்வேறு விதிமுறைகளை ஆதரிக்கிறது.

மேலும் தகவல்கள்

ஏலம் உள்ளிட்ட திறமையான வழிமுறைகள் மூலம் விலைமதிப்பற்ற வளங்களின் விற்பனையை செயல்படுத்துதல்.

வகை: சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

சுரங்கங்கள் மற்றும் கனிம வளர்ச்சி ஒழுங்குமுறைச் சட்டம் 1957ல், 2015ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. ஏல செயல்முறை விதிமுறைகளை வகுக்க, சுரங்கத் துறை அமைச்சகம், 2015ம் ஆண்டில், கனிம ஏல விதிகளை அறிவித்தது. ஏல விதிகள் 2017ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டன. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு, வெளிப்படையான ஏலத்தின் மூலம் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.

மேலும் தகவல்கள்

புதிய நீதிமன்றங்களைத் திறக்க அதிக முன்னுரிமை அளித்தல் மற்றும் தேங்கியுள்ள வழக்‍குகளை விரைந்து முடிக்‍க நெறிமுறை வகுத்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

24 உயர்நீதிமன்றங்களில், ஐந்து ஆண்டுகளுக்‍கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்‍குகளை முடித்துவைக்‍க, 2015ம் ஆண்டு குழுக்‍கள்அமைக்‍கப்பட்டன. 2017ஆம் ஆண்டில் நியாயா மித்ரா திட்டத்தை அரசு தொடங்கியது, அதில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்துவைக்‍க, ஓய்வு பெற்ற நீதிபதிகள், நியாயமித்ரர்களாக நியமிக்கப்பட்டனர். 1993-94ல் துவக்‍கப்பட்ட, நீதித்துறைக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு திட்டத்திற்கு, 2019ம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி வரை ரூ.6,670.12 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு 15,818ஆக இருந்த நீதிமன்ற அறைகள், 2019 பிப்ரவரி மாதம் 18,796 ஆக அதிகரித்துள்ளன. 2,925 நீதிமன்ற அறைகளுக்‍கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2017- 2020ம் ஆண்டுகளில் இத்திட்டத்தை தொடர, மத்திய அரசு, ரூ.3,320 கோடி கூடுதல் நிதிக்‍கு அனுமதி அளித்துள்ளது.

மேலும் தகவல்கள்

தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்புகள் மாணவர்களுக்‍கும் கிடைக்‍க செய்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

பொதுமக்‍கள் விலையின்றி இலவசமாக கற்றல் வளம் பெற, தேசிய டிஜிட்டல் நூலகம் 2018, இளைஞர்கள், வலைதளங்கள் மூலம் கல்வி கற்கும்(SWAYAM) 2016 திட்டம் ஆகியவற்றை அரசு உருவாக்கியது. மெட்ரிகுக்‍கு முந்தைய மற்றும் பிந்தைய நிலைகளில் உள்ள மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை திட்டத்தை, அரசு நடைமுறைப்படுத்தியது. பிற தொழில்நுட்பங்களான மின்-ஆளுமை இணையதளங்கள், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்‍களுக்‍கு இலவசமாக கிடைக்‍கப் பெறுகிறது. இந்தத் திட்டங்கள் அனைத்தையும் மாணவர்கள் மட்டுமன்றி பொதுமக்‍களும் பெறுகின்றனர்.

மேலும் தகவல்கள்

டெலி மருத்துவம் மற்றும் மொபைல் சுகாதார சேவைகளைப் பயன்படுத்த கிராமப்புற இணைய மற்றும் தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் பணி முறையை தொடர்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்(MeitY), 2018ம் ஆண்டு, டிஜிட்டல் கிராமம் (DigiGaon) திட்டத்தை அங்கீகரித்தது. தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மூலம் மருத்துவம் மற்றும் கல்வி சேவை, எல்.இ.டி. விளக்‍குகள், வைஃபை, தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளின்(GPs) திறன் மேம்பாடு ஆகியவை இந்த திட்டத்தின் முக்‍கிய நோக்‍கங்கள். இத்திட்டம், 30 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 1050 கிராம பஞ்சாயத்துகளில் அமல்படுத்தப்பட உள்ளன. 2017-18 நிதியாண்டிற்கான இத்திட்டத்தை செயல்படுத்த டெலி மருத்துவத்தின் கீழ் ரூ.12.95 கோடி நிதிக்‍கு ஒப்புதல் அளிக்‍கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்கள்

குஜராத்தின் 'ஈ-கிராம், விஷவா கிராம்' திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

குஜராத் மாநிலத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வழங்க, 2003ம் ஆண்டில் 'ஈ-கிராம் விஷவகிராம்' திட்டம் தொடங்கப்பட்டது. 2017ம் ஆண்டில் பாரத இணைய திட்டத்தின் இரண்டாம் கட்டம் (ஆரம்பத்தில் தேசிய ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் என அழைக்கப்பட்டது), நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளையும் (சுமார் 2,50,000), பிராட்பேண்ட் மூலம் இணைக்க அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் தகவல்கள்

திறந்த மூல மற்றும் நிலையான மென்பொருளை மேம்படுத்துதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

2015ம் ஆண்டில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை(DeitY), இந்திய அரசாங்கத்திற்காக திறந்த மூல மென்பொருள் திட்டத்தை ஏற்றுக்‍கொள்வதாக அறிவித்தது.

மேலும் தகவல்கள்

காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளும் ஆராய்ச்சியை ஊக்குவித்தல்

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

இயற்கை பேரிடர் மேலாண்மைக்கு இஸ்ரோ தொழில்நுட்ப ரீதியில் உதவிகளை வழங்கி வருகிறது. பருவநிலை மாற்றகளால் ஏற்படும் சுகாதார பாதிப்புகளை குறைக்க 2015 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதார அமைப்பு உருவாக்கப்பட்டது.

வணிகச் சட்டங்களை உள்ளடக்கிய வழக்குகளுக்கு விரைவு நீதிமன்றங்களை அமைத்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

வணிக நீதிமன்றங்கள், வர்த்தக பிரிவு மற்றும் உயர் நீதிமன்றங்களின் வணிக மேல்முறையீட்டு பிரிவு சட்டம் 2015ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு, 2018ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டம், மாவட்ட அளவில் வணிக நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்களில் வணிகப் பிரிவுகள் ஆகியவற்றை அமைக்‍க வழி வகுக்‍கிறது. 2017 டிசம்பரில், நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், 247 வணிக நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என மாநில அரசுகள் அறிவித்தன.

மேலும் தகவல்கள்

அர்ப்பணித்த தொழிலாளர்கள் வங்கி உருவாக்குதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

தொழிலாளர்க வருங்கால வைப்பு நிதி மற்றும் மத்திய தொழிலாளர் நலத்துறை மூலம் ஒரு துணைக்குழு அமைக்கப்பட்டது.

வீடு மற்றும் நிறுவனங்களுக்கு எரிவாயு கிடைப்பதை உறுதி செய்யும் திட்டம்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

இயற்கை எரிவாயு குழாய் இணைப்புகள் சுமார் 16788 கிலோ மீட்டர் வரை அமைக்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக 13105 கிலோ மீட்டர் தொலைவை இணைக்க அரசு முடிவெடுத்தது. 2016 வீடுகளுக்கு சமையல் எரிவாயு கிடைக்கும்வ கையில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது.

எல்லை மற்றும் கடற்கரையோரங்களில் நெடுஞ்சாலை அமைத்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

நெடுஞ்சாலை பணிகளை துரிதப்படுத்த இந்திய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதி, முதலீட்டாளர்கள் உள்ளிட்டவை குறித்து பரிசீலனை செய்யும்.

பொது இடங்களில் வைபை வசதி

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

பொது இடங்களில் வைபை வசதி ஏற்படுத்தும் திட்டம் 2017ல் கொண்டு வரப்பட்டது. 2,50,000 கிராம பஞ்சாயத்துகளில் வைபை வசதி செய்து தரப்பட்டது. 2019 மார்ச் 3ரை மேலும் 1 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் வைபை ஏற்படுத்தப்பட்டது.

நகரங்களில் துப்புரவு மதிப்பீடுகள் அறிமுகப்படுத்துதல்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

2016ல் சுவாச் சுர்வேக்ஷம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நகரங்களில் மேற்கொள்ளப்படும் துப்புரவு பணிகளை கண்காணிக்கும். அவற்றிக்கு மதிப்பளித்து நகரங்கள் பட்டியல் வெளியிடப்படும்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழித்தல்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

2017 ஆம் ஆண்டு போஷன் அபியான் திட்டம் தொடங்கப்பட்டது. ஊட்டச்சத்தின்மையை ஒழிக்கும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தரவு பகுப்பாய்வு மையம்

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: நிறைவேற்றப்பட்டு விட்டது

தேசிய தகவல் மையம் மூலம் தரவுகள் பகுப்பாய்வு மையம் 2018ல் அமைக்கப்பட்டது. இதன்மூலம், பகுப்பாய்வில் துரிதமான நுட்பத்திற்கு அரசு விரைவாக அடையும்.

அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கச் செய்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

SDG-களை நிறைவு செய்வது தொடர்பாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து 2018ல் அரசு அளித்த தகவலின்படி நாட்டில் 56% மக்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் வசதி கிடைப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.தேசிய ஊரகப் பகுதி குடிநீர் திட்டத்தின் (NRWDP) மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

அதிவேக ரயில் நெட்வொர்க் (புல்லட் ரயில்) மூலம் வைர நாற்கரச் சாலைத் திட்டம் - தொடங்குதல்

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

இப்போதைக்கு நாட்டில் மும்பை - ஆமதாபாத் ரயில் வழித்தடம் மட்டுமே அதிவேக ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. நாட்டில் மெட்ரோபாலிடன் நகரங்கள் மற்றும் வளர்ச்சி மையங்ளை (டெல்லி, மும்பை, சென்னை & கொல்கத்தா) இணைக்கும் வைர நான்குவழித் திட்டத்தை ஆறு வழித்தடங்களில் செயல்படுத்த, அதிவேக ரயில் தொடர்பு ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

சிறந்த பாரம்பரியங்களைத் தேர்வு செய்து அவற்றை நவீன காலத்துக்கு ஏற்ப இணக்க நிலையை ஏற்படுத்தி, அனைத்து பெண்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் ஒரே மாதிரியான பொது சிவில் சட்ட வரைவை உருவாக்குவது.

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

பொதுவான சிவில் சட்டம் உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு சட்ட ஆணையத்தின் ஒரு குழுவை 2016 ஜூலையில் அரசு கேட்டுக் கொண்டது. 2018ல் சட்ட ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில் பொது சிவில் சட்டம் தேவையற்றது என்று கூறியது. பாஜக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்து, முத்தலாக் முறைக்கு தடை விதித்தது.

மேலும் விவரங்களுக்கு

MSME துறையில் ஏற்றுமதிகளுக்கு சர்வதேச இணைப்புகளை ஏற்படுத்தித் தருதல்

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

சர்வதேச அளவில் MSME துறை போட்டி நிலைக்குத் தகுதி பெற உதவக் கூடிய வகையிலான முந்தைய திட்டங்களை பாஜக அரசு தொடர்ந்து செயல்படுத்தியது. ஏற்றுமதியில் இந்தத் துறைக்கு உதவும் வகையில் சில சட்டங்களை உருவாக்கியது. 12வது திட்ட காலத்தில் சர்வதேச ஒத்துழைப்புத் திட்டத்தை ரூ.24 கோடி திட்டச் செலவினத்துடன் அரசு தொடர்ந்து அமல் படுத்தியது. 2005ல் உருவாக்கப்பட்ட தேசிய உற்பத்தி போட்டிநிலைத் திட்டம் (NMCP), இந்திய MSME-களுக்கு இடையில் உலகளாவிய போட்டி நிலையை மேம்படுத்தும் வகையில் உள்ளது. சர்வதேச தர நிலைகளை எட்டும் வகையில் தொழில்நுட்ப உதவிகளை மேம்படுத்துதல், சந்தைப்படுத்தல் உதவி, குறு & சிறுதொழில் உற்பத்தி நிறுவனத்தினர் சர்வதேச வர்த்தகக் கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளில் பங்கேற்க பயணம் செல்வதற்கு உதவி செய்தல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும் வகையில் பல திட்டங்கள் இதில் ஒன்று சேர்க்கப் பட்டுள்ளன. உலகளாவிய சந்தையில் அதிகளவில் போட்டியில் பங்கேற்க உதவும் வகையில் MSME ஏற்றுமதியாளர்களுக்கு, கட்டுபடியாகும் அடிப்படையில் கடன் வசதி அளிப்பதை நோக்கமாகக் கொண்டு 2015 ஆம் ஆண்டில் வட்டி சமன்படுத்தும் திட்டத்தை அரசு தொடங்கியது.

மேலும் விவரங்களுக்கு

பெரிய அளவிலான திட்டங்களுக்கு சிறுதொழில் நிறுவனங்களிடம் இருந்து கட்டாயமாக பொருட்களை வாங்கும் அளவை அதிகரிக்க கொள்கை அளவில் ஆதரவு அளிப்பது.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

மத்திய பொதுத் துறை நிறுவனங்களுக்கு சிறுதொழில் நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் வாங்குவதைக் கண்காணிக்கும் திட்டத்தை அமல் செய்வதற்கு 2017 டிசம்பரில் ``MSME சம்பந்த்'' என்ற அரசு கொள்முதல் முனையத்தை அரசு தொடங்கியது. 2012ல் உருவாக்கப்பட்ட கொள்முதல் கொள்கையின்படி, குறு மற்றும் சிறுதொழில் நிறுவனங்களிடம் இருந்து மத்திய அமைச்சகங்கள்/ துறைகள்/ பொதுத் துறை நிறுவனங்கள் முதலாவது ஆண்டில் எவ்வளவு பொருட்களை வாங்கியாக வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அனைத்து மத்திய அரசுத் துறைகள் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் இந்தக் கொள்கை அமலாக்கம் குறித்து 2016ல் அரசு ஆய்வு செய்தது. சிறுதொழில் நிறுவனங்களிடம் இருந்து 20% அளவுக்கு கட்டாயமாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நிலையில், உண்மையான கொள்முதல் 10% விடக் குறைவாக இருந்ததாக அப்போது கண்டறியப்பட்டது. 2018 நவம்பர் 9 ஆம் தேதியில் இருந்து பெண்களுக்குச் சொந்தமான சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து ஆண்டுக்கு 3 சதவீதம் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விதி அமல் செய்யப் படுகிறது.

மேலும் விவரங்களுக்கு

பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தல், நீண்டகால தேவையுள்ள கட்டமைப்பு சீரமைத்தலில் முதலீடு செய்தல், கடுமையான விதிமுறைகள் மற்றும் எச்சரிக்கை முறைமைகளை உருவாக்குதல்.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

இந்திய ரயில்வேயில் விபத்துகளைத் தடுப்பது மற்றும் ரயில்வே துறையில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு ரயில்வே அமைச்சகம் 2018 ஆம் ஆண்டில் நான்கு பாதுகாப்பு முன்முயற்சிகளை மேற்கொண்டது. 2018-19ல் இருந்து எல்.எச்.பி. வடிவமைப்பு பிரதான ரயில் பெட்டிகள் தயாரிப்புக்கு முழுமையாக மாறுவது என்று இந்திய ரயில்வே முடிவு செய்தது. 2017-18 ஆம் ஆண்டில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டில் 104 என்ற எண்ணிக்கையில் இருந்து, 73 ஆகக் குறைந்துள்ளது. முக்கிய பாதுகாப்புப் பணிகளுக்கான ரயில்வே தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, 2017 ஆம் ஆண்டில் இருந்து அரசு ஆர்.ஆர்.எஸ்.கே. என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி செலவிடும் வகையில் தொகுப்பு நிதி உருவாக்கப் பட்டுள்ளது. கூடுதல் பட்ஜெட் ஆதாரத்தில் இருந்து இந்திய ரயில்வே கூடுதல் நிதியைப் பெறுகிறது. 2015-16ல் இருந்து 2018-19 (BE) வரையில் EBR (IF) மூலம் இந்திய ரயில்வே ரூ.68107 கோடி திரட்டியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

குடிமக்கள் - அரசுக்கு இடையில் இடைமுக விருப்ப ஒதுக்கீட்டைக் குறைக்கும் வகையில் மின்னணு - நிர்வாக வசதி ஏற்படுத்துதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

அனைத்து அரசு சேவைகளும், தொழில்நுட்பம் மூலமாக மக்களுக்கு கிடைக்கும் வகையில் அரசு தேசிய மின்னணு-நிர்வாக (NeGP) திட்டத்தை 2006ல் தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் லட்சிய நோக்குடைய 31 திட்டங்களை (MMP-கள்) இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு

ஆராய்ச்சி, மேம்பாட்டில் ஆதரவு மற்றும் மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில், கண்டுபிடிப்புகள்.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

அமைச்சகத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது தான். 2010 ஆம் ஆண்டு முதல், MSME களில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு முயற்சிகளை ஊக்குவிக்க, அது தொடர்பான தேசிய விருதுகளை அமைச்சகம் இயக்கி வருகிறது. 2014ல், 451 விருது விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2016ல், 939 விருது விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மேலும் தகவல்கள்

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை உறுதி செய்தல்.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

தொழில்நுட்பம், தொழில் திறன் மேம்பாடு ஆகியவற்றைக் கண்காணிக்க குறு & சிறு தொழில் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்தை (MSE-CDP) குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் அமல் செய்து வருகிறது. குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் தொழில்நுட்ப பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கு கடனுடன் இணைந்த முதலீட்டு மானியத் திட்டத்தை (CLCSS) அரசு தொடர்ந்து அமல் செய்கிறது. இதன்படி நன்கு நிரூபிக்கப்பட்ட, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு இதன் மூலம் 15 சதவீத முதலீட்டு மானியம் அளிக்கப் படுகிறது. குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவு தருவதற்காக, தொழில்நுட்ப மையங்களை (TC-கள்) மேம்படுத்துவது மற்றும் புதிதாக உருவாக்குவதன் மூலம் ``தொழில்நுட்ப மைய முறைமைகள் திட்டம் (TCSP)''-யை அமைச்சகம் தொடங்கியுள்ளது. குறு மற்றும் சிறு தொழில் துறையில் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையை ஊக்குவிப்பதற்காக ``குறு மற்றும் சிறுதொழில் துறையில் தகவல் தொழில்நுட்ப வசதிகளை ஊக்குவிப்பது'' குறித்த வழிகாட்டுதல்களை பாஜக அரசு திருத்தி அமைத்துள்ளது. சிறுதொழில் நிறுவனங்களல் தொழில்நுட்பத்தை தரம் உயர்த்துவதற்காக தேசிய உற்பத்தி போட்டிநிலை திட்டத்தின் (NMCP) கீழ் வடிவமைப்பு கிளினிக் திட்டம் மற்றும் காத்தல் திட்டம், தொழில்நுட்பம் மற்றும் தரம் உயர்த்துதல் திட்டம் (TEQUP) ஆகியவற்றையும் அமைச்சகம் அமல் செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு

இந்தியப் பல்கலைக்கழகங்களில் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காக, உயர்பதவிகளுக்கான நியமனங்களை வெளிப்படைத் தன்மையுடன் செய்யும் வகையில் வழிமுறைகளை உருவாக்குவது.

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் இதர கல்வி அலுவலர்கள் நியமனத்துக்கான குறைந்பட்ச கல்வித் தகுதிகள் குறித்து வரைவுத் திட்டம் ஒன்றை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) முன்வைத்துள்ளது. பொதுவெளியில் உயர்கல்வி ஒழுங்குமுறைகள் தரப்படுத்தலை உருவாக்குவது மற்றும் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்வைத்தது. பல்கலைக்கழகங்களில் பணியாளர்களின் பல்வேறு நிலைகளை உயர்த்துவதற்கான வரம்புகளையும் அது உருவாக்கியது.

மேலும் விவரங்களுக்கு

பிரத்யேகமான SME வங்கி மூலம் கடன் கிடைப்பதை உறுதி செய்தல்

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

பிரத்யேகமான SME வங்கி எதுவும் உருவாக்கப்படவில்லை. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும் வகையில் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளன. சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் கடன் தொகை ஆண்டுக்கு ஆண்டு 20% வளர்ச்சி அடைய வேண்டும் என்றும், MSE-க்களுக்கான கடன்களில் 60% அளவுக்கு குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், குறுந்தொழில் நிறுவனங்களுக்கான கடன் கணக்குகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 10% வளர்ச்சி காண வேண்டும் என்றும் வர்த்தக வங்கிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு MSME கிளையாவது பிரத்யேகமாக அமைக்கப்பட வேண்டும் என்று வங்கிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கப் பட்டுள்ளது. MSME-க்களின் தாமத பட்டுவாடா பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக Trade Receivables Discounting System (TReDS) அமைக்கப் பட்டுள்ளது. MSME-க்களுக்கு கடன் கிடைப்பதை எளிதாக்குவதற்காக கடன் உத்தரவாதத் திட்டத்தை அரசு புதுப்பித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு

வியாபாரத்தை தொடங்குவதற்கு, பல உரிமங்களைப் பெற சில்லறை மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களும் தங்கள் நேரம் மற்றும் பணத்தை செலவழிக்க வேண்டியதில்லை என்பதை உறுதி செய்யவும், சிறிய வர்த்தகர்கள் துன்புறுத்தப்படுவதை தவிர்ப்பதற்கு ஒரு முறையான அமைப்பு இருக்கும்.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

உலக வங்கியின் கணக்குப்படி, 2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஒரு தொழிலை துவங்குவதற்கான மதிப்பெண் 80.96 ஆகும். இது, 2018ல் இருந்ததை விட 7% உயர்ந்துள்ளது. 2015 முதல் சிறிய மற்றும் மைக்ரோ வணிக நிறுவனங்களுக்கு, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டத்தின் கீழ், கடன் தொகை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் ரூ. 4857.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை 2017 ல் ரூ. 9459.97 கோடியாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி.யின் அறிமுகத்துடன், சிறிய வணிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். ஆனால், நாட்டில் வணிகங்களைச் சுலபமாக செய்வதற்கு அரசாங்கம் தொடர்ந்து அச்சட்டத்தின் நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டே வருகிறது.

மேலும் தகவல்கள்

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளில் இணக்கமான சூழ்நிலையை உருவாக்க, அதற்கான வரையறை கொள்கைகளை மறு ஆய்வு செய்தல்

வகை: பொருளாதாரம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

அமலாக்கத்தில் இருந்த கொள்கைகளை மேம்படுத்துதல் மற்றும் திருத்துதல் மூலமாக, முதலீடுகளை இந்நாள் வரையில் தக்க வைத்துக் கொள்ள அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) ஊக்குவிப்பதற்காக, 2018ல் அந்தக் கொள்கையில் திருத்தங்கள் செய்வதற்கு அரசு ஒப்புதல் அளித்தது. முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2013-2014ல் பெறப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடு 36,046 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அது 2017-18ல் 61,963 டாலர்களாக (உத்தேச அளவு) உயர்ந்தது. முதலீட்டுக்கு வசதி செய்தல், தொழில் திறன் வளர்ச்சியை மேம்படுத்துதல், புதுமை சிந்தனைக்கு உத்வேகம் தருதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, 2014ல் அரசு மேக் இன் இந்தியா திட்டத்தைத் தொடங்கியது.

மேலும் விவரங்களுக்கு

குழந்தைகள் பள்ளிகளுக்கு புத்தகங்களை தினமும் சுமந்து செல்லும் சுமையைக் குறைக்க தொழில்நுட்பத்தின் மூலமான வழிகளை ஆராய்வது.

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

மேலும் விவரங்களுக்கு

மதரஸாக்களுக்கு தேசிய நவீனமயமாக்கல் திட்டத்தைத் தொடங்குவது

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

மதரஸாக்களில் தரமான கல்வி அளிக்கும் திட்டம் (SPQEM) நாடு முழுக்க மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகள் மூலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அறிவியல், கணிதம், சமூக அறிவியல், இந்தி, ஆங்கிலம் போன்ற பாடங்கள் மூலம் மதரஸாக்கள் மற்றும் மக்தப்கள் போன்ற பாரம்பரிய கல்வி நிலையங்களில் நவீன கல்வியை அறிமுகம் செய்வதை ஊக்குவிப்பதற்கு SPQEM நிதி உதவி அளிக்கிறது. இருந்தபோதிலும் இந்தத் திட்டம் இப்போதைய அரசால் தொடங்கப்படவில்லை. இத் திட்டத்தை நவீனமயமாக்க 2014 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு குறித்த காலத்தில் ஊதியம் தருவதில்லை என்று புகார்கள் கூறப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு

மாணவிகள் படிப்பைத் தொடரவும், பள்ளிக் கல்வியை முடிக்கவும் உதவி செய்தல்.

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

Beti Bachao Beti Padhao திட்டம் 2015ல் தொடங்கப்பட்டது. குறைந்து வரும் குழந்தைகள் பாலின விகித (CSR) பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை உறுதி செய்வதும் இதன் நோக்கங்கள். இது தொடர்ந்து செயல்படும் நடைமுறை. 2009-10 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, தொடக்கப் பள்ளிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது என்று 2018ல் மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு அளித்த பதிலில் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு

உற்பத்தித் துறையில் போட்டி நிலையை அதிகரிக்கச் செய்வதற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீடுகளுக்கு ஊக்கம் தருதல் மற்றும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான அரசு செலவை அதிகரிக்கச் செய்தல்.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.70% அளவுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக இந்தியா செலவிடுகிறது. இது சீனாவில் 2.05%, கொரியாவில் 4.29%, ஜப்பானில் 3.58%, அமெரிக்காவில் 2.73% என்ற அளவில் உள்ளது. சமூக பொறுப்புள்ள ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கு, 2014ல் தாக்கத்தை ஏற்படுத்தும் புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் (IMPRINT), 2015-ல் உச்சட்டர் அவிஷ்கர் திட்டம் (UAY) ஆகியவற்றை அரசு தொடங்கியது. IMPRINT திட்டம் உயர் கல்வி நிலையங்களில் ஆராய்ச்சிகள் குறித்து கவனம் செலுத்துகிறது. 2016-17ல் தொடங்கி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இதற்கு ரூ.487.00 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. தொழில் துறையால் முன்னெடுக்கப்பட்ட, பலன் தரக் கூடிய வகையிலான ஆராய்ச்சித் திட்டங்களை ஊக்குவிப்பதாக UAY இருக்கிறது. இதற்கு 2016-17ல் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.475.00 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. பாஜக அரசு 2014ல் தேசிய உற்பத்தி போட்டிநிலை திட்டத்தை (NMCP) அறிவித்தது. உற்பத்தித் துறையில் போட்நிலையை அதிகரிக்கும் வகையில், சாதாரண உற்பத்தி போட்டிநிலைத் திட்டம், உற்பத்தித் துறையில் தகவல் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் திட்டம் போன்றவற்றை மத்திய அரசு அமல் செய்தது.

மேலும் விவரங்களுக்கு

பள்ளிக் கல்வி நடைமுறைகளை மறுஆய்வு செய்வது

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

தேசிய கல்விக் கொள்கைக்கான (NEP) புதிய வரைவு தயாராக இருப்பதாகவும், `விரைவில் எந்த நேரத்திலும்' அது மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றும் 2018 டிசம்பரில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு

குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் நோய்த் தடுப்பில் கவனம் செலுத்துதல்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் இந்திரதனுஷ் திட்டம், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது. 2014ல் இருந்து நான்கு கட்டங்களாக உயிர்காக்கும் தடுப்பு மருந்துகள் 25.3 மில்லியன் குழந்தைகளுக்கும், 6.8 மில்லியன் கர்ப்பிணிகளுக்கும் அளிக்கப் பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

இந்திய மருத்துவ முறைகளுக்கும் (ISM), நவீன அறிவியல் மற்றும் ஆயுர்ஜெனோமிக்ஸ் என ஒருங்கிணைந்த பாடத் திட்டங்களை உருவாக்குதல். இந்திய மருத்துவ முறைகளுக்கான கல்வி நிலையங்கள் உருவாக்குதல்.

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

AYUSH துறைக்கான இணை அமைச்சர் 2019 ஜனவரி 7-ல் இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய கமிஷன் மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இந்திய மருத்துவத் துறையில் கல்வியில் சீர்திருத்தங்களைக் கொண்டுவதை நோக்கமாகக் கொண்டு இந்த வரைவு இருக்கிறது. AYUSH அமைச்சகத்தின் வருடாந்திர அறிக்கைகளின்படி, இந்திய மருத்துவத்துக்கான மத்திய கவுன்சில் மூலம் அளிக்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களின் எண்ணிக்கை 2016ல் இருந்து 11 என்ற நிலையிலேயே நீடிக்கிறது. இந்திய மருத்துவ முறைகளில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 2016ல் 47 என்ற நிலையில் இருந்து 2017ல் 52 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு

இந்திய அடையாள குறியினை வலுப்படுத்துவதற்காக, வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய தோற்றத்தை சார்ந்த மக்கள் மற்றும் வெளிநாடுகளில் குடியேறியவர்களை கவருதல்,

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

தற்போதைய இந்தியாவின் உணவுக் கூட்டு ஸ்தாபனத்தின் (FCI) கொள்கையானது, தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் (NRI), முதலீடுகளுக்கான சிறப்பு அனுமதிப்பத்திரத்தை அனுமதித்தும், இத்தகைய திட்டங்களில் நேரடி முதலீட்டிற்கான நிபந்தனைகள் இல்லாமலும் செய்கிறது. சில குறிப்பிட்ட பிரிவுகளில் 100% வரை, வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீட்டிற்கான சிறப்பு ஒதுக்கீடு, தானியங்கி முறையில் வழங்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டில், லாபமற்ற அறக்கட்டளை என வெளிநாட்டு இந்திய தாராளவாதத்திற்கு, வெளிநாட்டு இந்தியர்களின் இந்திய மேம்பாட்டு அறக்கட்டளை (IDF-OI), இந்திய அரசால் நிறுவப்பட்டது. 2017 இன், பிரவசி பாரதீய பீமா யோஜனா (PBBY), வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் குடியேறிய தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு கட்டாய காப்புறுதி திட்டம் ஆகும்.

மேலும் தகவல்கள்

தேசிய கொசு ஒழிப்புத் திட்டம்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

அதுபோன்ற எந்தத் திட்டமும் உருவாக்கப்படவில்லை. இந்தியாவில் 2016-30ல் மலேரியாவை ஒழிப்பதற்கான தேசிய வரையறை 2016ல் அறிமுகம் செய்யப்பட்டது. மலேரியாவை ஒழிப்பதற்கான பாதையை அமைக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு

`தேசிய சுகாதார உத்தரவாதத் திட்டம்' தொடங்குதல்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

அம்ரித் மருந்துக் கடைகளின் எண்ணிக்கையை 2018ல் 4 மடங்காக உயர்த்தப் போவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. 52 லட்சம் நோயாளிகள் ரூ.267 கோடி ரூபாய்க்கும் மேல் சேமித்துள்ளனர் என்று இந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு

நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு, உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு அதிகபட்ச முன்னுரிமை தரப்படும்.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

தொழில் உற்பத்திக் குறியீட்டைப் பொருத்த வரையில் 2018-19 ஆம் ஆண்டு ஏப்ரல் - அக்டோபர் மாத காலத்தில் 5.6 சதவீத வளர்ச்சி (உத்தேசமாக) பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டில் இதே காலக்கட்டத்தில் இது 2.1 சதவீத வளர்ச்சியாக இருந்தது. `ஸ்டார்ட் அப் இந்தியா', `தொழில் தொடங்குவதை எளிதாக்குதல்', மாற்றி அமைக்கப்பட்ட தொழில் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், தொழில் சீர்திருத்த நடவடிக்கை திட்டம், அறிவுசார் சொத்துரிமை (IPR) கொள்கை போன்ற திட்டங்கள் மூலம் உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கம் தருவதற்கு ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. இவை தவிர, வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) கொள்கை மற்றும் நடைமுறைகள் முன்னேற்றகரமான வகையில் எளிமையாக்கப்பட்டு, விதிகள் தளர்த்தப் பட்டுள்ளன. அக்டோபர் 2017க்கான தொழிலாளர் மையத்தின் காலாண்டு வேலைவாய்ப்பு கணக்கெடுப்பின் (QES) படி, உறுபத்தித் துறையில் ஜூலை 2017 முதல் அக்டோபர் 2017 வரையில் 89,000 வேலைகள் உற்பத்தித் துறையில் அதிகரித்துள்ளனதாகக் கூறப்பட்டுள்ளது. அமைச்சகத்தில் பல தருணங்களில் தொழிலாளர்கள் காலத்துக்கு ஏற்ப தொழிலை மாற்றிக் கொள்வதால் எண்ணிக்கை சரிந்திருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு கற்பித்தல் முறையை உருவாக்குதல்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2018-19 ஆம் ஆண்டின் சமாக்ரா சிக்சா திட்டம் , சிறப்புத் திறன் உள்ள குழந்தைகளின் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான கல்விக்கான ``ஈடுபாடுள்ள கல்வி'' என்ற பிரத்யேகமான அம்சத்தைக் கொண்டிருக்கிறது. புதிய திட்டத்தின் கீழ், மாணவர்-சார்ந்த உதவித் தொகை, ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு ரூ.3000 என்பது, ரூ.3500 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. உபகரணங்கள் மற்றும் கருவிகள், உதவிக் கருவிகள், கற்பித்தல்-கற்றல் பொருட்கள், பிரெய்லி & பெரிய அச்சிட்ட புத்தகங்கள் போன்ற மாணவர் சார்ந்த விஷயங்களும் இதில் அடங்கும். மேலும், சிறப்புக் கல்வியாளர்கள் மற்றும் பணியிடை பயிற்சி அளிக்கும் சிறப்பு வல்லுநர்கள் மற்றும் பொது ஆசிரியர்கள் நியமனத்துக்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் நிதியுதவி அளிக்கப் படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வுப் பயிற்சி அளிக்கும் திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்காக 1992ல் இந்திய மறுவாழ்வுக் கவுன்சில் (RCI) அமைக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

இடைநிலைக் கல்வியை ஒரே தரமாக மாற்றுதல் மற்றும் ஊரக, மலைவாழ் மற்றும் சிரமமான பகுதிகளுக்கு கவனம் செலுத்தும் வகையில் தொழில் திறன் மேம்பாடு.

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2018 ஆம் ஆண்டில் இருந்து பள்ளிக் கல்விக்கு சமாக்ரா சிக்சா திட்டத்தை அரசு அமல் செய்து வருகிறது. சர்வ சிக்சா அபியான் (SSA), ராஷ்ட்ரியவ் மத்யமிக் சிக்சா அபியான் (RMSA), ஆசிரியர் கல்வி (TE) போன்ற ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த கல்வித் திட்டங்களை ஒன்றிணைத்து இந்தத் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. ஊரகப் பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தரமான கல்வி கிடைக்கச் செய்வதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கூடங்களில் தொழில் பயிற்சிக் கல்வித் திட்டங்களை அமல் செய்வதற்கு மாநில அரசுகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கல்விக்கான ஒன்றுபட்ட மாவட்ட தகவல் முறைமையின் (U-DISE) அறிக்கையின்படி 2009ல் உயர்நிலைக் கல்வியில் சேருபவர்கள் 62.90% ஆக இருந்தனர். இது 2015ல் 80.01% ஆக உயர்ந்தது. 2017-18 பட்ஜெட்டில், மேல்நிலைக் கல்வி புதுமை சிந்தனை நிதி உருவாக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி கிடைப்பது, பாலின பாகுபாடு நீக்கம், தரத்தை மேம்படுத்துதலில் அந்தப் பகுதிக்கு ஏற்ற புதுமை சிந்தனைகளை, குறிப்பாக நாட்டில் கல்வி ரீதியில் பின்தங்கிய மாவட்டங்களில் இதை ஊக்குவிப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு

கல்வி மற்றும் ஆராய்ச்சியின் தரத்தை உயர்த்துதல்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

IMPRINT இந்தியா, உச்சட்டர் அவிஷ்கர் திட்டம் (UAY), அடிப்படை அறிவியல்களில் மாறும் நிலைகள் & முன்னேற்றமான ஆராய்ச்சிக்கான (STARS) அகடமிக் நெட்வொர்க்குகளுக்கான உலகளாவிய முன்முயற்சி (GIAN) திட்டம், அகடமிக் & ஆராய்ச்சி ஒத்துழைப்பு (SPARC) மேம்படுத்தும் திட்டம், இந்தியாவில் ஆராய்ச்சியை ஊக்குவிக்க சமூக அறிவியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் கொள்கை ஆராய்ச்சி (IMPRESS) போன்ற பல திட்டங்களை அரசு தொடங்கியுள்ளது. ஆராய்ச்சி உதவித் தொகைகள் வழங்குவதற்கான மானியத் திட்டங்களையும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது. 9 ஆராய்ச்சிப் பூங்காக்கள் உருவாக்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வளவு முன்முயற்சிகளின் விளைவாக 2018ல் முதல் 200 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 3 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றன என்று QS உலகப் பல்கலைக்கழக தரப்படுத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது. 2016ல் இரண்டு இந்தியப் பல்கலைக்கழகங்கள் மட்டுமே இதில் இடம் பெற்றிருந்தன.

மேலும் விவரங்களுக்கு

முன்னெச்சரிக்கை கருத்தான ‘கார்பன் கிரெடிட்’ ஊக்குவிக்கப்படும்.

வகை: சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

கியோட்டோ நெறிமுறையின் படி, சுத்தமான மேம்படுத்தப்பட்ட முறையின் கீழ், வளர்ந்த நாடுகளில் உள்ள உமிழ்வு-குறைக்கும் திட்டங்களை, வளர்ந்து வரும் நாடுகளில் செயல்படுத்தி, வர்த்தக வரவுகளை, சான்றளிக்கப்பட்ட உமிழ்வு குறைப்பு மூலம், உருவாக்கலாம். தகுதிவாய்ந்த CDM திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக, இந்திய அரசு, தேசிய சுத்திகரிப்பு மேம்பாட்டு ஆணையத்தை (NCDMA) அமைத்துள்ளது. பிப்ரவரி 2017 வரை, அதிகாரப்பூர்வமாக, ஹோஸ்ட் நாடு ஒப்புதல் (HCA), 3,011 திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கமானது, தொடர்ச்சியாக, செயல்திறன் மிக்க முயற்சிகள் மற்றும் CDM திட்டங்களுக்கு, பட்டறைகள், கருத்தரங்குகள் மற்றும் பிற நடவடிக்கைகள் மூலம் ஆதரவளிக்கிறது. 2015 ஆம் ஆண்டில், தேசிய சுத்திகரிப்பு மேம்பாட்டு ஆணையம் (NCDMA), சுத்தமான மேம்படுத்தப்பட்ட முறையின் (CDM) கீழுள்ள திட்டங்களை கண்காணிப்பதற்கான புதிய இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.

மேலும் தகவல்கள்

சுகாதாரம் மற்றும் உடல் நலவியல் ஆகியவை பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்க்கப்படும்.

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

மனிதவள மேம்பாட்டுத் துறை, விளையாட்டு அமைச்சகம், மத்திய அரசை கலந்து ஆலோசித்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பாடத் திட்டங்களில் சுகாதாரம் மற்றும் உடற்கல்வியை ஒருங்கிணைக்கும் முயற்சியை CBSE எடுத்துள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் ``சுகாதாரம் மற்றும் உடற்கல்விக்கு (HPE)'' ஒரு பாட வகுப்பு நேரத்தை ஒதுக்க வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் CBSE ஆலோசனை கூறியுள்ளது. மாணவர்கள் போர்டு தேர்வில் அமர்வதற்கு, HPE-யில் பங்கேற்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. புதிய திட்டத்தின் கீழ் சில திட்டங்கள் உடல் நல இயலும் அடங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

பழங்குடியினத்தவர்களுக்கு அனைத்து கல்வி நெட்வொர்க் உருவாக்குதல்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில பழங்குடியின மக்களுக்கு (ST) உதவி செய்வதற்கு மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களுக்கு, ``பழங்குடியினர் துணைத் திட்டத்தின்'' கீழ் மத்திய அரசு 1977ல் இருந்து நிதியுதவிகள் அளித்து வருகிறது. 9 மற்றும் அதற்கும் மேலான வகுப்புகளில் பயிலும் பழங்குடியின மாணவர்களுக்கான வாழ்க்கைச் செலவுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது. ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்., பிரசித்தி பெற்ற மருத்துவக் கல்லூரிகள் போன்றவற்றில் பயிலும் பழங்குடியின மாணவர்களுக்கும் இதில் உதவி அளிக்கப் படுகிறது.2017-18 ஆம் ஆண்டில் இந்த உதவித் தொகைகளின் கீழ் சுமார் ரூ.1,787.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ``கல்வி அறிவு குறைவாக உள்ள மாவட்டங்களில் பழங்குடியின மாணவ்களின் கல்வியைப் பலப்படுத்துதல்'' திட்டத்தையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. நாட்டில் பழங்குடியின மக்களின் கல்விக்கு நிறைய திட்டங்கள் உள்ளபோதிலும், பழங்குடியினத்தவர்களின் கல்வி அறிவு அளவு, தேசிய அளவைவிட குறைவாகவே உள்ளது என்று 2018ல் சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை நிலைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தத் துறையில் கட்டமைப்பு வசதிகளில் குறைபாடுகள் இருப்பதாகவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. Eklavya முன்மாதிரி உறைவிடப் பள்ளிகளும் இதில் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு

புதிய கல்விக் கொள்கையை (NEP) பரிந்துரை செய்வதற்கு கல்வி குறித்த தேசிய ஆணையம் அமைக்கப்படும்.

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

தேசிய கல்விக் கொள்கை (NEP) குறித்த புதிய வரைவு தயாராக உள்ளது என்றும், அது மத்திய அரசுக்கு ``எந்த நேரத்திலும் விரைவில்'' அனுப்பி வைக்கப்படும் எனறும் 2018 டிசம்பரில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு

வேலைவாய்ப்பு மற்றும் சொத்து உருவாக்கம், கட்டமைப்பு உருவாக்கம், புதிய தொழில்நுட்பத்தை கைக்கொள்வதற்குத் தேவைப்படும் துறைகளில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதிப்பது.

வகை: பொருளாதாரம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2018ல் இதர வெளிநாட்டு நேரடி முதலீட்டுக் கொள்கை திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பெரும்பாலான துறைகள்/ செயல்பாடுகளில் 100% வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்க அது வகை செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவில் NCC பயிற்சியை ஊக்கப்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல்.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

NCC பயிற்சிக்கான நடைமுறைகள் அவ்வப்போது புதுப்பிக்கப் படுகின்றன. கடைசியாக 2017ல் அவ்வாறு செய்யப்பட்டது. 2018ல் பேரணி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் DG-க்கு சில பணிப்புகளை அளித்தார். அது தற்போதைய பயிற்சிக்கான பணிப்புகளில் அமல் செய்யப் படுகிறது. தேசிய ஒருமைப்பாட்டை முன்னிறுத்துவதற்காக ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத் (EBSB) முகாம்களை பிரதமர் வலியுறுத்தினார். விடியோ தொடர்பு மூலம் என்.சி.சி. மாணவர்களிடையே கருத்தாடலை அதிகரிக்கச் செய்வது, பயிற்சி மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவது ஆகியவையும் பிரதமரின் பரிந்துரைகளில் அடங்கும். 2016ல் போர்த்திறன் மேம்பாடு மற்றும் மறுசமன்பாட்டு பாதுகாப்பு செலவினத்தை மேம்படுத்துவது என ஷேக்கட்கர் கமிட்டி அளித்த பரிந்துரை, NCC-யின் செயல்திறனை மேம்படுத்துவதற்கானவையாகக் கருதப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு

யு.ஜி.சி.-யை உயர் கல்வி ஆணையமாக மாற்றி அமைத்தல்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

இந்திய உயர் கல்விக் கமிஷன் (பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தை ரத்து செய்யும்) மசோதா 2018க்கான வரைவை அரசு முன்வைத்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் 1956-ஐ ரத்து செய்யவும், இந்திய உயர்கல்வி கமிஷன் உருவாக்கவும் இந்த வரைவு மசோதா வகை செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு

இந்தியப் பல்கலைக்கழகங்கலில் ஆராய்ச்சியை மேம்படுத்தி, உலக அளவிலான நிலைக்கு கல்வியின் தரத்தை உயர்த்துதல்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

IMPRINT இந்தியா, உச்சட்டர் அவிஷ்கர் திட்டம் (UAY), அடிப்படை அறிவியல்களில் மாறும் நிலைகள் & முன்னேற்றமான ஆராய்ச்சிக்கான (STARS) அகடமிக் நெட்வொர்க்குகளுக்கான உலகளாவிய முன்முயற்சி (GIAN) திட்டம், அகடமிக் & ஆராய்ச்சி ஒத்துழைப்பு (SPARC) மேம்படுத்தும் திட்டம், இந்தியாவில் ஆராய்ச்சியை ஊக்குவிக்க சமூக அறிவியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் கொள்கை ஆராய்ச்சி (IMPRESS) போன்ற பல திட்டங்களை அரசு தொடங்கியுள்ளது. ஆராய்ச்சி உதவித் தொகைகள் வழங்குவதற்கான மானியத் திட்டங்களையும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது. 9 ஆராய்ச்சிப் பூங்காக்கள் உருவாக்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ``இந்தியாவின் மிக பிரபலமான கல்வி நிலையங்களில் ஏற்பட்டுள்ள ஆக்கபூர்வ செயல்பாடு, நாட்டில் உயர்கல்வித் துறையில் வெற்றிகரமான ஆண்டு என்பதற்கான அடையாளபூர்வமான குறியீடு'' என்று QS தனது அறிக்கையில் கூறியுள்ளது.இந்தியாவில் குறிப்பிடப்பட்டுள்ள 24 பல்கலைக்கழகங்களில், 7 பல்கலைக்கழகங்கள் தரநிலையில் உயர்ந்திருக்கின்றன, 9 பல்கலைக்கழகங்கள் அதே நிலயில் இருக்கின்றன, 5 பல்கலைக்கழகங்கள் புதிதாக தரவரிசையில் இடம் பெற்றுள்ளன, 3 பல்கலைக்கழகங்கள் தங்களுடைய இடத்தில் இருந்து இறங்கியுள்ளன என்பதை இதன் முக்கிய அம்சங்கள் காட்டுகின்றன.

மேலும் விவரங்களுக்கு

உயர் கற்றல் நிறுவனங்களின் பொறுப்பு நிலையை உறுதிப் படுத்துவதற்கான நடவடிக்கைகளுடன் தன்னாட்சி அளிப்பது.

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

இந்தியாவில் 62 பல்கலைக்கழகங்கள் மற்றும் 8 கல்லூரிகளுக்கு 2018 மார்ச் 20 ஆம் தேதி மோதி அரசு தன்னாட்சி அந்தஸ்து வழங்கியது.

மேலும் விவரங்களுக்கு

தொழில் துறை (SME உள்பட), கல்வித் துறை & சமுதாயத்தினர் இடையே கருத்தாடலை ஏற்படுத்துவதற்கான ஒரு நடைமுறையை உருவாக்குதல்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

ஆரம்ப நிலையில் உள்ள அல்லது தொழில் நடத்துவதற்கு குறைந்த நிதி தேவைப்படும் நிலையில் உள்ள தொழில்முனைவோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2015ல் தொடங்கப்பட்ட பிரதமரின் முத்ரா திட்டம் (PMMY) தொடங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

மருத்துவம் மற்றும் மருத்துவம்-சார்ந்த கல்விக் கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது.

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

புதிய மருத்துவக் கல்லூரிகள் உருவாக்குவதற்கு மத்திய நிதி உதவித் திட்டத்தை சுகாதாரம் & குடும்ப நல அமைச்சகம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 24 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான இதன் இரண்டாவது கட்ட திட்டத்திற்கு 2018ல் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் இதுவரை 13 கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் தகவலின்படி 2018 நிலவரப்படி 492 கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பு கற்பிக்கப்படுகிறது; அவற்றில் 61580 இடங்கள் உள்ளன என தெரிவிக்கப் பட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மருத்துவம் சார்ந்த கல்விக்கு ஒழுங்குமுறை அமைப்பு இப்போதைக்கு எதுவும் கிடையாது. மத்திய அளவில் இதுகுறித்து எந்த விவரங்களும் இல்லை.

மேலும் விவரங்களுக்கு

ஒவ்வொரு மாநிலத்திலும் எய்ம்ஸ் போன்ற கல்வி நிலையம் உருவாக்குவது.

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

பிரதமரின் ஸ்வஸ்த்ய சுரக்சா திட்டத்தின் (PMSSY) கீழ் 21 எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப் பட்டது. 2018 நிலவரப்படி டெல்லி, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், பிகார், சட்டீஸ்கர், உத்தரகண்ட், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா என 8 எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 2018ல் இருந்து நாக்பூர் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கியுள்ளது. குண்டூர் எய்ம்ஸ் தற்காலிகமான இடத்தில் செயல்படத் தொடங்கியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், புதிதாக 15 எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிலையங்கள் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அவற்றில், 13 புதிய எய்ம்ஸ் கல்வி நிலையங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு

Hub - Spoke முன்மாதிரியின் மூலம் ஒற்றைச் சாள முறையை நோக்கிய நடவடிக்கைகளை எடுப்பது.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

பல துறைகள் ஒற்றைச் சாளர முறைக்கு மாறும் பாதையில் மாறிக் கொண்டிருக்கின்றன. ஏற்றுமதியாளர்கள் பொதுவான மின்னணு அறிவிக்கை தாக்கல் செய்ய உதவும் வகையில் 2016 ஏப்ரலில் வர்த்தகத்தை (SWIFT) எளிமைப்படுத்தும் ஒற்றைச்சாளர இடைமுகம் ஒன்றை கலால் மற்றும் சுங்க மத்திய வாரியம் தொடங்கியது. டெல்லியில் காவல் துறை தலைமையகத்தில் ஐ.டி. மேற்பார்வையில் ஒற்றைச் சாளர முறை செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. பொது மக்கள் தங்களுடைய புகார்களின் தற்போதைய நிலையை அறிந்து கொள்வதற்காக காவல் துறை தலைமையகத்தில் ஒரு மையம் அமைக்கப் பட்டுள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் கட்டட திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் ஒப்புதல் அறிப்பதற்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மூலம் ஒற்றைச் சாளர முறை நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. 2018 நிலம் கொள்கை ஒற்றைச் சாளர முறைமையின் மூலமாக செயல்படுத்தப்பட உள்ளது. இது டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு

மத குருமார்களின் ஆலோசனையுடன் வக்பு வாரியங்களுக்கு அதிகாரம் அளித்தல்; வக்பு சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தல்.

வகை: சிறுபான்மையினர் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2009ல் இருந்து மாநில வக்பு வாரியங்களின் ஆவணங்களை கம்ப்யூட்டர் மயமாக்கல் மற்றும் வலுப்படுத்தும் திட்டம் 2017ல் குவாமி வக்பு வாரிய டராக்கியட்டி திட்டம் (QWBTS) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆவணங்களை கம்ப்யூட்டர் மயமாக்குவது மற்றும் மாநில வக்பு வாரியங்களை பலப்படுத்துவதற்கான திட்டம் இது. இந்தத் திட்டத்தின் கீழ் வக்பு சொத்துகளின் தகவல்களைப் பராமரிக்கும் இந்திய வக்பு மேலாண்மை சிஸ்டம் (WAMSI) இணையதளமும் அடங்கியுள்ளது. வக்பு சொத்துகள் குத்தகை விதிமுறைகள் (WPLR), 2014 என்பது 2015 ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்டது. இந்தப் புதிய விதிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கு 2018ல் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. 2019 ஜனவரியில் அந்தக் கமிட்டி சமர்ப்பித்த அறிக்கையில், பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப் பட்டுள்ளன. வக்பு சொத்துகள் தொடர்பான புகார்கள் மற்றும் சர்ச்சைகளைக் கையாள்வதற்கு, ஒரு நபர் ``வழக்குத் தீர்வை வாரியம்'' உருவாக்கப் பட்டுள்ளது. மாநிலங்களில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட டிரிபியூனல்கள் அமைக்கப் படுகின்றன. இதுவரை 23 மாநிலங்கள் இந்த டிரிபியூனலை அமைத்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு

இப்போதுள்ள PDS திருத்தி அமைக்கப்படும்.

வகை: சிறுபான்மையினர் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் திட்டத்தை அமல் செய்வதற்காக 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுகளில் அமல் செய்வதற்காக பொது விநியோகத் திட்ட நெட்வொர்க் (PDSN) உருவாக்குவதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. ``தொடக்கம் முதல் இறுதி நிலை வரையில் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகளை கம்ப்யூட்டர் மயமாக்கும்'' திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன்கீழ் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் அனைத்து ரேஷன் அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கப் பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு

வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில் திறன் வளர்ச்சிக்கான முன்மாதிரித் திட்டம் உருவாக்கப்படும்.

வகை: சிறுபான்மையினர் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

தேசிய மின்னணு- நிர்வாகத் திட்டத்தின் (NeGP) கீழ் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவை தொலைநோக்கு திட்டங்களாக 2011ல் சேர்க்கப்பட்டன. 2014ல் ``ஸ்கில் இந்தியா'' திட்டம் இலக்கு சார்ந்த திட்டமாக தொடங்கப்பட்டது. அனைவருக்கும் (நகர்ப்புறங்களில்) வீட்டு வசதி அளிக்கும் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், இலக்கு சார்ந்த திட்டமாக 2015ல் தொடங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

கிடங்குகள் கட்டமைப்பு & விநியோக தொடர்புகள் மேலாண்மையை மேம்படுத்துவதை உறுதி செய்தல்

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

கிடங்குகள் செயல்பாட்டுக் குறியீடு (LPI) மூலமாக, பல்வேறு நாடுகளில் உள்ள வர்த்தகக் கிடங்குகள் செயல்பாட்டை உலக வங்கி கண்காணிக்கிறது. இதில் 2016-ல் 35வது இடத்தில் இருந்த இந்தியா 2018-ல் 44வது இடத்துக்கு பின்தங்கியது. 2016க்கும் 2018க்கும் இடையில் உலக வங்கியால் மதிப்பீடு செய்யப்பட்ட அனைத்து 6 பிரிவுகளிலும் இந்தியாவின் மதிப்பெண் உயர்ந்துள்ளது. ஆனால் 2016க்கும் 2018க்கும் இடையில் அனைத்துப் பிரிவுகளிலும் இந்த மதிப்பெண்கள் குறைந்து போயின.

மேலும் விவரங்களுக்கு

பழங்குடியினர் கலாச்சாரம் மற்றும் மொழிகளைக் காப்பாற்றுவதற்காக பழங்குடியினர் ஆராய்ச்சி மற்றும் கலாச்சார தேசிய மையம் உருவாக்கப்படும்.

வகை: சிறுபான்மையினர் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

TRI இல்லாத பகுதிகளில் பழங்குடியினர் ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களை (TRI) ஏற்படுத்த பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இப்போது, 21 மாநிலங்களில் TRI-கள் செயல்படுகின்றன. 2017-18 ஆம் ஆண்டில் அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, சிக்கிம் மாநிலங்களில் புதிய TRI-களுக்காக ரூ.79 கோடி அனுமதிக்கப்பட்டது. டெல்லியில் தேசிய அளவிலான பழங்குடியினர் ஆராய்ச்சி நிலையம் அமைக்க பழங்குடியினர் விவகார அமைச்சகம் முன்மொழிவு செய்துள்ளது. 2018 இறுதியில் இதற்கான முன்மொழிவு நிதி ஆயோக் அமைப்புக்கு அனுப்பப் பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

வரி சர்ச்சை தீர்வு காணும் நடைமுறை சரி செய்தல்.

வகை: பொருளாதாரம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

வரி குறித்து நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு அரசு சில நடவடிக்கைகள் எடுத்துள்ளது. அப்பீல் செய்வதற்கான பண வரம்பு 2015ல், வரையறுக்கப்பட்ட காலத்துக்கு உயர்த்தப்பட்டது. தனி நபர் பெஞ்ச் முன்பான வழக்கிற்கு, மதிப்பீடு செய்யப்படும் வருமானம் ரூ.15 லட்சம் வரையில் இருக்க வேண்டும் என்று உயர்த்தும் வகையில் 2015 ஆம் ஆண்டில் நிதிச் சட்டத்தின் மூலம் வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. நேரடி வரி சர்ச்சைத் தீர்வுத் திட்டம் 2016ல் அமலுக்கு வந்தது. முந்தைய வரி சர்ச்சைகளைத் தீர்வு செய்வதற்கு அதில் ஏழு மாத காலம் அவகாசம் தரப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

சிவப்பு நாடா எனப்படும் கடுமையான நடைமுறைகளை ரத்து செய்து, நடைமுறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பதை உறுதி செய்தல்.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

மேலும் விவரங்களுக்கு

நிச்சயமற்ற நிலையை அகற்றி, முதலீட்டாளர் நம்பிக்கையை உருவாக்குவதற்காக வரி நடைமுறைகளை சீரமைத்து எளிமையாக்குதல்.

வகை: பொருளாதாரம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

புதிய நேரடி வரி சட்ட வரைவை உருவாக்க மத்திய அரசு (முந்தைய குழுவின் முயற்சி தோல்வி அடைந்துவிட்டதால்) ஒரு புதிய பணிக் குழுவை நியமித்தது. இந்தச் சட்டத்தை அதிக நவீனமானதாகவும், எளிமையாகவும் ஆக்குவதற்கு இந்தக் குழு நியமிக்கப்பட்டது. பல மறைமுக வரிகள், ஒரே மறைமுக வரி மூலம் ஜிஎஸ்டியால் நீக்கப்பட்டது. ஆன்லைன் முனையங்கள் மூலம் வரிகளைச் செலுத்துவதை அரசு எளிமையாக்கியது.

மேலும் விவரங்களுக்கு

பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை (DRDO) பலப்படுத்துவது.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

டி.ஆர்.டி.ஓ.வுக்கு 2014-15 பட்ஜெட்டில் ரூ.13.25 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.2018-19ல் இது ரூ.17.86 ஆயிரம் கோடியாக (BE) இருந்தது. 2018ல் டி.ஆர்.டி.ஓ.வுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், ராணுவப் பிரிவுகள் தொடர்ந்து தங்களுடைய முன்னுரிமைப் பட்டியல்கள், திட்டங்கள், செயல்பாடுகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியிருப்பதாக நாடாளுமன்றக் குழு கூறியது. கடந்த ஐந்து தசாப்தங்களில் டி.ஆர்.டி.ஓ. பல தொழில்நுட்பங்களை உருவாக்கி, மேம்படுத்தியுள்ளது. அவை பாதுகாப்புத் துறை சேவையில் சேர்க்கப் பட்டுள்ளன அல்லது சேர்க்கும் நடைமுறைகளில் உள்ளன. இந்தத் திட்டங்களின் மதிப்பு ரூ.2.60 லட்சம் கோடியாக உள்ளது. இதில் ரூ.1.1 லட்சம் கோடி 2015க்குப் பிந்தைய திட்டங்களுக்கு உரியவை. ஆனால் 2017 மார்ச் 31 நிலவரத்தின்படி, டி.ஆர்.டி.ஓ.வின் 13 முக்கிய இலக்கு சார்ந்த திட்டங்கள் (MM) காலக்கெடுவை தாண்டி சென்றுவிட்டிருந்தன. பாதுகாப்புத் துறை திட்டங்களை விரைவுபடுத்துவதற்கு டி.ஆர்.டி.ஓ. சில நடவடிக்கைகளை - அதாவது, அதிகாரப் பரவலாக்கம், கடுமையான மறு ஆய்வு நடைமுறைகளை அமல் செய்வது போன்ற நடவடிக்கைகளை - எடுத்திருப்பதை அறிவதாக 2018 ஆம் ஆண்டுக்கான நிலைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நிறுவனம் முழுக்க ஒரே மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப் படுவதை உறுதி செய்வதற்கு, 2016ல் டி.ஆர்.டி.ஓ. அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

மேலும் விவரங்களுக்கு

புலனாய்வுத் துறைகளை நவீனப்படுத்துவதன் மூலம், ரகசியத் தகவல்களை சேகரிக்கும் நடைமுறையைப் புதுப்பித்தல்.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2009 ஆம் ஆண்டில் இருந்து தேசிய புலனாய்வுத் தொகுப்பு (NATGRID) திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட புலனாய்வு முகமைகளை இணைப்பதற்கு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான வரைமுறைகளாக இது இருக்கும். முகமைகளுக்கு இடையில் ரகசியத் தகவல்களை ஒருங்கிணைப்பதற்கும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்கும் தேசிய கணினிசார் ஒத்துழைப்பு மையம் (NCCC) அமைக்க 2015ல் அரசு ஒப்புதல் அளித்தது. NCCC-யின் முதலாவது கட்டப் பணிகள் 2017ல் இருந்து செயல்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு

மாநில அரசுகள் தங்களுடைய காவல் படைகளை நவீனப்படுத்திக் கொள்வதற்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

``காவல் படைகளை நவீனமாக்கல் (MPF)'' என்ற ஒரே குடையின் கீழான ஒரு திட்டத்துக்கு 2017ல் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2017-18 முதல் 2019-20 வரையில் ரூ.25,060 கோடி மதிப்பீட்டில் இதற்கு ஒப்புதல் தரப்பட்டது. காவல் துறை கட்டமைப்பு, தடய அறிவியல் ஆய்வகங்கள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் சாதனங்களை மேம்படுத்துவதற்கு அரசுக்கு உதவி அளிப்பது இந்தத் திட்டத்தில் அடங்கும். பல்வேறு திட்டங்களின் கீழ் மானிய உதவிகள் அளிப்பதன் மூலம், கணினிசார் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அரசு உதவி செய்கிறது. 2018 இறுதியில் குற்றம் மற்றும் குறவியல் கண்காணிப்பு நெட்வொர்க் மற்றும் சிஸ்டம் (CCTNS) இணையதள சேவையாக தொடங்கப்பட்டது. காவல் பணி மற்றும் மின்னணு- நிர்வாகத்தை ஒருங்கிணைக்கும் வகையில் அந்தச் சேவை தொடங்கப்பட்டது. குடிமக்களை மையமாகக் கொண்டதாகவும், புலனாய்வு சேவைகளுக்கும், அனைத்து விஷயங்களும் கிடைக்கும் ஒரே தளமாக இது கருதப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு

இந்தியாவில் `வணிகம் செய்வதை எளிதாக்கும்' வகையில் உகந்த சூழலை உருவாக்குவதை உறுதி செய்தல்.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

வணிகம் செய்வதை எளிதாக்கியுள்ள நாடுகள் குறித்து உலகவங்கி தயாரித்த 2019 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77வது இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு

பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், தேசிய ஆய்வகங்கள் உருவாக்கியுள்ள நுட்பங்களை தொழில் துறையினருக்குத் தெரிவிப்பதற்காக தன்னாட்சி பெற்ற தொழில்நுட்ப தெரிவிப்பு வசதியை ஏற்படுத்துதல்.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

DSIR-ன் அங்கமான அறிவியல் & தொழிற்சாலை ஆராய்ச்சிக் கவுன்சில் (CSIR) மற்றும் NRDC போன்ற அமைப்புகள், தொழில்நுட்பத்தைத் தெரிவித்துக் கொள்வது தொடர்பாக மற்ற நாடுகள் / நமது நாட்டுக்குள் அவ்வப்போது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு வருகின்றன. புதிய அமைப்புகள் எதையும் அரசு இதுவரை உருவாக்கவில்லை. புதிய தொழில்நுட்ப தெரிவித்தல் அலுவலகங்கள் அமைப்பது / தரம் உயர்த்துதலுக்கு கல்வி நிலையங்கள்/ பல்கலைக்கழகங்கள் / ஆராய்ச்சி நிலையங்கள் / அறிவியல் அமைப்புகள் / பிரிவு 8 நிறுவனங்களிடம் இருந்து விருப்பக் கடிதம் கோரி 2018 இறுதியில், உயிரி வேதியல் துறை மூலமாக அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. விருப்பக் கடிதம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2019 ஜனவரி 7 என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

அறிவியல் ஆராய்ச்சி மற்றும் புதுமை சிந்தனையை தொழிலாக எடுத்துக் கொள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதற்கு திட்டங்கள் உருவாக்குவது.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

இளைஞர்கள் ஆராய்ச்சிப் பணியை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்க அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. INSPIRE, N-PDF, ECRA, CSIR கல்வி உதவித் திட்டங்கள் போன்றவை அவற்றில் சில. மாணவர்களின் ஸ்டார்ட் அப்-கள் மற்றும் மூல முன்மாதிரி வடிவமைப்புக்கு நிதி ஆதரவு அளிக்கும் வகையில் ஸ்டார்ட் அப் நிதி விருது ஒன்றை 2016ல் அரசு தொடங்கியது. 2017ல் இந்த விருதுக்கு 12 மாணவர் அணிகள் தேர்வு செய்யப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு

வறுமை ஒழிப்பு, வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல், பட்டினி மற்றும் ஊட்டச்சத்து இல்லாத நிலையை நீக்குதல், வேலைவாய்ப்பை உருவாக்குதலில் அறிவியல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

அரசாங்கம் TISAN திட்டம், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்ட SYST திட்டம் போன்றவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. IIT, NIT, IISER போன்ற உயர் கல்வி நிலையங்களை இணைக்கும் வகையில் 2014ல் உன்னத் பாரத் அபியான் திட்டத்தை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியது. பொருத்தமான தொழில்நுட்பங்கள் மூலம், சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கு நமக்குள் உள்ள திறமைகளை பயன்படுத்தும் நோக்கில் இது தொடங்கப்பட்டது. ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதை நோக்கமாகக் கொண்ட POSHAN அபியான் திட்டம் 2017ல் தொடங்கப்பட்டது. அங்கன்வாடி ஊழியர்களும், பெண் கண்காணிப்பாளர்களும் உடனுக்குடன் தகவல் உள்ளீடுகள் அளித்தல் மற்றும் மதிப்பீடு செய்ய உதவியாக அவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்குவதன் மூலம் இந்தத் திட்டம் செயல்படுகிறது. சமூக ஊடகம், செயற்கை புலனறிதல், கருத்தாய்வுகள், ரோபோடிக்ஸ் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் அமல் செய்யப்படுவதன் மூலம் முதன்மை டிஜிட்டல் அதிகாரி, முதன்மை இடைமறிப்பு அதிகாரி, புள்ளிவிவர அறிவியலாளர் போன்ற புதிய வகையிலான வேலைகள் உருவாக்கப் பட்டிருப்பதாக NASSCOM தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு

சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை நடைமுறையை வலுப்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல்.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2016ல் அரசு தேசியப் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தை வெளியிட்டது. சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் தொடர்பாக பல்வேறு துறைகளுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் பயிற்சிக்கான பொறுப்புகள் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளன. 2014ல் பேரழிவு ஆபத்து குறைப்பில் சிவில் பாதுகாப்பை பிரதானப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டு, 12வது ஐந்தாண்டு காலத்தில் இதற்கு ரூ.290 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், இநு அமல் செய்யப்படும் ஊரக மாவட்டங்களின் எண்ணிக்கை 100-ல் இருந்து 240 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார தொகை உயர்த்துவது மற்றும் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தை வேளாண்மையுடன் இணைத்தல்

வகை: வேளாண்மை நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

22 அத்தியாவசிய வேளாண் பயிர்களுக்கு அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கிறது.2018-19 ஆம் ஆண்டில் அத்தியாவசிய பயிர்களின் கொள்முதல் விலையை அரசு 50% அல்லது அதற்கு அதிகமாக உயர்த்தியது. இப்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்துடன் வேளாண்மைத் துறையை இணைப்பது குறித்து சில முதல்வர்களுக்கு இடையில் பேச்சு நடந்து வருகிறது. ஆனால் அதை எட்டும் வகையில் ஆக்கபூர்வமான எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு

மாவோயிஸ்ட் கலகங்களால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க தேசியத் திட்டம் உருவாக்குவது.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

இடதுசாரி தீவிரவாதிகள் (LWE) கலகங்களைக் கையாள்வதற்கு தேசியத் திட்டம் எதுவும் இல்லை. சூழ்நிலைகள் வரும் போது கையாள்வதற்கு அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இடதுசாரி தீவிரவாத செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் செல்போன் கோபுரங்கள் அமைக்க 2014ல் அரசு ஒப்புதல் அளித்தது. அந்தப் பகுதியில் செல்போன் தொடர்பு வசதியை உருவாக்கும் வகையில் அனுமதி தரப்பட்டது. அந்தப் பகுதிகளில் 2016ல் சாலை இணைப்புத் திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டது. பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில் பொது மக்கள் செயல்பாட்டுத் திட்டத்துக்கு 2017ல் ஒப்புதல் தரப்பட்டது. தீவிரவாதப் பிரச்சினை தொடர்பாக, காவல் படைகளை நவீனப்படுத்தும் ஒரே குடையின் கீழான திட்டத்துடன், பல துணைத் திட்டங்களும் சேர்க்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு

வடகிழக்கு மற்றும் இதர மாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்துள்ள தொழிலாளர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசரகால நடவடிக்கைகள் எடுப்பது.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்களுக்கான திட்டங்களை அளிக்கும் வகையில், அமைப்புசாரா தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2008-ஐ அரசு தொடர்ந்து அமல் செய்து வருகிறது. குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஆயுள் மற்றும் உடல் ஊனத்துக்கான காப்பீட்டு வசதிகளை மத்திய அரசு அளிக்கிறது. இந்தத் திட்டங்கள் எதிலுமே ``பாதுகாப்பு'' என்ற வார்த்தை வெளிப்படையாக இடம் பெறவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் பிரச்சினைகளைக் கவனிப்பதற்கு 2014 பிப்ரவரியில் உள்துறை அமைச்சகம் ஒரு கமிட்டியை நியமித்தது. அதன் பரிந்துரைகள், அமலாக்கத்தின் பல்வேறு நிலைகளில் உள்ளன. வடகிழக்கு பிராந்திய மக்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்கு சட்ட சேவைகள் குழுவில் டெல்லி அரசு சட்ட சேவைகள் ஆணையம் (DSLSA)பெண் வழக்கறிஞர்களை சேர்த்துள்ளது. வடகிழக்குப் பிராந்திய மக்களின் பிரச்சினைகளை பெங்களூரு மற்றும் டெல்லி காவல் துறையினர் ஆக்கபூர்வமான, முன்னேற்றகரமான வகையில் கையாள்கின்றன.

மேலும் விவரங்களுக்கு

உற்பத்தி, விலைகள், இறக்குமதிகள், பங்குகள் மற்றும் பயிர்கள், விதைகளின் கையிருப்பு நிலை உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் விவசாயிகளுக்குத் தெரிவித்தல்.

வகை: பொருளாதாரம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

காப்பீடு, வானிலை, தொழில்நுட்பம், விலைகள், விதைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விவசாயிகளுக்கு அளிக்கும் வகையில் பல்வேறு செல்போன் ஆப்-கள் மற்றும் இணையதள முனையங்களை அரசு தொடங்கியுள்ளது. இவற்றில் பெரும்பாலான ஆப்கள் தொடர்பு இல்லாமல் போய்விட்டன அல்லது பிராந்திய மொழிகளில் இவை கிடைக்கவில்லை.

மேலும் விவரங்களுக்கு

நிதி ஒழுக்கத்தை வலியுறுத்துகையில், மாநிலங்களின் நிதி சுயாட்சியை உறுதி செய்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

பஞ்சாயத்துகளின் நிதியியல் நிலையை மீளாய்வு செய்ய, ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும், ஒரு மாநில நிதி ஆணையத்தை அமைக்‍க அனுமதிப்பதாக, 2016ம் ஆண்டில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் குறிப்பிட்டது. இந்த நடவடிக்கையை மாநிலங்கள் எடுக்க, மத்திய நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மேலும் தகவல்கள்

IPR-கள் மற்றும் காப்புரிமைகள் விஷயத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் காண்பது.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

இந்தியாவில் IP துறையை மேம்படுத்துவதற்கு அரசு நிறைய நடவடிக்கைகள் எடுத்துள்ளது. அலுவலர்களைப் பணி அமர்த்துவது மற்றும் பயிற்சி தருவதும் இதில் அடங்கும். 2018-19ல் முதல் 8 மாதங்களில் காப்புரிமை கோரி தாக்கலான விண்ணப்பங்கள் 2017-18ல் இருந்ததைவிட சுமார் 7% அதிகரித்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு

மருந்துகள், தொழில், விவசாயம் ஆகியவற்றில் அணுசக்தி ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டை ஊக்குவித்தல்.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

அணுசக்தித் துறையானது, பாபா அணு ஆராய்ச்சிக் மற்றும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையங்கள் மூலமாக, உணவு மற்றும் வேளாண்மை துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விதைச் சாகுபடிகள், மேம்பட்ட உரம், பயிர் வகைகள் போன்றவை தான் மேற்கொள்ளப்பட்டுவரும் சில ஆராய்ச்சிகள். கதிர்வீச்சு மருந்து துறையில் ஆராயப்படுகிறது. 2014-2015 ஆம் ஆண்டில், திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டின் படி, அணுசக்தித் துறைக்கு ரூ.7700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2018-2019 ஆம் ஆண்டில், அந்த எண்ணிக்கை, ரூ.16965.25 கோடியாக அதிகரித்தது.

மேலும் தகவல்கள்

ஆயுதப் படைகளை நவீனமயமாக்கல்

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிப்பதை உறுதி செய்வதற்காக, பாதுகாப்புத் துறை கொள்முதல் விதிமுறைகளில் (DPP) பல திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவது என்பது தொடர்ச்சியாக நடைபெறும் செயல். பாதுகாப்புத் துறை கொள்முதல்கள், வீரர்களுக்கு முக்கியமான பயிற்சிகள் அளிப்பது என இதில் நடைபெறும். ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்கு 2013-14ல் அளிக்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீடு ரூ.73,444 கோடி. அந்த ஆண்டு செலவிடப்பட்ட தொகை ரூ.66,850 கோடி. 2015-16ல் மதிப்பீடு ரூ.77,406 கோடியாகவும், செலவிட்டது ரூ.62,235 கோடியாகவும் இருந்தது.

மேலும் விவரங்களுக்கு

எல்லை மேலாண்மையை ஆய்வு செய்து, மேம்படுத்துதல். சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க, தண்டனை நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்படும்.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

எல்லை மேலாண்மையில் விண்வெளி தொழில்நுட்பத்தை எந்த வகைகளில் பயன்படுத்தலாம் என்று அடையாளம் காண்பதற்கான பணிக் குழுவை 2019ல் அரசு அமைத்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடன் உள்ள சர்வதேச எல்லைகளில் மின்னணு கண்காணிப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு, விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை முறைமை (CIBMS) 2016 ஆம் ஆண்டு உருவாக்கப் பட்டது. CIBMS-ன் கீழ் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் ஸ்மார்ட் வேலிக்கான இரண்டு முன்னோடித் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். வங்கதேச குடியேற்றவாசிகளை அடையாளம் கண்டு, தடுத்து நிறுத்துவதற்கு சிறப்பு பணிக் குழுக்களை அரசு அமைத்துள்ளது. எல்லைப் பகுதியில் புறச்சாவடிகள், வேலிகள், மின்விளக்குகள் அமைப்பது தொடர்பாக பல்வேறு பிரச்சினைக் குறிப்பிட்டு உள்துறைக்கான எல்லைப் பாதுகாப்பு நிலைக் குழு 2016ல் அறிக்கை சமர்ப்பித்தது.

மேலும் விவரங்களுக்கு

வெப்பமண்டல நோய்களை ஒழிப்பதற்கான ஆராய்ச்சி

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

இந்திய மருத்துவ கவுன்சில் பல்வேறு வெப்பமண்டல நோய்களில் ஆராய்ச்சி நடத்தி வருகிறது. 2013ல், இந்த கவுன்சிலுக்கு ரூ.480.20 கோடி ஒதுக்கபட்டது. 2017ல், அது ரூ.1395.60 கோடி என ஆயிற்று; இது 109% அதிகரிப்பு.

மேலும் தகவல்கள்

மென்பொருள் மற்றும் வன்பொருள் உற்பத்தி அலகுகளை நிறுவுதல்

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

நாட்டில் மின்னணு உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மின்னணு உற்பத்தி அலகுகளுக்‍காக, உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்க, மின்னணு உற்பத்தி குழு நிதி உதவி வழங்குகிறது.

மேலும் தகவல்கள்

பாதுகாப்பு அமைச்சகத்தில் முடிவெடுக்கும் நடைமுறைகளில் ஆயுதப் படையினர் அதிகம் பங்கேற்பதை உறுதி செய்வது.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

படைகளுக்கு வருவாய் கொள்முதல் தேவை உள்ள விஷயங்களில் முடிவு எடுக்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்காக, முப்படை துணைத் தலைவர்களுக்கான, நிதி சார்ந்த முடிவுகள் எடுக்கும் அளவை பாதுகாப்பு அமைச்சகம் உயர்த்தியுள்ளது. பயிற்சி, பொருட்கள் இருப்பு மற்றும் போக்குவரத்து, திட்டமிடல், கொள்முதல்கள் ஆகியவற்றில் முப்படைகளின் தலைவர்கள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகளை உறுதி செய்ய வேண்டும் என்று, 2018ல் டேராடூனில் இந்திய ராணுவ அகாடமியில் பேசிய பிரதமர் மோதியும், பாதுகாப்பு அமைச்சரும் வலியுறுத்தினர்.

மேலும் விவரங்களுக்கு

ஆயுதப் படைகள் டிரிபியூனல்களின் செயல் திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அமல்படுத்துவது.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

ஆயுதப் படைகள் டிரிபியூனலில் (AFT) பதினொரு அமர்வுகளும், அவற்றின் கீழ் பதினேழு நீதிமன்றங்களும் இயங்கி வருகின்றன. 2018ல் ஜம்முவில் புதிய AFT-ஐ ராணுவம் தொடங்கியது. AFT-ல் உள்ள 593 பணியிடங்களில், 2019ல் 195 இடங்கள் காலியாக இருந்தன. டிரிபியூனல், மேலமை டிரிபியூனல் மற்றும் இதர ஆணையங்கள் (உறுப்பினர்களின் தகுதிகள், அனுபவம் மற்றும் இதர நிபந்தனைகள்) விதிகள் 2017ல் அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட பிறகு 9 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர். AFT உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்கான வழிமுறைகளை, ஆயுதப்படை டிரிபியூனல் சட்டம் 2007 முன்வைக்கிறது. AFT உத்தரவுக்கு எதிரான அப்பீல் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே தாக்கல் செய்யலாம் என்றும், உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யக் கூடாது என்றும் 2015ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 2009ல் இந்த டிரிபியூனல்கள் தொடங்கப்பட்டதில் இருந்து, 2018 நிலவரப்படி மொத்தம் 11,705 வழக்குகள் நிலுவையில் இருந்தன.

மேலும் விவரங்களுக்கு

ராணுவப் பணியில் இருப்பவர்கள், பணியிடத்தில் இருந்து வாக்காளராகப் பதிவு செய்தல் மற்றும் வாக்களிப்பதை உறுதி செய்தல்.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தாங்கள் பணியாற்றும் ராணுவ வீரர்கள், அந்தப் பகுதியில் பொது வாக்காளராகப் பதிவு செய்யும் தகுதியைப் பெறுகிறார். 2008ல் இருந்து இந்த நடைமுறை உள்ளது. 2016ல் அரசு, தேர்தல் நடத்தை விதிகள் 1961-ல் திருத்தம் செய்து, ராணுவப் பமியில் இருப்பவர்கள் மின்னணு-தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாம் என மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் தபால் வாக்கு வசதி கிடைக்காத காரணத்தால், பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் சுமார் 90% பேர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இழக்கிறார்கள் என்று பாதுகாப்புக்கான நிலைக் குழு தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு

கண்டுபிடிப்புகளுக்கான ஒரு விரிவான தேசிய அமைப்பை உருவாக்குதல்.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2018ல், அணைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும், புது கண்டுபிடிப்புகளுக்கான கலாச்சாரத்தை ஊக்குவிக்க, மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு ‘கண்டுபிடிப்புகள் அறை’யினை நிறுவி, வெளியிட்டது. இந்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, தனது தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளையின் மூலம் 2000ஆம் ஆண்டு முதல் புது கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகிறது. அறிவு சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கருத்துக்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை வெற்றிகரமான தொடக்கங்களாக மாற்றி வளர்க்க, 2016-17ல், ‘கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கும், பயன்படுத்துவதற்கும், ஒரு தேசிய முன்முயற்சி அமைப்பானது, நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையினால், வெளியிடப்பட்டது.

மேலும் தகவல்கள்

இளைஞர்களுக்கு உள்ளிருப்புப் பயிற்சி மற்றும் பணிப் பயிற்சியை அறிமுகம் செய்தல்.

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

ஜப்பானில் தொழில்நுட்ப உள்ளிருப்பு பயிற்சித் திட்டத்துக்கு (TITP) செல்லும் இந்திய மாணவர்களின் முதலாவது குழுவினர் ஸ்கில் இந்தியா அமைப்பு மூலம் 2018 மார்ச் 28 ஆம் தேதி பாராட்டப்பட்டனர்.

மேலும் விவரங்களுக்கு

ஒவ்வொரு மாவட்டத்திலும், விதைப் பண்ணைகள் அமைத்தல்

வகை: வேளாண்மை நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2018ல் பல்வேறு மாநிலங்களில் 130 விதை ஆராய்ச்சி ஆய்வகங்கள் இருந்தன. வாரணாசியில் ஒன்றும் பரீதாபாத்தில் ஒன்றுமாக நாட்டில் இரண்டு இடங்களில் மத்திய விதை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. நாட்டில் விதை ஆராய்ச்சி ஆய்வகங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு வேளாண்மை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்று 2018 அக்டோபரில் எகனாமிக் டைமைஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது. பெரிய நகரங்களில் 583 விதை ஆராய்ச்சி ஆய்வகங்களும், கிராமப் பகுதிகளில் வட்டார அளவில் 6,600 ஆய்வகங்களும் அமைக்க மாநில அரசுகளுடன் இந்த அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப் பட்டிருந்தது. அந்தச் செய்தி வெளியானதில் இருந்து, அது குறித்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு

தொடர் கல்வி மூலமாக திறன்களை புதுப்பித்துக் கொள்ளுதல் மற்றும் மேம்படுத்திக் கொள்வதற்கான நிறுவன நடைமுறைகளை உருவாக்குவது.

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2018 ஆகஸ்ட்டில் இந்திய அரசு `உன்னத் பாரத் அபியான்' திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை தொடங்கியது. நாட்டின் உயர் கல்வி நிலையங்களை குறைந்தபட்சம் ஐந்து கிராமங்களுடன் தொடர்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது அது. அதன் மூலம் 750 கல்வி நிலையங்கள் சேர்க்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு

தொழில் துறை, பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசை ஒன்று சேர்த்தல்

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

தற்போது செயல்பட்டு வரும் தொழில் திறன் மேம்பாட்டு மையங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் இந்தத் துறையில் உள்ள பிற அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட NSDA, NSDC, NSDF உள்ளிட்ட தனது துணை நிறுவனங்களுடன் சேர்ந்து தொழில் திறன் மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் விருப்பம் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

தொழில் துறையின் பங்களிப்புடன் சேர்ந்து செம்மை மையங்களை உருவாக்குதல்.

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

பெட்ரோ கெமிக்கல் துறைகளில் செம்மை மையங்களை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை ஊக்குவித்தல்

வகை: சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பு மற்றும் இரண்டாவது IORA புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கூட்டத்தை 2018 அக்டோபர் 2 ஆம் தேதி பிரதமர் மோதி தொடங்கி வைத்தார். புதுப்பிக்கத்தக்க எரிபொருள் ஆதாரங்களில் கவனம் செலுத்தும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு, எதிர்காலத்தில் உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் முக்கிய இடம் வகிக்கும் OPEC அமைப்புக்கு மாற்றாக உருவாகும் என்று அப்போது அவர் கூறினார். துறைகளுக்கு இடையிலான தேசிய எரிசக்தி சேமிப்பு லட்சியத் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என்றும் அவர் அறிவித்தார். முன்னதாக 2018ல் போட்டிநிலை விலையில், நிச்சயான தரத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதார வளங்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய தேசிய காற்றாலை - சூரிய மின்சார கலப்பு வகை கொள்கையை பிரதமர் தொடங்கி வைத்தார்.

மேலும் விவரங்களுக்கு

குழந்தை மற்றும் வளர் இளம்பருவ தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 2012- மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தை (ICPS) ஆய்வு செய்து, திருத்தி, வலுப்படுத்துதல்.

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

குழந்தை மற்றும் வளர் இளம்பருவ தொழிலாளர் சட்டம் 2012- ஐ திருத்தங்களுக்கு 2015 மே மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவதைத் தடுப்பது உள்ளிட்டவை இந்த உத்தேச திருத்தங்களில் அடங்கும். இதில் பொழுதுபோக்கு மற்றம் வேளாண்மை துறைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

துறைமுகங்களை கடலோர நிலப் பகுதிகளுடன் சாலை மற்றும் ரயில் வசதிகள் மூலம் இணைப்பது.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2018 மார்ச் 22 ஆம் தேதி நிலவரப்படி, சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.2.65 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 222 துறைமுக இணைப்புப் போக்குவரத்துத் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 14 திட்டங்கள் முடிக்கப் பட்டுள்ளன. 69 திட்டங்கள் அமல் செய்யப்படும் நிலையில் உள்ளன. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், மாநில பொதுப் பணித் துறைகள், துறைமுகங்கள், இந்திய துறைமுக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகம் போன்ற பல்வேறு துறைகள் மூலம் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு

குறைபாடுகளே இல்லாத பொருட்கள் உற்பத்தியில் கவனம் செலுத்துவது

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

``ZED சான்றளிப்புத் திட்டத்தின் கீழ் MSME-களுக்கு நிதி ஆதாரம்'' அளிக்கும் திட்டத்தை குறு, சிறு & நடுத்தர தொழில்களுக்கான அமைச்சகம் அறிவிக்கை செய்துள்ளது. இந்த நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தி நடைமுறையில் குறைகளே இல்லாத பொருள்கள் (ZED) உற்பத்தி செய்வதற்கான நடைமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதற்காக இந்தத் திட்டம் அறிவிக்கை செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் சான்றளிப்பு பெறுவதற்கு 20,000க்கும் மேற்பட்ட MSME-கள் பதிவு செய்துள்ளன. இப்போதுள்ள நிலவரப்படி, MSME துறையில் கொள்கை மட்டுமே கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

`தேசிய எரிசக்திக் கொள்கையை' அமல் செய்தல்

வகை: சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

அமைச்சகங்களுக்கு இடையிலான கருத்துகளைப் பெறுவதற்கு இரண்டாவது வரைவு காத்திருப்பில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து தேசிய எரிசக்திக் கொள்கை இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும் விவரங்களுக்கு

வெளிநாட்டு மொழிகளுக்கான தேசிய திட்டம் உள்பட மென்திறன்கள் அளிப்பதற்கு முக்கியத்துவம் தருதல்.

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

மென்திறன்களில் பயிற்சி அளிக்கும் மையங்கள் தொடங்குவதற்கு பிரதமரின் கவ்ஷால் விகாஸ் திட்டம் வகை செய்கிறது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் வெளிநாட்டு மொழிகளை கட்டாய பாடமாக இல்லாத கல்வியாக சி.பி.எஸ்.இ. அளிக்கிறது. வெளிநாட்டு மொழிகளுக்கான தேசியத் திட்டம் எதுவும் இதுவரை இல்லை.

மேலும் விவரங்களுக்கு

வேலை கிடைக்கும் வகையிலான திறன்களில் கவனம் செலுத்தும் வகையில் குறுகிய கால கல்வித் திட்டங்களை மாலை நேரங்களில் நடத்துவது.

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

நாடு முழுக்க தொழில்திறன் பயிற்சி அளிக்கும் திட்டத்தை அமல் செய்வதற்கு, பலமான நிறுவன அமைப்பிலான வரையறைகளை அளிக்கும் வகையில் 2015ல் தேசிய தொழில் திறன் மேம்பாட்டு தொலைநோக்குத் திட்டம் தொடங்கப்பட்டது. பல்வேறு தொழில் திறன்களில் மக்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு 2015ல் ஸ்கில் இந்தியா இயக்கமும் தொடங்கப்பட்டது. பள்ளி / கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு குறுகிய கால பயிற்சி அளிக்க, பிதமரின் கவ்ஷல் விகாஸ் திட்டம் (2016-20) வகை செய்கிறது. 2016 ல் 49973 பேருக்கு குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட்டது. 2018ல் இது 674534 ஆக உயர்ந்தது.

மேலும் விவரங்களுக்கு

நானோ தொழில்நுட்பம், பொருள் விஞ்ஞானம், தோரியம் தொழில்நுட்பம் மற்றும் மூளை ஆய்வு ஆகிய துறைகளுக்கு, உலக வர்க்க மற்றும் பிராந்திய அளவில், சிறந்த அறிவியல் ஆராய்ச்சி மையங்களை உருவாக்குதல்.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

நாட்டின் பல மாநிலங்களில், சுமார் 20 நானோ தொழில்நுட்ப மையங்களை இந்த கூட்டரசு உருவாக்கியுள்ளது. பல பல்கலைகழகங்களும், ஆராய்ச்சி மையங்களும் தங்களின் சிறப்பு மையங்களை அமைத்துள்ளன.

மேலும் தகவல்கள்

சில்லரை வியாபாரிகள், சிறு வர்த்தகர்கள் மற்றும் சிறி வியாபாரிகளின் நலன்களைப் பாதுகாப்பது மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

ஜி.எஸ்.டி. விலக்குகள் மற்றும் கடன்கள் அளிப்பது தவிர, சிறு வர்த்தகர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு தொழில்நுட்ப ரீதியிலான முன்னேற்றம் ஏற்படுத்துவதற்கு அரசு எதுவும் செய்யவில்லை.

மேலும் விவரங்களுக்கு

ரத்தசோகை பிரச்சினைக்குத் தீர்வு காண்பது.

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2018ல் தேசிய சத்துணவுத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2020 ஆம் ஆண்டு வரையில் இதற்கு பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.9,046.17 கோடி செய்யப்பட்டது. 10 கோடி மக்களுக்கு இந்தத் திட்டத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் மூத்த குடிமக்களை தன்னார்வலர்களாக / பகுதி நேர ஊழியர்களாக ஈடுபடுத்துவதற்கான திட்டங்களை உருவாக்குவது.

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2014-ல் அரசு தொடங்கிய MyGov இணையதள முனையம் அரசுடன் மக்களை இணைத்து, ஜனநாயகத்தில் அவர்கள் பங்கேற்க வாய்ப்பு அளிப்பதாக உள்ளது. வயது வித்தியாசம் இன்றி இந்த இணையம் எல்லோருக்கு ஏற்புடையதாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு

மாணவர் கடன்கள் வாங்குவதற்கான வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டு, எளிதில் கிடைக்கச் செய்யப்படும்.

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

``Vidyalakshmi'' என்ற இணையதளத்தை அரசு தொடங்கியுள்ளது. வங்கிகள் அளிக்கும் கல்விக் கடன்கள் குறித்த தகவல்களை அறிவதற்கும், விண்ணப்பம் செய்வதற்கும், அரசின் கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கும் ஒற்றைச் சாளர தலமாக'' இது இருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு

ஏற்றுமதிகளில் கவனம் செலுத்தி நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைப்பது.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் முயற்சியாக, நாட்டின் ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்கு அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. புதிய சந்தை வாய்ப்புகள், புதிய பொருட்கள் உற்பத்திகளுக்கான வாய்ப்புகளைக் கண்டறிவது மற்றும் இந்தியாவுக்கான பாரம்பரிய சந்தைகள் மற்றும் பொருட்களின் பங்கே அதிகரிப்பது ஆகியவை இதில் அடங்கும். பன்முகத்தன்மை கொண்ட, விதி-அடிப்படையிலான உலக வர்த்தகத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதில், திருத்தப்பட்ட வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை கவனம் செலுத்துகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான வரி விகிதங்கள் மற்றும் நடைமுறைகள் திட்டம் ஜிஎஸ்டி மூலமாக அமலாக்கப்பட்டதால், ஏற்றுமதியாளர்களுக்கு கிடங்குகள் செலவு மற்றும் பரிவர்த்தனைகளில் பெருமளவு சேமிப்பு கிடைத்துள்ளது. உலகளவில் மதிப்புமிக்க சங்கிலித் தொடர்களில் இந்திய தொழில் துறையின் பங்கேற்பை அதிகரிப்பது, MSME-க்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பது, அதிக அளவில் தொழிலாளர்கள் ஈடுபடும் துறைகளை ஊக்குவிப்பது உள்ளிட்ட மற்ற நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு

இந்திய மொழிகளை முன்னிறுத்துதல் மற்றும் இந்தியாவின் அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் உரிய நடவடிக்கைகள் எடுத்துதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2012-ல் உள்நாட்டு மொழிகளை முன்னிறுத்தும் கமிட்டியை யுஜிசி அமைத்தது. அழிந்து கொண்டிருக்கும் மொழிகளை முன்னிறுத்தவும், அதில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் பல்கலைக்கழகங்களில், அழியும் நிலையில் உள்ள மொழிகளுக்கான மையம் உருவாக்கப்பட வேண்டும் என்று அந்தக் கமிட்டி பரிந்துரை செய்தது. அதற்கு 2015 ஆம் ஆண்டில் தான் அரசு நிதி ஒதுக்கத் தொடங்கியது. 2017-ல் இந்த மையங்கள் தொடங்க 9 பல்கலைக்கழகங்களுக்கு இறுதியாக ஒப்புதல் தரப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

பொது இடங்கள் மற்றும் போக்குவரத்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த கட்டமைப்பு வசதிகள்.

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

மாற்றுத் திறனாளிகளுக்கு பொது கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தொடர்ச்சியான உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016 நிர்ணயித்த 2019 ஜூன் மாதத்துக்குள் இதை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

அனைத்து தேசிய பாரம்பரியத் தளங்களின் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தலுக்குத் தேவையான ஆதாரவளங்கள் அளிப்பது.

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

கலாச்சார அமைசகத்தின் கீழ் உள்ள அருங்காட்சியகங்களின் தகவல்களை டிஜிட்டல் பதிவாக மாற்றுவது என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. 2017 செப்டம்பர் 27 ஆம் தேதி பாரம்பரியத்தைத் தத்தெடுத்தல் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அருங்காட்சியகங்கள், இயற்கை மரபுசார் தலங்கள் மற்றும் இதர சுற்றுலா தலங்களை, தனியார் / பொதுத் துறை நிறுவனங்கள் / அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தத்தெடுத்துக் கொள்ள, முதன்மையாக CSR-ன் கீழ் எடுத்துக் கொள்ள இந்தத் திட்டம் வகை செய்கிறது. சுற்றுலாத் தலங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் அழகுபடுத்தலுக்கு மத்திய நிதி உதவியை அளிக்க PRASAD திட்டம் செயல்படுகிறது. இதுவரையில் 15 மாநிலங்களில் மொத்தம் 24 திட்டங்களுக்கு, உத்தேச செலவினம் ரூ.727.16 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இவற்றுக்கு 2014-15, 2015-16, 2016-17, 2017-18 மற்றும் நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ.341.68 கோடி விடுவிக்கப் பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

சுற்றுச்சூழல் அனுமதிகளில் காலக்கெடுவிற்குள் வெளிப்படையாக முடிவெடுத்தல்.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், 2018ல், பரிவேஷ் (ஊடாடும், நாகரிக மற்றும் சுற்றுச்சூழல் ஒற்றை சாளர மையம் சார்புடைய செயல்திறன் மற்றும் பொறுப்பு வசதி) என்ற ஒற்றை சாளர அனுமதிப்பத்திர இணையத்தை, வெளிப்படையான சுற்றுச்சூழல் அனுமதிக்‍காக அறிமுகப்படுத்தியது.

மேலும் தகவல்கள்

நாடு முழுக்க விளையாட்டு அகாதெமி தொடங்குதல்

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

13 தேசிய விளையாட்டு அகாதெமிகள் தொடங்க திட்டமிடப்பட்டது. இருந்தபோதிலும் 2015-16 வரையில் 5 தேசிய விளையாட்டு அகாதெமிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு

பெரிய அளவிலான ``நதிகளை சுத்தப்படுத்தும் திட்டத்தை'' தொடங்குதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2014ல் நமாமி கங்கா திட்டத்துக்கு ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம், நதியை சுத்தம் செய்வதற்கான நிதி பயன்படுத்தப் படாதது, மேற்பார்வையிடலில் குறைபாடுகள் என தேசிய கங்கை நதி சுத்தப்படுத்தும் திட்டம் குறித்து தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி குறைகளை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு

`சேது சமுத்திரம் கால்வாய்' திட்டத்துக்கு ராமர் சேது கலாச்சார மற்றும் அமைவிட முக்கியத்துவத்தை ஆய்வு செய்வது.

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

ராமர் சேது பாதையைத் தவிர்க்கும் வகையில் ஆழ்கடலைத் தோண்டுவதற்கான மாற்றுப் பாதைக்கு அரசு இன்னும் ஒப்புதல் தரவில்லை. ராமர் சேது கட்டமைப்பிற்கு சேதம் ஏற்படுத்தாத வகையில், புதிய பாதைக்கான திட்டத்தை கப்பல் போக்குவரத்து அமைச்சகம் முன்வைத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு

`வளர்ச்சிக்கான இளைஞர்கள்' திட்டத்தைத் தொடங்குதல்

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

தேசிய இளைஞர் தலைவர்கள் திட்டத்தின் (NYLP) கீழ் 2014ல் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

நாடு முழுக்க இளைஞர் நாடாளுமன்றம் அமைத்தல்.

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

தேசிய இளைஞர் தலைவர்கள் திட்டத்தின் (NYLP) கீழ் 2014ல் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

தேசிய இளைஞர் ஆலோசனைக் கவுன்சில் அமைத்தல்

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

தேசிய இளைஞர் தலைவர்கள் திட்டத்தின் (NYLP) கீழ் 2014ல் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

சார்க், ஆசியான் போன்ற பிராந்திய கூட்டமைப்புகளை வலுப்படுத்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

சார்க், ஆசியான் ஆகிய இரண்டு உச்சி மாநாடுகளின், அனைத்து கூட்டங்களிலும் இந்தியா பங்கேற்று வருகிறது. ஆசியான்-இந்தியா வர்த்தகத்தின் நிலை மற்றும் ஒரு பரஸ்பர நன்மை வாய்ந்த பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு (RCEP) ஒப்பந்தத்தை உயர்த்துவதற்காக, இந்தியா, பணியாற்றி வருகிறது.

மேலும் தகவல்கள்

அனைத்து துறை சார்ந்த மதிப்பீடுகளுக்கு, தேசிய பாதுகாப்பு கவுன்சிலை மையமாக கொள்ள சீர்திருத்தம் செய்யவேண்டும். அத்தோடு, நிகழ்நேர உளவுத்துறையின் புலனாய்வு பரவலுக்கான பொறுப்பினையும் ஏற்க வேண்டும். டிஜிட்டல் மற்றும் இணைய பாதுகாப்பு, உந்துதல் பகுதியாகும்.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

முகவர்கள் இடையே உளவுத்துறை சேகரிப்பை ஒருங்கிணைத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை கையாள, தேசிய இணைய ஒருங்கிணைப்பு மையத்திற்கு, இந்த அரசு, 2015ல் ஒப்புதல் வழங்கியது. இந்தியாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையேயான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஒப்பந்தங்களை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையே செயல்படுத்தி வருகிறது. அதில் சில சர்வதேச திட்டங்களில், டிஜிட்டல் பாதுகாப்பும் அடங்கும். மத்திய அரசானது, தனது ஏனைய துறைகள் மற்றும் திட்டங்கள் மூலம் ‘இணைய ஆய்வு’ சார்ந்த பயிற்சி அமர்வுகளை நடத்துகிறது. அத்திட்டங்களில் சில, தகவல் பாதுகாப்பு கல்வி மற்றும் விழிப்புணர்வு இணையதளம், உள்-சான்று, காவலர்கள் பணியகத்தின், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான பயிற்சி பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணைய குற்றங்களை தடுப்பது, விசாரணை மையம் ஆகும்.

மேலும் தகவல்கள்

பயங்கரவாத தொடர்புடைய வழக்குகளின் விரைவான மற்றும் நியாயமான விசாரணைக்காக, பயங்கரவாத எதிர்ப்பு இயக்கத்தை புதுப்பிக்கவும், என்.ஐ.ஏ.-வின் பங்களிப்பை வலுப்படுத்தவும், ஒரு அமைப்பை உருவாக்‍குதல்.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2014ம் ஆண்டில், மொத்தமிருந்த 38ல், 9 நீதிமன்றங்கள், என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றங்களாக அறிவிக்‍கப்பட்டன. பயங்கரவாதம் / பாதுகாப்பு விஷயங்களில் மற்ற நாடுகளுடன் சேர்ந்து பணியாற்ற கூட்டு குழுக்கள் (JWGs) அமைக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. பரஸ்பர சட்ட உதவி (MLAT கள்) தொடர்பாக, பிற நாடுகளுடன், இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 2017ம் ஆண்டில், உள்துறை அமைச்சகத்தின் கீழ், தீவிரவாத எதிர்ப்பு பிரிவு, சைபர் மற்றும் தகவல் பாதுகாப்புப் பிரிவு ஆகியவை உருவாக்கப்பட்டன.

மேலும் தகவல்கள்

பல்வேறு களங்கள் மூலமாக கொள்கைகள் உருவாக்கம் செய்வதில் மக்களை தீவிரமாக பங்கேற்கச் செய்தல்.

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

மக்களை அரசுடன் இணைக்கும் MyGov என்ற இணையதள முனையத்தை 2014ல் அரசு தொடங்கியது. முக்கியமான கொள்கை சார்ந்த விஷயங்கள் குறித்து தங்களுடைய ஆலோசனைகளைக் கூறுவது, சிந்தனைகளைத் தெரிவிப்பது, செயல்பாடு குறித்த கருத்து தெரிவித்தல், ஆட்சி நிர்வாக நடைமுறை குறித்து கலந்துரையாடல்களில் பங்கெடுத்தல், இடப்பட்ட பணிகள், வாக்கெடுப்பில், பேச்சுகளில் பங்கேற்பதற்கு குடிமக்களுக்கு உதவிகரமாக இந்த வசதி அமைந்துள்ளது. MyGov மூலம் பெறப்படும் குடிமக்களின் ஆலோசனைகள் மற்றும் தகவல்கள் தொகுக்கப்பட்டு நிதி பட்ஜெட்கள், ரயில்வே பட்ஜெட்கள், தேசிய கல்விக் கொள்கை போன்றவற்றில் சேர்க்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு

நிறுவனக் கடன்கள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்வது

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

விவசாயிகளுக்கு தடைகள் இல்லாமல், சுமுகமாக கடன்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு, ஆண்டுதோறும் வங்கிகளுக்கு வேளாண்மைக் கடன்களுக்கு அரசு இலக்கு நிர்ணயிக்கிறது. வங்கிகள் தொடர்ச்சியாக இந்த இலக்குகளை விஞ்சி வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு

அனைத்து அரசுப் பணிகளையும் கட்டாயமாக டிஜிட்டல் மயமாக்கல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

பல்வேறு திட்டங்கள் மூலமாக டிஜிட்டல் மயமாக்கும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. டிஜிட்டல் இந்தியா தளம் பற்றி தெரிவித்தல் மற்றும் ஆலோசனை கூறும் வகையில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் 2015ல் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் கடிதங்கள் அனுப்பியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு

நமது பாதுகாப்பு படைகளில் அதிகரித்து வரும் ஊழியர்களின் பற்றாக்குறையினை அவசர அடிப்படையில் மற்றும் நேரகட்டுபாடு விதித்து அணுகுதல்.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

இது ஓர் தொடர்ந்து கொண்டிருக்கும் செயல்முறை. ஆட்பற்றாக்குறையினை குறைக்க ஏனைய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது இந்த அரசு. பாதுகாப்பு படைகள் பற்றிய ஒரு நீடிய பிம்பத்தை காண்பிக்க திட்டமிடல், தொழில் சந்தைகள் மற்றும் கண்காட்சிகளில் பங்கேற்பது, விளம்பர பிரச்சாரம் ஆகியன, நம் இளைங்கர்களின் மத்தியில் ஒரு விழிப்புணர்வை கொணர அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் சில. அத்தோடு, பாதுகாப்பு படைகளின் உத்தியோகத்தில் உள்ள நன்மைகளை, கவரும் வகையில் வெளிபடுத்த பல்வேறு முறைகளை கையாண்டுவருகின்றன. மட்டுமன்றி, பணி ரீதியான மற்றும் மன ரீதியான ஆலோசனை வழங்குவதற்கும், முக்கியத்துவம் கொடுக்கபடுகின்றது.

மேலும் தகவல்கள்

ஆரம்ப வயது முதலே நமது இளைங்கர்களின் திறமை மற்றும் திறனை மதிப்பிட்டு அதன்படி அவர்களை வளர்த்தல்.

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

இந்த அரசு, பள்ளி மாணவர்களின் கற்கும் திறனை மதிப்பிட, ‘தேசிய சாதனை கணக்கெடுப்பினை’ நடத்தி வருகிறது. 2017ல், இந்த அரசு ‘கெலோ இந்தியா’ என்ற திட்டத்தினை சீரமைத்தது. அதன் முதன்மை அம்சங்களில் ஒன்றானது, திறமையை அடையாளம் காணுதல் மற்றும் மேல்நோக்கிய வளர்ச்சியாகும். 2014 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், ‘தேசிய இளைஞர்கள் கொள்கை’ என்ற திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. தற்போதைய அரசு அதனை தொடர்ந்து நடத்துகிறது.

மேலும் தகவல்கள்

காலாவதியான மற்றும் ஒரே விஷயத்துக்கு உள்ள பன்மையான சட்டங்களை மறு ஆய்வு செய்து, அவற்றைக் குறைப்பது மற்றும் எளிமையாக்குவது.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

``காலாவதியான சட்டங்களை அடையாளும் காணுதல்'' திட்டம் முந்தைய அரசின் 19வது சட்ட ஆணையத்தால் மேற்கொள்ளப் பட்டது. ஆணையத்தின் பதவிக் காலம் முடிந்துவிட்டதால், அதன் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அந்தப் பணிகளைத் தொடர 20வது சட்ட ஆணையம் முடிவு செய்தது. ``காலாவதியான சட்டங்கள்: உடனடியாக ரத்து செய்யும் கட்டாயத் தேவை'' என்பது குறித்து அந்த ஆணையம் நான்கு அறிக்கைகள் தாக்கல் செய்தது. சட்டங்களை ரத்து செய்வதற்கு அந்த அறிக்கைகளில் பரிந்துரைகள் செய்யப்பட்டது. காலாவதியான சட்டங்களை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்வதற்கு 2014ல் இரு நபர் கமிட்டி ஒன்றை பிரதமர் அலுவலகம் நியமித்தது. மொத்தம் 1,824 சட்டங்களை ரத்து செய்ய வேண்டியிருப்பதாக அந்தக் கமிட்டி அடையாளம் கண்டறிந்தது. பெரிய அளவில் சட்டங்களை ரத்து செய்வதற்கு அப்போதிருந்து ஐந்து மசோதாக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. ரத்து செய்ய வேண்டும் என்று அடையாளம் காணப்பட்ட 1824 சட்டங்களில், 1428 சட்டங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு

சரக்கு விமான வசதிகளை நாடு முழுவதும் மேம்படுத்தல்

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தின் தரவுகளின்படி, 1972-73ல் 0.08 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த, இந்தியாவில் கையாளப்பட்ட விமான சரக்குகள், 2014-15ம் ஆண்டில், 20 மடங்கு அதிகரித்து 2.5 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளன.

மேலும் தகவல்கள்

ஊனமுற்றோரின் பாதுகாப்புக்காக பணியாற்றும் தன்னார்வ நிறுவனங்களுக்கு ஆதரவு மற்றும் நிதிஉதவி

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

அட்டவணைப்படுத்தப்பட்ட சாதிகள், பிற பின்தங்கிய சாதிகள், மூத்த குடிமக்கள், போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் மற்றும் குறைபாடு உள்ளவர்களுக்கு நலன் புரிய இயங்கும் அரசு சாரா நிறுவனங்களுக்கு இந்த அரசு நிதியுதவி அளித்து வந்துள்ளது. ‘ஊனமுற்றோருக்கு உபகரணங்கள் கொள்முதல் / பொருத்துதல் உதவி திட்டத்தின்’ கீழ் ஊனமுற்றோருக்கான துணை சாதனங்கள் மற்றும் உதவிகளை அளித்து செயல்படும் பல முகவர்களுக்கும் அரசு சாரா தன்னார்வ நிறுவனங்களுக்கும் இந்த அரசு நிதி வழங்குகிறது. 2018ல் இந்த அரசு, ‘ஊனமுற்றோருக்கான தீன்தயாள் புனர்வாழ்வு திட்டத்தின்’ வழிகாட்டுதல்களை திருத்தம் செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஊனமுற்றோர்களின் புனர்வாழ்வு சார்ந்த திட்டங்களை செயல்படுத்தும் அரசு சாரா தன்னார்வ நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கபடுகிறது.

மேலும் தகவல்கள்

அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகள் துரித விசாரணை

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க 12 விரைவு நீதிமன்றங்களை அமைப்பது என்ற மத்திய அரசின் திட்டத்துக்கு 2017 இறுதியில் உச்சநீதிமன்றம் பச்சைக் கொடி காட்டியது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள 1,581 வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது. 2018 ஜூலை நிலவரப்படி, 1349 வழக்குகள் துரித விசாரணைக்காக இந்தச் சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப் பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மாணவிகள், பழங்குயினர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கென சிறப்புத் திட்டம் உருவாக்குதல்

வகை: பெண்கள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

பெண் குழந்தைகளை கவனத்தில் கொண்டு அரசு திட்டங்களை உருவாக்கியுள்ளது, முந்தைய திட்டங்களையும் தொடர்கிறது. குறைவான கல்வி அறிவு உள்ள மாவட்டங்களில் பழங்குடியினர் (ST) மாணவிகளின் கல்விய பலப்படுத்துவதற்கான திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்துகிறது. எஸ்.டி. மாணவிகள் & மாணவர்களுக்கான விடுதிகள் , மலைவாழ் பகுதிகளில் ஆசிர பள்ளிகள் திட்டம் போன்றவை பழங்குடியின மாணவிகளுக்கு பயன் தருபவையாக உள்ளன. 2015 ஆம் ஆண்டின் Beti Bachao Beti Padhao திட்டம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பழங்குடியினர் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் பயன் கிடைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. பெண்கள் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுதலைத் தடுக்கவும், அதில் சிக்கியவர்களை மீட்கவும் உஜ்ஜவலா திட்டத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் தொடர்ந்து செயல்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு

கிராமப்புற வீடுகள் ஒவ்வொன்றிலும் முழுமையான கட்டமைப்பு வசதிகள்

வகை: பெண்கள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2014ல் தொடங்கப்பட்ட ஸ்வச் பாரத் திட்டம், கிராமப் பகுதிகளில் கழிப்பறைகள் கட்டுதல், மின்சார வசதி ஏற்படுத்துதல், தூய்மையான குடிநீர் கிடைக்க உத்தரவாதம் அளித்தல் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லும் திட்டமாக உள்ளது. அனைத்து அம்சங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் 2019 அக்டோபருக்குள் அனைத்து வீடுகளுக்கும் அத்தியாவசிய வசதிகள் அனைத்தையும் செய்து முடிப்பது என்ற இலக்கை எட்டுவது சாத்தியப்படாது என்று தெரிகிறது. 2018 டிசம்பர் மாத நிலவரத்தின்படி, 71.8% கிராமப்புற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதி கிடைத்துள்ளது; 82.7% கிராமப்புற வீடுகளில் தனி கழிப்பறைகள் உள்ளன; 32% கிராமங்கள் மட்டுமே திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாதவையாக கருதப் படுகிறது. 80.3% கிராமப்புற வீடுகளுக்கு தூய்மையான குடிநீர் வசதி கிடைக்கிறது. ஆனால் 56% பேருக்கு வீடுகளில் குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கிறது. அனைத்து சென்சஸ் கிராமங்களிலும் மின்சார வசதி கிடைத்திருப்பதாக, 2018 ஏப்ரலலில், இந்தியா அறிவித்தது. வீடுகள் அளவில் அனைவருக்கு மின்சாரம் என்ற நிலையை 2019 மார்ச் 31 க்குள் எட்ட வேண்டும் என்று திட்டமிடப் பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

லோக் அதாலத்கள், பேச்சுவார்த்தை மற்றும் சமரசத் தீர்வு மையங்கள் போன்று, சர்ச்சைகளுக்கு மாற்றுவழியில் தீர்வுகாணும் வழிமுறைகளை உருவாக்க சிறப்பு முக்கியத்துவம் அளிப்பது.

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

பேச்சுவார்த்தை மற்றும் சமரசத் தீர்வு மையங்கள் (திருத்த) மசோதா 2018ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 1996 சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் பேச்சுவார்த்தை நடைமுறையை மக்கள் தரப்புக்கு உகந்த வகையில், குறைந்த செலவு பிடிக்கக் கூடியதாக இருப்பதில் கவனம் செலுத்துவதாகவும், பேச்சுவார்த்தை வழக்குகளை உரிய காலத்தில் பைசல் செய்வதை உறுதி செய்யும் வகையிலும் உள்ளது. 2015ல் இருந்து தேசிய லோக் அதாலத்கள் மூலம், வழக்குகளுக்கு முந்தைய மற்றும் நிலுவையில் உள்ள 4,09,35,185 வழக்குகள் பைசல் செய்து வைக்கப் பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு

பிராந்திய கிசான் டி.வி. சேனல்கள் அமைப்பது குறித்து பரிசீலிப்பது

வகை: வேளாண்மை நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

விவசாயிகளுக்குப் பயன்தரும் வகையில் தூர்தர்ஷன் கிஷான் சேனலை பாஜக அரசு 2015-ல் உருவா்கியது. 2014-15 முதல் 2016-17 வரையில் இதற்காக ரூ.122.25 கோடி ஒதுக்கப்பட்டது. 2017-18ல் ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் (IARI), இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சில் (ICAR), இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மற்றும் தேசிய பால் வள மேம்பாட்டு வாரியம் (NDDB) உள்ளிட்ட பல்வேறு வேளாண்மை அமைப்புகளிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் இந்தச் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மாநில அளவில் இதுபோன்ற எந்தச் சேனலும் தொடங்கப் படவில்லை.

மேலும் விவரங்களுக்கு

சொத்துரிமை, திருமண உரிமை, சேர்ந்து வாழும் உரிமைகளில் பாலின பாகுபாடுகள் களையப்படும்.

வகை: பெண்கள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

பெண்களுக்கான தேசியக் கொள்கையை உருவாக்க வரைவு ஒன்றை அமைச்சர்களைக் கொண்ட குழு மத்திய அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளது. விதவையர், கணவரைப் பிரிந்து வாழ்வோர், விவாகரத்து பெற்றோர், திருமணம் செய்து கொள்ளாதோர் மற்றும் பெண்ணை தலைவராகக் கொண்ட குடும்பங்கள் உள்ளிட்ட ஆதரவற்ற பெண்கள், வீடுகளில் வாழும் தனி பெண்கள் உள்ளிட்ட, தனித்து வாழும் பெண்களின் சிறப்புத் தேவைகளுக்குத் தீர்வு காண்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் பற்றி வரைவுக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

IPR வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றங்கள்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

தொழில் உற்பத்திக் குறியீட்டைப் பொருத்த வரையில் 2018-19 ஆம் ஆண்டு ஏப்ரல் - அக்டோபர் மாத காலத்தில் 5.6 சதவீத வளர்ச்சி (உத்தேசமாக) பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டில் இதே காலக்கட்டத்தில் இது 2.1 சதவீத வளர்ச்சியாக இருந்தது. `ஸ்டார்ட் அப் இந்தியா', `தொழில் தொடங்குவதை எளிதாக்குதல்', மாற்றி அமைக்கப்பட்ட தொழில் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், தொழில் சீர்திருத்த நடவடிக்கை திட்டம், அறிவுசார் சொத்துரிமை (IPR) கொள்கை போன்ற திட்டங்கள் மூலம் உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கம் தருவதற்கு ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. இவை தவிர, வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) கொள்கை மற்றும் நடைமுறைகள் முன்னேற்றகரமான வகையில் எளிமையாக்கப்பட்டு, விதிகள் தளர்த்தப் பட்டுள்ளன. அக்டோபர் 2017க்கான தொழிலாளர் மையத்தின் காலாண்டு வேலைவாய்ப்பு கணக்கெடுப்பின் (QES) படி, உறுபத்தித் துறையில் ஜூலை 2017 முதல் அக்டோபர் 2017 வரையில் 89,000 வேலைகள் உற்பத்தித் துறையில் அதிகரித்துள்ளனதாகக் கூறப்பட்டுள்ளது. அமைச்சகத்தில் பல தருணங்களில் தொழிலாளர்கள் காலத்துக்கு ஏற்ப தொழிலை மாற்றிக் கொள்வதால் எண்ணிக்கை சரிந்திருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு

மகளிர் விடுதிகளை மேம்படுத்துதல் / விரிவுபடுத்துதல்

வகை: பெண்கள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

மகளிர் விடுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும், குழந்தைப் பராமரிப்பு, வாஷிங் வசதிகள் போன்றவை உள்ளிட்ட வசதிகளை அளிக்கும் வகையில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதிகள் திட்டத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது. 2017-18 ஆம் நிதியாண்டிற்கு 190 கூடுதல் விடுதிகள் திறக்க வேண்டும் என உத்தேசிக்கப் பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களை ஆதரிக்க வணிக நிறுவனங்களை ஊக்குவித்தல்

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2015 ம் ஆண்டில், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், தங்கள் நிறுவன CSR நிதியின் ஒரு பகுதியை, விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கு செலவிடுமாறு, பெரு நிறுவனங்களுக்‍கு அழைப்பு விடுத்தது. 2014ல், CSR நிதியின்கீழ் விளையாட்டுகளை ஊக்‍குவிக்‍க ரூ.53.36 கோடி செலவிடப்பட்டது. அது 2015ல் ரூ.134.76 கோடியாக அதிகரித்தது. 2016ல், விளையாட்டு மேம்பாடு மற்றும் ஊக்குவிப்புக்‍கு, பெரு நிறுவனங்கள், ரூ.51.73 கோடி நிதியை பங்களிப்பாக அளித்தன.

மேலும் தகவல்கள்

கல்விக்கான உரிமை மற்றும் உணவுக்கான உரிமைகளை, பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அமல்படுத்தபடுவதை உறுதி செய்ய வேண்டும்.

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

கல்வி உரிமை சட்டம், 2009, அமல்படுத்தபடுவதை, இந்த அரசு அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டும், பரிசீலனை செய்தும், கண்காணிக்கிறது. ஒவ்வொரு வருடமும், கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை (UDISE), மூலம் கல்வி முடிவுகளின் வருடாந்திர தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. சர்வ சிக்ஷா அபியான் ஒவ்வொரு வருடமும், ஒரு கூட்டு மறு ஆய்வு மையம் (JRM) மூலம், இரண்டு முறை, பரிசீலனைக்கு உட்படுத்தபடுகிறது. கற்றல் அளவுகளில் உள்ள போக்குகளை மதிப்பாய்வு செய்ய, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி தேசிய கவுன்சிலானது, தேசிய சாதனைகள் கணக்கெடுப்பினை நடத்துகிறது. உணவு பாதுகாப்புச் சட்டத்தினை கண்காணிப்பதற்கும், செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கும், மாநில உணவு கமிஷனை (SFC) ஒவ்வொரு மாநிலத்திற்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்குகிறது.

மேலும் தகவல்கள்

தோட்டக்கலை, மலர் சாகுபடி, செயற்கை முறையில் மீன்வளர்ப்பு மற்றும் தேனீ வளர்ப்பினை ஊக்குவித்தல்.

வகை: வேளாண்மை நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

தோட்டக்கலை துறையின் முழுமையான வளர்ச்சிக்காக, 2014-15-ம் ஆண்டில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டமானது நாட்டில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்காக, 2018ல், ரூ.2391.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதாவது, 2017ல் செய்யப்பட்ட ஒதுக்கீட்டை விட ரூ.192.9 கோடி அதிகம். 2015-16ஆம் ஆண்டு, பஞ்சாப் வேளாண் பல்கலைகழகத்தில் தோட்டக்கலை சார்ந்த முதுகலை பட்டப்படிப்புக்கான ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தை நிறுவ முன்மொழியப்பட்டது. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம், தேசிய தோட்டக்கலை வாரியம், ராஷ்ட்ரிய க்ரிஷி விகாஸ் யோஜனா, நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கம், பிரதான் மந்திரி சிஞ்சை யோஜனா மற்றும் பல அமைப்புகளின் மூலம் தாவர வளர்ப்புக்கும், தேனீ வளர்ப்புக்கும், அரசாங்கம், நிதியுதவி வழங்கி வருகிறது. மலர் சாகுபடி ஏற்றுமதி நடவடிக்கைகள், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) மூலம் ஊக்குவிக்கப்படுகிறது.

மேலும் தகவல்கள்

வலுவான கடன் மற்றும் சந்தை இணைப்புகளால், விவசாயம் மற்றும் அதன் கூட்டுத் தொழில்களை நவீனப்படுத்துதல்.

வகை: வேளாண்மை நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

விவசாய சரக்குகளுக்கான ஒருங்கிணைந்த தேசிய சந்தையை உருவாக்க, ஆன்லைன் வர்த்தக நுழைவாயிலாக, 2016-ம் ஆண்டு தேசிய வேளாண்மை சந்தை(eNAM) அமைக்கப்பட்டது. 2018 வரை, 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த, 585 ஒழுங்குமுறை மொத்த விற்பனைக் கூடங்கள், தேசிய வேளாண்மை சந்தை மூலம் இணைக்‍கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு, மேம்படுத்தப்பட்ட சந்தைப்படுத்தல் வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக, "விவசாய பொருட்கள் மற்றும் கால்நடை சந்தைப்படுத்தல் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) சட்டம்2017-ஐ", அரசு, 2017ம் ஆண்டு உருவாக்‍கியது. நுகர்வோருடன் விவசாயிகளை நேரடியாக இணைப்பதே இதன்நோக்‍கம்.

மேலும் தகவல்கள்

குழுஅடிப்படையிலான சேமிப்பு அமைப்புகள் உருவாக்கம்.

வகை: வேளாண்மை நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

ரூ.6000 கோடி நிதி ஒதுக்‍கீட்டில், 2016-2020ம் ஆண்டுகளுக்‍கான காலத்தில், பிரதான் மந்திரி கிசான் சம்பாடா யோஜனா (PMKSY) திட்டத்தை, உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம் நடைமுறைப் படுத்திவருகிறது. வேளாண்-செயலாக்க அமைப்புகள் மூலம், காய்கறிகள், பழங்கள் போன்ற பொருட்களுக்கு, நவீன சேமிப்பகங்ளை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்‍கிய நோக்‍கம். 2018 ஜூலை வரை, 100 வேளாண் செயலாக்க அமைப்புகள் மாநிலங்களுக்‍கு இடையே உருவாக்‍கப்பட்டுள்ளன. நாட்டில், வேளாண் செயலாக்க அமைப்புகளை உருவாக்‍க, தகுதியான முதலீட்டாளர்கள்/தொழில்முனைவோர் ஆகியோரிடமிருந்து ஆன்லைன் பரிந்துரைகளை வரவேற்பதாக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் தகவல்கள்

துறைமுகங்களை கடலோர நிலப்பகுதிகளின் வழியாக ரயில் வழித்தடம் மூலம் இணைத்தல்.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

மார்ச்22, 2018ம் ஆண்டுவரை, ரூ.2.65 கோடி மதிப்புள்ள 222 துறைமுக இணைப்பு திட்டங்கள், சாகர்மாலா திட்டத்தின்கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில், 14 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. 69 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில பொதுப்பணி துறைகள், துறைமுகங்கள், இந்திய துறைமுக ரயில் கழகம் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் போன்ற பல்வேறு துறைகளால் செயல்படுத்தப்பட்டன.

மேலும் தகவல்கள்

வேளாண் விளை பொருள்கள் வீணாவதைக் குறைத்து, வருவாய்கள் மற்றும் ஆபத்து நிவாரண வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் நுகர்வோர் - விவசாயிகள் சந்தை திட்டத்தை அறிமுகம் செய்வது

வகை: வேளாண்மை நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

நுகர்வோருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது, வருவாயைப் பெருக்குவது, ஆபத்து நிவாரண வாய்ப்புகளை விவசாயிகள் அதிகரித்துக் கொள்வதற்கு பல்வேறு திட்டங்களை அரசு உருவாக்கியது. விவசாயிகளுக்கு ஆன்லைன் வர்த்தக முனையமாக 2016-ல் தேசிய வேளாண்மைச் சந்தை (eNAM) தொடங்கப்பட்டது. விவசாயிகள் நேரடியாக நுகர்வோருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக 2017 ஆம் ஆண்டில் ``வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடைகள் விற்பனை (ஊக்குவித்தல் மற்றும் வசதிகள் செய்தல்) சட்டத்தை'' அரசு அமல்படுத்தியது. நுகர்வோருக்கும், மொத்தக் கொள்முதல் செய்வோருக்கும் விவசாயிகள் நேரடியாக தங்கள் பொருட்களை விற்க உதவி செய்யும் வகையில், தற்போதுள்ள ஊரக சந்தைகளை கிராம வேளாண் சந்தைகளாக (GrAM-கள்) மாற்றுவது என்று அரசு முடிவு செய்துள்ளது. 2016 கரீப் பருவத்தில் இருந்து பயிர்க் காப்பீட்டுத் திட்டமாக பிரதமரின் பசல் பீமா திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. விவசாயிகள் வருமானத்தைப் பெருக்க பெரிய உத்வேகம் அளிக்கும் வகையில் 2018-19 பருவத்துக்கு சில வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்சக் கொள்முதல் விலையை (MSP) அரசு உயர்த்தியுள்ளது. 2019 மத்திய பட்ஜெட்டில் ``பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதி (PM-KiSaN)'' திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயக் குடும்பங்கள் அனைத்திற்கும், வயது அடிப்படை வித்தியாசம் ஏதும் இல்லாமல் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும்

மேலும் விவரங்களுக்கு

மூத்த குடிமக்களின் சுகாதார பாதுகாப்பு, ஓர் சிறப்பு கவனப் பகுதியாக கருதப்படும்.

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2010 முதல், வயதான மக்களின் பல்வேறு சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக, முதியோரின் ஆரோக்கிய பராமரிப்புக்கான தேசிய திட்டத்தை (NPHCE), சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், தொடர்ந்து பின்பற்றி வருகிறது. 2017ல், ‘ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா’ (RVY) என்ற திட்டம், மூத்த குடிமக்களுக்கு உதவவும், வாழ்க்கையில் உதவும் சாதனங்களை வழங்குவதற்கான ஒரு நோக்கத்துடன் துவக்கப்பட்டது. அதாவது, நடைபயிற்சி குச்சிகள், முழங்கை ஊன்றுக்கோல், வாக்கர்ஸ் / ஊன்றுக்கோள், மும்முனை தாங்கிகள் / நாற்கர தாங்கிகள், கேட்க உதவும் உபகரணங்கள், சக்கர நாற்காலிகள், செயற்கை துலக்குதல் மற்றும் இலவச கண்ணாடிகளை, வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் மூத்த குடிமக்களுக்கு வழங்குவது. இந்த அரசாங்கம் மூத்த குடிமக்களுக்கான நலன்புரி நிதியத்தையும் அமைத்துள்ளது.

மேலும் தகவல்கள்

அசாமில் வெள்ளக் கட்டுப்பாடு பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் மற்றும் நதி நீர் மேலாண்மை.

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

வெள்ள பாதிப்புகளை குறுகிய கால மற்றும் நீண்டகால அடிப்படையில் கையாள்வதற்காக வட கிழக்கு மாநிலங்கள் அனைத்திற்கும் ரூ.2,350 கோடி மதிப்பிலான திட்டத்தை 2017ல் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு

எண்ணெய், எரிவாயு, புனல் மின் சக்தி, கடல் ஆற்றல், நிலக்கரி மற்றும் அணு மின் ஆற்றல் மூலங்களை அதிகப்படுத்துதல்

வகை: சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

ஆற்றல் தொடர்பாக, அரசு, பல திட்டங்கள் மற்றும் கொள்கைகளை முன்னெடுத்துள்ளது. 2017-ம் ஆண்டில், தேசிய ஆற்றல் கொள்கைக்‍கு, நிதி ஆயோக் அமைப்பு, ஒரு வரைவு திட்டத்தை வெளியிட்டது. தேசிய கடல் நீர் காற்றாலை கொள்கை 2015ல் அறிவிக்கப்பட்டது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திகளின் தர நிர்ணயத்திற்காக, 2017ம் ஆண்டில், ஒரு புதிய கொள்கையை அரசு வெளியிட்டது. 2019 ஜனவரி 1ம் தேதிவரை, நாட்டில் 37 நீர்வள மின் ஆற்றல் திட்டங்களுக்‍கான பணிகள் நடைபெற்றன. அணுசக்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து (JVC), அணுசக்‍தி ஆலைகளை நிறுவ, அணுசக்‍தி சட்டத்தில், 2015ம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது

மேலும் தகவல்கள்

நிலக்கரி, தாதுக்கள், ஸ்பெக்ட்ரம்போன்றமுக்கியமான இயற்கை வளங்களின் மீது தேசிய கொள்கைகளை அமைத்தல்.

வகை: சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழங்குவதற்காக 2015ம் ஆண்டில் நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்புஏற்பாடுகள்) சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியது. நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்புஏற்பாடுகள்) சட்டம் 2015ன் கீழ், (ஜனவரி 2019 வரை) சுரங்கங்கள் ஒதுக்கீட்டின் மூலம் ரூ.6438.94 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் (அபிவிருத்தி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957ல், நிலக்கரி தொகுதி ஒதுக்கீடு விதிகள், 2017ம் ஆண்டு சேர்க்கப்பட்டன. புதிய சட்ட திருத்தங்கள், சட்ட விரோத சுரங்கங்களுக்‍கு அபராதம் விதிக்கின்றன. சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகளை கையாளுவதற்காக, அரசாங்கம், 2015ம் ஆண்டு, சுரங்க கண்காணிப்பு அமைப்பை (MSS) அறிமுகப்படுத்தியது. 2017ம் ஆண்டு நவம்பர் மாதம், கனிம ஏல விதிகள் சட்டம் 2015ல், சுரங்க அமைச்சகம் திருத்தம் செய்தது.

மேலும் தகவல்கள்

இந்தியா - வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணி

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

இந்திய - வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட 3326 கிலோ மீட்டர் நீளத்தில், 2746.44 கி.மீ. நீளத்துக்குப் பணிகள் முடிக்கப் பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு

முன்னுரிமை அடிப்படையில் அமைக்கப்படும் மாசு கட்டுப்பாட்டு வழிமுறைகள்

வகை: சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

மாசுபாடு இல்லாத சுற்றுச்சூழலை ஏற்படுத்த, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதுடன், மாநிலங்களுக்கு நிதி உதவியும் அளித்து வருகிறது. 2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய சுற்றுச்சூழல் காற்று கண்காணிப்பு திட்டம், தொடர்ச்சியான சுற்றுச்சூழல் காற்று கண்காணிப்பு நிலையங்கள் நிறுவுதல், தேசிய நதி பாதுகாப்பு திட்டம், கங்கை நதி தூய்மை திட்டம் ஆகியவை அவற்றில் அடங்கும். சுத்திகரிப்பு, சிஎன்ஜி, எல்பிஜி போன்று மாற்று எரிபொருட்கள் பயன்பாடு, உயிரி எரிபொருளை எரிக்கத் தடை போன்ற பல்வேறு வழிமுறைகளில், காற்று மாசுபாட்டை குறைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2017ம் ஆண்டில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை அமைச்சகத்தின் மூலம் "நீர் தர கண்காணிப்பு வழிகாட்டுதல்கள்" வழங்கப்பட்டன. 2015ம் ஆண்டில் தேசிய காற்று தரக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில், பயிர்களின் தேவையில்லாத பொருட்களை எரிப்பதனால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்க, 2018-19 மற்றும் 2019-20 ஆண்டுகளில், வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் தகவல்கள்

செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல்

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

விவசாய மதிப்பீடு மற்றும் பேரழிவு ஆபத்து குறைப்பு ஆகியவற்றிற்கு செயற்கைக்கோள் தரவு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு இஸ்ரோ உதவி வருகிறது. நாட்டின் வன வளங்களை கண்காணிக்க செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது இந்தியாவின் வன ஆய்வு. அரசு மற்றும் பொது நிர்வாகத்திற்காகா விண்வெளி தொழில்நுபட்த்தை மேம்படுத்த 2015ல் தனிக்குழு அமைக்கப்பட்டது. இஸ்ரோவும் இதனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. 158 திட்டங்களில் 94 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் இருந்து வரும் அகதிகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது.

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் (PoK) இருந்து குடிபெயர்ந்து வந்து நாட்டில் வாழ்பவர்களுக்கான மேம்பாட்டுக்கு ரூ.2,000 கோடி மதிப்பிலான பணிகளுக்கு 2016ல் அரசு ஒப்புதல் அளித்தது.

மேலும் விவரங்களுக்கு

வன உயிரின பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கான மாதிரி வழிமுறைகள் வகுத்தல்

வகை: சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

வனவிலங்கு வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு மையத்திற்கு, 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கு அப்பாற்பட்டு, 2017-18 முதல் 2019-20ம் ஆண்டு வரையிலான காலங்களில், மத்திய அரசின் ஒரே குடை திட்டத்தின் கீழ் நிதியுதவி தொடர்ந்து அளிக்கப்படுகிறது. 2017-18 முதல் 2019-20ம் ஆண்டு வரையிலான, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடான ரூ. 1731.72 கோடியில் (புலித் திட்டத்திற்கு ரூ.1143 கோடி, வன உயிரின அபிவிருத்திக்கு ரூ.496.50 கோடி, யானை திட்டத்திற்கு ரூ.92.22 கோடி) என வரையறுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், நாடு முழுவதும், வன உயிரின பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மேலாண்மைக்கான, மூன்றாவது தேசிய வனவிலங்கு நடவடிக்கைத் திட்டத்தை (2017-2031) வெளியிட்டது.

மேலும் தகவல்கள்

மீள்காடுவளர்ப்பு, வேளாண்வனவியல், சமூகவனவியல் ஆகியவற்றில் குடிமக்‍களின் பங்களிப்பை சில குறிப்பிட்ட திட்டங்கள் மூலம் ஊக்‍குவித்தல்

வகை: சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சகம், 2018ம் ஆண்டில் ஒரு புதிய வரைவு தேசிய வனக்கொள்கையை உருவாக்கியது, இது, நிலையான காடு மேலாண்மை மூலம் காலநிலை மாற்றத்தை குறைக்க உதவுகிறது. காடுகள் மேலாண்மையை இது வலியுறுத்துகிறது. பசுமை இந்தியாவுக்‍கான(GIM) தேசிய திட்டம் 2012ல் தொடங்கப்பட்டது, ஆனால் 2015-16ம் ஆண்டில்தான் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. நாட்டில் காடுகளை அதிகரிப்பதும், காடுகளின் தரத்தை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்‍கியநோக்‍கம். வேளாண் வனவியல் மற்றும் சமூக வனவியலை ஊக்‍குவிக்‍க, தேசிய பசுமை திட்டத்தின் ஒரு அங்கம் செயல்படுகிறது.

மேலும் தகவல்கள்

அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் சுகாதாரக் காப்பீடு

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

கட்டடங்கள் மற்றும் இதர கட்டுமான (BOC) தொழிலாளர்கள் குடும்பத்தினரின் நலன்களுக்காக இலவசக் காப்பீட்டு வசதி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1000, பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை, வரைவு முன்மாதிரித் திட்டத்தின் கீழ் மருத்துவச் செலவுகளைத் திருப்பி அளித்தல் திட்டங்களை தொழிலாளர் நல அமைச்சகம் முன்வைத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு

ஆதார வரைபடம், ஆய்வு மற்றும் மேலாண்மை, தொழில்நுட்ப பயன்பாடு மூலம் கடைபிடிக்‍கப்படும்

வகை: சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

தேசிய இயற்கை வள மேலாண்மை அமைப்பின் (NNRMS) திட்டத்தின் கீழ், அரசாங்கம், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நாட்டின் இயற்கை வளங்களை மதிப்பீடு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு மானியம் வழங்குகிறது. நீர்வளம் குறித்த வலுவான தகவல்களை மேம்படுத்த, நீர்வளம், நதி அபிவிருத்தி மற்றும் கங்கை புத்துயிர் அமைச்சகம், நீர் வள தகவல் அபிவிருத்தி (DWRIS) திட்டத்தை தொடர்கிறது. விவசாய மதிப்பீடு மற்றும் பேரழிவு ஆபத்து குறைப்புக்‍கு, செயற்கைக்கோள் தரவு பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் வன வளங்களை கண்காணிக்க, இந்திய வன ஆய்வுமையம், செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. 2016-17 ஆண்டுகளில், இந்தியாவின் புவியியல் ஆய்வு நிறுவனம்(GSI), நாட்டின் பல்வேறு பகுதிகளில், 194 கனிம ஆய்வு திட்டங்களை மேற்கொண்டது. வளங்கள் குறித்த ஆய்வுக்கு, ஒரு சக்தி வாய்ந்த இமேஜிங் அமைப்பான Resourceat-2A என்ற செயற்கைக்கோள், 2016 ஆம் ஆண்டில் இஸ்ரோ மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

மேலும் தகவல்கள்

அனைத்து தேசிய பாரம்பரிய தளங்களின் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பிற்கு பொருத்தமான வளங்களை வழங்குதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

கலாச்சார அமைச்சகத்தின் கீழ் அனைத்து அருங்காட்சியகங்களின் தொகுப்புகளும் டிஜிட்டல் முறைப்படுத்தப்பட்டுள்ளன. பாரம்பரியங்களை தத்தெடுக்‍கும் திட்டம் 2017ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. தனியார் / பொது கம்பெனிகள் / நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் ஈடுபாடு மூலம், நினைவுச் சின்னங்கள், இயற்கை பாரம்பரிய தளங்கள் மற்றும் பிற சுற்றுலா தளங்கள், பிரதான CSR திட்டத்தின் கீழ் தத்தெடுக்‍கப்படுகின்றன. உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சுற்றுலா இடங்களை அழகுப்படுத்த, PRASAD திட்டம் மூலம் மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. 15 மாநிலங்களில் மொத்தம் 24 திட்டங்களுக்கு இன்றுவரை ரூ.727.16 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு அனுமதி அளிக்‍கப்பட்டுள்ளது. அத்துடன், 2014-15, 2015-16, 2016-17, 2017-18 மற்றும் தற்போதைய நிதியாண்டில் இந்த திட்டத்திற்காக ரூ.341.68 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தகவல்கள்

அயோத்தி ராமர் கோவில் பிரச்னையில் தீர்மானத்தை நோக்கி நகர்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

சர்ச்சைக்‍குரிய அயோத்தி நிலத்தை, சம்மந்தப்பட்ட மூன்று பிரிவினரும் சரிசமமாக பிரித்துக்‍கொள்ள உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் தொடர்பாக உச்சநீமின்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்‍கு, எட்டு ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ளது. 2019 ஜனவரி 29ம் தேதி திட்டமிடப்பட்ட விசாரணை, ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் தகவல்கள்

எதிர்மறை அல்லாத மற்றும் இணக்கமான வரி சூழ்நிலையை உருவாக்குதல்

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

பல மறைமுக வரிகளை, ஒற்றை மறைமுக வரி மூலம் ஜி.எஸ்.டி. நீக்கிவிட்டது. ஆன்லைன் முனையங்கள் மூலமாக வரி செலுத்துவதை அரசு எளிமையாக்கியுள்ளது. 2017 ஆகஸ்ட்டில் மேலும் 4 அட்வான்ஸ் விலை நிர்ணய ஒப்பந்தங்களை (APA-கள்) மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) உருவாக்கியுள்ளது. சர்வதேசப் பரிவர்த்தனைகளுக்கான விலைகளை முன்கூட்டியே நிர்ணயிப்பதில் வரி செலுத்துபவர்களுக்கு, நிச்சயமான ஒரு நிலையை அளிப்பதாக APA திட்டம் இருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு

கீழ் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்‍குதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

காலிபணியிடங்களை நிரப்புவதற்காக, அனைத்து உயர் நீதிமன்றங்களும் 2018-19ஆம் ஆண்டிற்கான திட்டங்களைப் பகிர்ந்து கொள்ளும்படி நீதித்துறை ஆணையிட்டிருந்தது. மாவட்டம் மற்றும் துணை நீதிமன்றங்களில், டிசம்பர் 2013 ல்,19518ஆக அனுமதி அளிக்‍கப்பட்டிருந்த நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை, 2018 மார்ச் மாதம் 22,545 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் மற்றும் துணை நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை டிசம்பர் 2013ல், 15115 ஆக இருந்தது. அது, 2018 மார்ச் மாதம் 17,109 ஆக அதிகரித்துள்ளது. 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை, மாவட்டம் மற்றும் துணை நீதிமன்றங்களில், 17836 நீதிமன்ற அறைகள் இருந்தன. தற்போது, 2824 அறைகளுக்‍கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் தகவல்கள்

நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப அதிக முன்னுரிமை

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில், நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப ஏற்படும் தாமதம் குறித்து, பணியாளர், பொதுமக்கள் குறைபாடுகள், சட்டம் மற்றும் நீதி ஆகியவற்றின் நிலைக்குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், நீதித்துறையின் தற்போதைய குறைபாடு வெளிச்சத்துக்கு வந்தது. நிர்வாகம் மற்றும் நீதித்துறைக்கு இடையேயான முரண்பாட்டு தெரியவந்தது. அந்த முரண்கள் இன்னும் முடிவுக்‍கு வரவில்லை. அரசியலமைப்பு (தொண்ணூறு ஒன்பதாவது திருத்தம்) சட்டம் 2014 மற்றும் தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணைய சட்டம் 2014 ஆகியவை 2015ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தன, ஆனால் அவை உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

மேலும் தகவல்கள்

அனைத்து அரசு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்‍கு, திறன்ஆய்வு, சமூக மற்றும் சுற்றுச்சூழல் தணிக்கை ஆகியவற்றை கட்டாயப்படுத்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

பொதுமக்‍களின் குறைகளை நிவர்த்தி செய்யவும், அரசாங்கத்தின் முக்கிய திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை கண்காணித்து, திறன்ஆய்வு செய்யவும், 2015 ஆம் ஆண்டில், PRAGATI என்ற திட்டத்தை, அரசு, அறிமுகப்படுத்தியது. உள்தணிக்கை முறையை மேம்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்காக, கிராமப்புற மேம்பாட்டுத் துறை நிபுணர் ஆலோசனை குழு(EAG), 2017 ல் அமைக்‍கப்பட்டது. ஏறக்‍குறைய மத்திய அரசின் அனைத்து திட்டங்கள் மேம்பாட்டு ஒருங்கிணைப்பை உறுதி செய்ய, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு(DISHA), 2016ல் அமைக்கப்பட்டது.

மேலும் தகவல்கள்

கிராமப்பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளை உருவாக்குதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதம் சட்டம் (MGNREGA), தீன்தயால் அந்த்யோதயா யோஜனா-தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம்(DAY-NRLM) ஆகியவை, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை வழங்குகின்றன. திருத்தப்பட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்கள், 2018ன் தீன்தயால் அந்த்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ் தகவல் மற்றும் தகவல்தொடர்பை பட்டியலிடுகின்றன. 2014 ஆம் ஆண்டில், MGNREGSன் கீழ், 621 லட்சம் பேருக்‍கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த எண்ணிக்கை 2017ல் 651 லட்சமாக அதிகரித்துள்ளது.

மேலும் தகவல்கள்

50 சுற்றுலா சர்க்யூட்களை உருவாக்குவதற்கான சிறப்பு லட்சியத் திட்டம்

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

நாடு முழுக்க சுற்றுலா சர்க்யூட்களை ஊக்குவிப்பதற்காக இந்த அரசு சுதேஷ் தரிசனத் திட்டத்தை தொடங்கியுள்ளது. இன்தக் குழுவாலும், ஆன்மிக ரீதியாக கவனம் செலுத்தும் - பிரசாத் - திட்டம் மூலமாகவும் பரிந்துரைக்கப்படும் வழித்தடங்கள் சுற்றுலா சர்க்யூட்களை உள்ளடக்கியதாகவும், புனிதப் பயணம் வருபவர்களுக்கு ஏற்றதாகவும் இருக்கும் வகையிலும், பூகோள ரீதியில் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது. 2019 பிப்ரவரி 15 ஆம் தேதி நிலவரப்படி இந்தத் திட்டத்துக்கான இணையதளத்தில், மொத்தம் 74 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

மீன் வளர்ப்பு மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பை ஊக்குவித்தல்

வகை: வேளாண்மை நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

மீன்வள மேம்பாடு மற்றும் மீனவர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்காக அந்தத் துறையில் தனியார் முதலீடு மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், தேசிய கடல்சார் மீன்வளக் கொள்கையை 2017ல் வேளாண்மை அமைச்சகம் அறிவிக்கை செய்தது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தில், பால்வளம் மற்றும் மீன்வளம், கால்நடை பராமபிப்புத் துறை, ``நீலப் புரட்சித் திட்டத்தின்'' கீழ் பல்வேறு திட்டங்களை அமல் செய்து வருகிறது. உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவது, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் மீனவர்களின் நலன்களை மேம்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இதில் அடங்கியுள்ளன. 2018ல் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை (FIDF) ரூ.7,522 கோடி செலவில் பிரத்யேகமாக இந்தத் துறை உருவாக்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

தொழில்நுட்பம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் மூலம் சிறைத் துறையை நவீனப்படுத்துதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

சிறைகளை நவீனப்படுத்தும் செயல்பாடு பன்முக விஷயங்களைக் கொண்ட, தொடர் நடவடிக்கையாக இருக்கக் கூடியது. டிஜிட்டல் மயமாக்கல் மூலம் சிறை நிர்வாகத்தில் செம்மை நிலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட E-சிறைகள் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் உதவிகள் செய்கிறது. விசாரணைக் கைதிகளுக்கு இலவச சட்ட உதவி சேவைகள் பற்றிய தகவல்களை அளிப்பதற்கு 2017ல் இணையதளம் ஒன்றை தேசய சட்ட சேவைகள் ஆணையம் தொடங்கியது. ``சிறைகளை நவீனமாக்கல்'' திட்டம் 2002-03ல் தொடங்கப்பட்டது. முதலாவது கட்டப் பணிகள் 2009ல் நிறைவடைந்தன. இரண்டாவது கட்டப் பணிகளும் கருத்தில் கொள்ளப்பட்டன. ஆனால் அதற்கு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. அதனால் இரண்டாவது கட்டப் பணிகள் தொடங்கப்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் சமூகத்தின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை தகவல் தொழில்நுட்ப செயலாக்க வளர்ச்சி வரம்புக்‍குள் கொண்டுவருதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் உருவாக்‍கியுள்ள, இணையதள போர்டல்(e-utthaan.gov.in) மூலம், 2017ம் ஆண்டு முதல், தாழ்த்தப்பட்ட மக்‍கள் நலனுக்‍கான, மத்திய துறை / மத்திய நிதியுதவி திட்டங்கள் கண்காணிக்‍கப்பட்டு வருகின்றன. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின துணைத் திட்டத்தை, அரசாங்கம் தொடர்ந்து வருகிறது : பழங்குடியினருக்‍கு அதிகாரமளிக்‍க, நகர்ப்புற / கிராமப்புறங்களில் உள்ள அட்டவணைப்படுத்தப்பட்ட சாதிகளில் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு மக்‍களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், தொழில்நுட்ப ஆராய்ச்சி, வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தவும், தொழில்நுட்ப தலையீடுகள் இருக்‍கின்றன. தாழ்த்தப்பட்டோரில் தொழில்நுட்பங்கள் சார்ந்த தொழில் முனைவோரை ஊக்‍குவிக்‍க, 2015ம் ஆண்டில், தாழ்த்தப்பட்டோருக்கான முதலீட்டு நிதியம் தொடங்கப்பட்டது. 2018-19ம் ஆண்டில் ரூ.140 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. SC/ST மாணவர்கள், திறன் மேம்பாடு மற்றும் கல்வி பெற, அரசு, கடன் உதவி மற்றும் மானியங்களை வழங்குகிறது.

மேலும் தகவல்கள்

ஒருங்கிணைக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

நாடு முழுக்க சரக்குப் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்கு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், தொடர்ச்சியான சில திட்டங்களை அமல் செய்கிறது. பல வகையான போக்குவரத்துகளை ஒன்று சேர்க்கும் ஒரு திட்டம் இதுவரையில் உருவாக்கப்படவில்லை. ஆனால், பல வகையான போக்குவரத்து திட்டமிடலை ஊக்குவிப்பதற்காக இந்திய ஒருங்கிணைந்த போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்து மாநாட்டை இந்த அமைச்சகம் 2017 மே மாதம் நடத்தியது. இந்தியாவில் ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்துக்காக இந்தியாவும் பிரிட்டனும் 2018-ம் ஆண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

மேலும் விவரங்களுக்கு

அதிவேக இணையசேவை அமைத்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

நாட்டில், மேம்படுத்தப்பட்ட இணைய உள்கட்டமைப்பு மற்றும் இணைய இணைப்பை உறுதிப்படுத்த, 2015ம் ஆண்டில் டிஜிட்டல் இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2017ம் ஆண்டில் பாரத இணைய திட்டத்தின் இரண்டாம் கட்டம் (ஆரம்பத்தில் தேசிய ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் 2011 என அழைக்கப்பட்டது), நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளையும், பிராட்பேண்ட் மூலம் இணைக்க அறிமுகப்படுத்தப்பட்டது. கிராமப்புற பஞ்சாயத்துகளில் வைஃபை ஹாட் ஸ்பாட்டுகளை அமைக்‍கவும், இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தகவல்கள்

சக்தி மாற்றம் மற்றும் விநியோக இழப்புகளை குறைக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2015ன் தீன்தயால் உபாத்யா கிராம் ஜோதி யோஜனாவின் (DDUGJY) முக்கிய குறிக்கோள்களில் ஒன்று, விநியோகத்தின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்த, துணை-சக்‍தி மாற்றம் மற்றும் விநியோக வலைப்பின்னலை மேம்பாடு அடைய செய்வதாகும். மத்திய ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனம்(CPRI), பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா(PGCIL) ஆகியவை தனித்தனியாக, தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியின் மூலம், மின்சக்‍தி விநியோகத்தின் போது ஏற்படும் ஆற்றல் இழப்புகளை குறைக்‍கும் நடவடிக்‍கையில் ஈடுபட்டுள்ளன. 2009ம் ஆண்டில், 25.47 சதவீதமாக இருந்த, சக்‍தி மாற்றம் மற்றும் விநியோக இழப்பு, 2015ல் 21.81 சதவீதமாக குறைந்துள்ளது.

மேலும் தகவல்கள்

அரசு பிராந்தியக் கவுன்சில்கள் தொடங்குவது

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

மாநிலங்கள் அல்லது பிராந்தியங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சிறப்புக் கவுன்சில்களை உருவாக்கும் பொறுப்பு நிதி ஆயோக் அமைப்பிடம் தரப்பட்டுள்ளது. ஹிமாலயன் அரசு பிராந்திய கவுன்சில் 2018ல் தொடங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு

மண் வள ஆய்வின் அடிப்படையில் பயிர்களுக்குத் திட்டமிடுதல் மற்றும் நடமாடும் மண்வள சோதனை ஆய்வகங்கள் அறிமுகம் செய்தல்

வகை: வேளாண்மை நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

நாட்டில் அனைத்து விவசாயிகளுக்கும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மண் வள அட்டை வழங்குவதற்காக `மண் வள அட்டை (SHC)' திட்டத்தை அரசு 2015-ல் தொடங்கியது. தங்களுடைய மண்ணின் வளத்தை அறிந்து, அதற்கேற்ப பயிர் சாகுபடி செய்யும் முடிவை விவசாயிகள் எடுக்க உதவும் வகையில் இத் திட்டம் தொடங்கப்பட்டது. 12.04 கோடி மண் வள அட்டைகள் வழங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்த நிலையில், 2019 பிப்ரவரி 6 ஆம் தேதி வரையில் 8.13 கோடி அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டில் இதற்கு ரூ.2389.58 லட்சமும், 2018-19ல் ரூ.19119.89 லட்சமும் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. 2018 மார்ச் மாத நிலவரப்படி நாட்டில் 284 நடமாடும் மண்வள பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் இருந்தன. நிரந்தரமான மண்வள பரிசோதனை ஆய்வகங்கள் 1460, மினி ஆய்வகங்கள் 8752 இருந்தன.

மேலும் விவரங்களுக்கு

அரசாங்கம் தொடர்புடைய வழக்‍கறிஞர்களை திறனாய்வு செய்தல் மற்றும் குறைத்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

அரசாங்கம், பொறுப்பான வழக்கறிஞரை உருவாக்‍கும் நோக்‍கத்துடன், 2010ம் ஆண்டில் தேசிய வழக்காடல் கொள்கை தயாரிக்கப்பட்டது. வரைவு இன்னும் அரசின் பரிசீலனையில் உள்ளது. "அரசாங்க வழக்‍குகளை குறைப்பதற்கான நடவடிக்கை திட்டம்" என்ற தலைப்பில் ஒரு ஆவணம் நீதித்துறை வலைதளத்தில், அத்துறையின் மூலம் 2017ல் பதிவேற்றம் செய்யப்பட்டது. தேக்‍கமடைந்துள்ள அனைத்து வழக்‍குகளையும் குறைக்‍க அரசு நடவடிக்‍கை எடுக்‍கிறது : தேக்‍கமடைந்துள்ள வழக்‍குகளை முடித்து வைக்‍க, நியாயா மித்ரா திட்டம், 2017ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2015ம் ஆண்டில், பாதுகாப்பு அமைச்சகம் ஒரு வல்லுநர் குழுவை அமைத்து, சேவை விஷயங்களில் வழக்குகளை குறைப்பதற்கான மாற்றங்களை கண்காணிக்‍க முன்மொழிந்தது.

மேலும் தகவல்கள்

பாலின இடைவெளியைக் குறைக்‍கும் பொருட்டு, பார் கவுன்சில் மற்றும் அமர்வில், பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2019ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி வரை, உச்ச நீதிமன்றத்தில் 28 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் மூன்று பேர் பெண்கள். உயர் நீதிமன்றங்களும் இதே போன்று உள்ளன. இந்திய அரசியலமைப்பின் 217 மற்றும் 224 சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமிக்‍கப்படுகின்றனர். பெண்கள் உட்பட எந்தவொரு சாதி அல்லது வகுப்பினருக்கும், இந்த அரசியலமைப்பு சட்டங்கள் இட ஒதுக்கீடு வழங்கவில்லை. நீதிபதிகளை நியமனம் செய்ய முன்மொழியும்போது, பெண்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதிகளுக்‍கு கடிதங்கள் எழுதியுள்ளார். சில மாநிலங்கள், துணை நீதிமன்றங்களில் பெண்களை நியமனம் செய்ய இட ஒதுக்கீடு வழங்கியுள்ளன.

மேலும் தகவல்கள்

சட்ட விழிப்புணர்வு திட்டங்களை இயக்குதல் மற்றும் அதனை பள்ளி பாடத் திட்டத்தில் அறிமுகப்படுத்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA), மற்ற சட்ட சேவைகள் நிறுவனங்களுடன் இணைந்து, பொதுமக்‍களின் உரிமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. 2012 - 2013ல், 64,625 சட்ட அறிவு முகாம்கள் நடத்தப்பட்டன. 2015ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,10,400 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு சட்ட கல்வியறிவுத் திட்டங்கள் பள்ளி மற்றும் கல்லூரி அளவில் நடத்தப்படுகின்றன. 2013ல் மத்திய இடைநிலை கல்வி வாரியம்(சிபிஎஸ்இ), சட்ட படிப்புகளை, XI மற்றும் XII வகுப்புகளுக்‍கு, விருப்ப தேர்வு பாடங்களாக அறிமுகப்படுத்தியது. தனிப்பட்ட மாநில சட்ட சேவை அதிகாரிகள், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) வழிகாட்டுதலின்படி, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சட்ட அறிவு குழுக்‍களை செயல்படுத்துகின்றனர்.

மேலும் தகவல்கள்

சட்ட தகவல்களை, வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் அணுக வசதி செய்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

E-Courts திட்டம், செயல்திறன் மற்றும் நேரத்திற்கு உட்பட்டு குடிமக்‍களை மையப்படுத்திய சேவையை வழங்கவும், வெளிப்படைதன்மையுடன் தகவல்களை அணுகவும் 2013ல், அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து வருகிறது.

மேலும் தகவல்கள்

தூதரகத்தின் அதிகாரத்தை விரிவுப்படுத்துதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2017 ஆம் ஆண்டில், அனைத்து இந்திய சேவைகள் உறுப்பினர்களுக்கும் ஒதுக்கீடு செய்ய அரசு ஒரு திருத்தப்பட்ட கொள்கையை வெளியிட்டது. இந்திய வெளிவிவகாரச் செயலகம் (IFS) ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மாற்றுவதற்கான திட்டம் ஏதும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டார். 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலியிடங்கள் எண்ணிக்கை 30 ஆகும்.

ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

ஏழை மக்களுக்கு வீடு வழங்க பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டதை மத்திய வீட்டுவசதி மற்றும்நகர்ப்புர வளர்ச்சித் துறை 2015 ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது. 2019 பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி, 72 லட்சத்து 80 ஆயிரத்து 851 வீடுகள் கட்ட, ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 825 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு பகுதிகளில் வேலை வாய்ப்பை அதிகரித்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

வடகிழக்கு மேம்பாட்டு கார்ப்ரேஷ்ன் லிமிட்ட், தனியாக ஒரு நிதியமைப்பை உருவாக்கியது. அது வடக்கிழக்கு பகுதிகளில் சுற்றுலாப் மற்றும் ஐடி துறைகளில் வேலைவாய்பை அதிகரிக்கும் விதமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

வடக்கிழக்கு பகுதிகளில் சட்டவிரோதமாக குடியேறுதலை தடுப்பது தொடர்பான திட்டம்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

கடந்த மூன்று ஆண்டுகளில் எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்கு வந்தவர்களில் 330 பேர் பாகிஸ்தானியவர்கள், 1770 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள். இதை தடுக்கும் பொருட்டு 2016 ஆம் ஆண்டு விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டது. இவர்களை கண்டறியம் வகையில் அசாம் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு மாணவர்களுக்கு கல்வி நிலையங்களில் விடுதி அமைத்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சுகாதாரம் தரமான கல்வி சேவையை வழங்குதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

அமைப்புசாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு சட்டம் 2008 மூலம் பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்பட்டது. 2017 – 2018 ஆம் ஆண்டில் இதற்காக ரூ. 402 கோடி ஒதுக்கப்பட்டது. ஸ்கில் இந்தியா திட்டத்தில் அமைப்புசாரா துறையினரும் சேர்க்கப்பட்டுள்னர்

தேசிய சரக்குப் போக்குவரத்து நெட்வொர்க் உருவாக்குதல்

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

பல வகை போக்குவரத்து திட்டமிடலை ஊக்குவிப்பதற்காக இந்திய ஒருங்கிணைந்த போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்து மாநாட்டை 2017ல் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் நடத்தியது. உறுதியான எந்தத் திட்டமும் அதில் உருவாக்கப்படவில்லை. ஆனால், அதற்கான கலந்துரையாடல் தொடங்கப்பட்டது. மையத்தில் சேகரித்து அனுப்பும் மாதிரியான போக்குவரத்து வசதியை உருவாக்கும் வகையில், ``கிடங்குகள் தொகுப்பு'' உருவாக்குவதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு

அழுகிவிடக் கூடிய வேளாண் பொருட்களை கொண்டு செல்லும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளுடன் வேளாண்மை ரயில்வே நெட்வொர்க் வசதி தொடங்குதல்

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

வடகிழக்கில் இருந்து மும்பை, பெங்களூரு, நாக்பூர், புனே போன்ற சில்லரை விற்பனைச் சந்தைகளுக்கு வேளாண் விளைபொருட்களைக் கொண்டு செல்வதற்காக, குவஹாட்டியுடன் மகாராஷ்டிரா பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயில் (PCET) மூலம் 2018ல் இணைக்கப் பட்டது. அழுகும் வேளாண்மைப் பொருட்களைக் கொண்டு செல்வது தொடர்பாக, 2017 ஆம் ஆண்டில், தேசிய குளிர்பதன வசதி மேம்பாட்டு மையம் ஓர் அறிக்கை தயாரித்தது. 1.9 சதவீதம் அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகள் ரயில் மூலமாகவும், 97.4 சதவீத வேளாண் விளைபொருட்கள் சாலை மார்க்கமாகவும் எடுத்துச் செல்லப் படுவதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அழுகும் பொருட்களைக் கொண்டு செல்ல உதவும் வகையில் குளிர்பதன வசதி கொண்ட ரயில் பெட்டி வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. தேவை அதிகம் இல்லாததால், இவை பயன்படுத்தப் படவில்லை. 2017ல் அமுல் நிறுவனம் 17 மெட்ரிக் டன் அளவுக்கு வெண்ணெயை குளிர்பதன வசதியுள்ள பெட்டிகள் மூலம் பலன்பூரில் இருந்து டெல்லிக்கு கொண்டு சென்றது.

மேலும் விவரங்களுக்கு

இயங்குகிற விமான நிலையங்களை நவீனப்படுத்துதல். சிறு நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களை இணைக்கும் வகையில் விமான நிலையங்களை நவீனமயமாக்குதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

நாட்டில் உள்ள விமான நிலையங்களை அடுத்த 5 ஆண்டுகளில் நவீன முறையில் மேம்படுத்துவற்கு ரூ. 25,000 கோடி ஒதுக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு விமானத்துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தேசிய விமான போக்குவரத்து கொள்கை உருவாக்கப்பட்டது.

அனைத்து கிராமங்களையும் எல்லா காலநிலைக்கும் ஏற்ற சாலைகள் மூலம் இணைத்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா திட்டம் 2000 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. எல்லா காலநிலைக்கும் ஏற்ற சாலைகள் அமைத்து கிராமங்களை இணைப்பது. 2019 பிப்ரவரி 6 ஆம் தேதி வரை 1.45 லட்சம் குடியிருப்புகள் இத்தகைய சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன.

கிராமப்புற கடன் வசதிகளை விரிவாக்குதல் மற்றும் பலப்படுத்துதல்

வகை: வேளாண்மை நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

நடைமுறையில் உள்ள திட்டங்களை தொடர்வது மற்றும் பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம் கிராமப்புற கடன் வசதிகளில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. 2006-07 ஆம் ஆண்டில் இருந்து வட்டி தள்ளுபடி திட்டத்தை அரசு அமல் செய்து வருகிறது. குறுகிய கால பயிர்க் கடன்களை ஓராண்டுக்குள் செலுத்தும் போது விவசாயிகள் இந்தச் சலுகையைப் பெறுகின்றனர். விவசாயிகள் கடன் அட்டை (KCC) திட்டத்தையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், விவசாயிகள் கடன் அட்டைகளை பாஜக அரசு ரூப்பே அட்டைகளாக மாற்றியுள்ளது. நிறுவனம் சார்ந்த கடன் என்ற வரம்பில் சிறிய, நடுத்தர விவசாயிகளைக் கொண்டு வரும் வகையில் கூட்டுப் பொறுப்பேற்பு குழுக்கள் (JLG) திட்டத்தை வங்கிகள் ஊக்குவிக்கின்றன. 2017 மார்ச் மாதம் வரையில் 24.53 லட்சம் கூட்டுப் பொறுப்புக் குழுக்களுக்கு ரூ. 26,848.13 கோடி மதிப்புள்ள கடன்களை வங்கிகள் அளித்துள்ளன. வேளாண்மைக் கடன் இலக்கை 2015-16ல் ரூ..... கோடியில் இருந்து 2018-19ல் ரூ............. கோடியாக அரசு உயர்த்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நெடுஞ்சாலை மற்றும் ரயில் போக்குவரத்துடன் இணைத்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

அசாமில் நீண்ட காலமாக எதிர்ப்பார்க்கப்பட்ட லம்பிட்- சிலிச்சர் பகுதிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு ரயில்பாதையுடன் இணைக்கப்பட்டன.

சரக்கு முனையங்கள் உருவாக்குதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2020 ஆம் ஆண்டுக்குள் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் சரக்கு முனையங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது

பல்வேறு துறைகளின் சிறப்பு பல்கலைக்கழகங்களின் தேசிய அளவிலான வலைப்பின்னல் ஒன்றை உருவாக்குதல்.

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2010 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்களை இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2019 மார்ச்சில் 1693 1354 கல்வி நிலையங்கள் இணைக்கப்பட்ட்டன.

ரயில்வே துறையை நவீனமாக்கும் திட்டங்களை செயல்படுத்துதல்

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

இந்தியாவில் ரயில்வே வசதிகளை நவீனப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 2000வது ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து பழைய ரயில் பெட்டிகளை எல்.எச்.பி. பெட்டிகள் மூலம் இந்திய ரயில்வே மாற்றி வருகிறது. 2018 நவம்பர் மாத நிலவரப்படி நவீன எல்.எச்.பி. பெட்டிகளுடன் 308 ஜோடி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையங்களில் லிப்ட்கள் மற்றும் எஸ்கலேட்டர்கள் வசதி அளிப்பதற்கான பெரிய திட்டம் நிறைவேற்றப் படுகிறது. 2017 செப்டம்பரில் புல்லட் ரயில் திட்டத்துக்காக ``மேக் இன் இந்தியா'' திட்டத்தின் கீழ் ஜப்பானுடன் இந்தியா ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இதுவரை 6762 ரயில் நிலையங்களில் 100% எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேற்பார்வையிடல், கட்டுப்பாடு, தகவல் தொடர்பு, வடிவமைப்பு, மின்னணுவியல் மற்றும் ரயில்வே பயன்பாட்டுக்கான பொருள்கள் குறித்த விஷயங்களில் நவீன தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்திய ரயில்வேயின் தொழில்நுட்ப லட்சியத் திட்டத்துக்கு (TMIR) 2017ல் ஒப்புதல் அளிக்கப் பட்டது.

மேலும் விவரங்களுக்கு

நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் திட்டம்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2018ல் நிலத்தடி நீர் பாதுகாக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் அமைக்கப்படும் கண்காணிப்பு ஆணையம் நிலத்தடி நீர்மட்டத்தை கண்காணிக்கும். இந்த சட்டத்தில் மழைநீர் சேகரிப்பு பற்றியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நீர் ஆதார மேலாண்மை, நீர் வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப் பகுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய்கள் இணைக்க தேசிய கிராமப்புற குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூய்மையை உறுதிப்படுத்துதல், கழிவுகள் மேலாண்மை பற்றி தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளிகளில் விளையாட்டுகளை ஊக்குவித்தல்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

பள்ளிகளில் விளையாட்டு என்பது கட்டாய பாடமாக இல்லை. இதை கட்டாயமாக்கப்பட வேண்டம் என்று 2018 துணை குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். பள்ளி கல்லூரிகளில் விளையாட்டுகளை மேம்படுத்த கேலோ இந்தியா திட்டத்தை 2017 ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் அமைப்புகளும் இதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மதிய உணவு திட்டம்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2015 ஆம் ஆண்டில் 11.5 லட்சம் பள்ளிகள் மற்றும் 10 கோடி குழந்தைகள் மதிய உணவு திட்டத்தில் கீழ் பயனடைந்தனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைந்தது. 2016ல் தரமற்ற உணவை வழங்குவதில் உள்ள முறைகேடுகள் தொடர்பாக மொத்தம் 57 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018ல் 20 புகார்கள் மட்டுமே வந்தன.

சுகாதார நிபுணர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ள முன்னுரிமை

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2016ல் கழிவுகள் மேலாண்மை விதிகள் திருத்தி அமைக்கப்பட்டன. இ - வேஸ்ட் மேலாண்மை முறையும் கொண்டுவரப்பட்டது. உரம், மண்புழு உரமாக்குதல், பயோ கேஸ் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும்

சுகாதாரத்தில் பல்வேறு தொழில்முறை கட்டுப்பாட்டு அமைப்புகளின் பங்களிப்பைப் பற்றிக் கவனித்தல்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

இந்தியாவில் சுகாதாரத்தை மேற்பார்வையிட பல்வேறு ஏராளமான கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளன. இந்த விவகாரத்தில், மருத்துவ முகாமைத்துவம் சட்டத்தை 2010ஐ தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. 2013 ஆம் ஆண்டு தேசிய தரம் காப்புறுதி திட்டம் (NQAP) அமைக்கப்பட்டது. இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) மருத்துவ தகுதிகளை அங்கீகரிப்பது, மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளித்தல், மருத்துவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குதல் மற்றும் இந்தியாவில் மருத்துவ பயிற்சியை கண்காணிக்கிறது. மருத்துவ சாதனங்கள் இறக்குமதி, விற்பனை மற்றும் தயாரிப்பதை ஒழுங்குப்படுத்தப்பட்டது.

அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்துதல்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

தேசிய சுகாதார திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மருத்துவமனைகளை தரத்தினை உயர்த்துதல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல். 2017-2018 ஆம் ஆண்டில் பொது சுகாதார உள்கட்டமைப்பில் 18 சதவிகிதம் பற்றாக்குறை இருந்தது, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 22 சதவிகிதம், சமூக சுகாதார மையங்கல் 30 சதவிகிதம் உள்கட்டமைப்பில் பற்றாக்குறை இருந்தது.

சர்வதேச அறிவியல் தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல்

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மூலம் மற்ற நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. விவசாயம் மற்றும் மருத்துவ பயோடெக்னாலஜியில் இஸ்ரேல் நாட்டுன் இணைந்து செயல்பட்டு வருகிறது. 2016ல். இரு நாடுகளும் இணை பாதுகாப்பில் இணைந்து செயல்பட முடிவெடுத்தன.

மொபைல் எல்த்கேர் அமைக்க தேசிய ஈஎல்த் ஆணையம்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

தேசிய இ எல்த் ஆணையம் தொடக்க நிலையிலான ஒரு திட்டம். இதன்மூலம், டெலிமெடிசின் திட்டங்கள், மருந்துகள் தொடர்பாக செல்போன் செயலிகளை உருவாக்க மாநில அரசுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழித்தல்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2014 ஆம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டம் உருவாக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டுவரை 569 மாவட்டங்களில் பொதுவெளியில் மலம் கழிப்பது முற்றுலும் ஒழிக்கப்பட்டு, கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. 2015ல். இதற்காக ரூ. 6363 கோடி விடுவிக்கப்பட்டது. 2017ல் இது மேலும் அதிகரிக்கப்பட்டது.

கழிவு மேலாண்மை அமைப்புகளை நவீனப்படுத்துதல்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2016 ஆம் ஆண்டில், கழிவு மேலாண்மை விதிகள் திருத்தியமைக்கப்பட்டன. மட்கிய கழிகள், மண்புழு உரம், உயிர் வேதியியல் தாவரங்கள், குறைந்த செலவிலான வடிகால், ஊடுருவி சேனல்கள், குழிகள், கழிவு நீக்கம் மற்றும் அமைப்பு முறைகளை மறுபயன்பாடு செய்தல், வீடமைப்பு குப்பை மற்றும் மாதவிடாய் தூய்மை மேலாண்மை ஆகியவற்றை செயல்படுத்தும்

நதிகளை இணைப்பது

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

நதிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, நீர்வள ஆதாரங்கள் மேம்பாட்டுக்கான தேசிய தொலைநோக்குத் திட்டம் 2015 டிசம்பரில் தொடங்கப்பட்டது. 30 நதிகள் இணைப்புக்கு சாத்தியக்கூறு இருப்பதாக 2018 மார்ச் வரையில் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் நான்கு திட்டங்களுக்கு முன்னுரிமை அந்தஸ்து அளிக்கப் பட்டது.

மேலும் விவரங்களுக்கு

அனைவருக்கும் பருகக்கூடிய குடிநீர் கிடைக்க செய்வது

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

தேசிய கிராப்புர குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் 2030க்குள் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்புகளை வழங்குதல், சுகாதாரமான குடிநீர் கிடைக்காதவர்களில் சதவிகிதம் 2016ல் 14 ஆக இருந்தது. 2019 பிப்ரவரி 5ல் 12.4 சதவிகிதமாக குறைந்துள்ளது.

உள்நாட்டு ரயில்வே, பெட்டிகள் வடிவமைப்பு மற்றும் சிக்னல்கள் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை தொடங்கி வைத்தல்

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

ஆராய்ச்சி, வடிவமைப்புகள் மற்றும் தர அளவுகள் அமைப்பிற்கு (RDSO) ஆராய்ச்சி & மேம்பாட்டிற்கு 2014 ஆம் ஆண்டில் ரூ.216.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2016ல் அது ரூ.313.10 கோடியாக அதிகரித்தது. இந்திய ரயில்வேக்கான தொழில்நுட்ப லட்சியத் திட்டம் (1017), ரயில்வே துறையில் உள்நாட்டு தொழில்நுட்ப மேம்பாடுகளை ஊக்குவிக்கிறது. இந்தியாவில் வழிநடத்தி செய்யப்படும் போக்குவரத்தில் நீண்டகால ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்காக, ``முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பம் & உள்ளார்ந்த முன்னேற்றம் - SRESTHA'-க்கான சிறப்பு ரயில்வே அமைப்பு' உருவாக்கப்படும் என்று 2016-17ல் பட்ஜெட் உரையில் ரயில்வே அமைச்சர் அறிவித்தார். இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பெரும்பாலும் ரயில் பெட்டிகளில் ஜெர்மன் வடிவமைப்பு பயன்படுத்தப் படுகிறது. 2017 நிலவரப்படி, வளைக்கப்பட்ட சக்கரங்கள் தவிர எல்.எச்.பி. ஜி.எஸ். பெட்டிகளை உள்நாட்டிலேயே இந்தியா தயாரித்து வருகிறது. ரயில் பெட்டி சோதனை நிலையில் இருக்கிறது. ரயில்கள் மோதுவதைத் தவிர்க்கும் முறையை (TCAS) உருவாக்குவதற்கும் RDSO முயற்சி மேற்கொண்டிருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு

கிராம மற்றும் எஸ்.சி. எஸ்.டி, பிரிவுகளில் பெண்கள் நலன்

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

2017 தொடங்கப்பட்ட போஷன் அபியான் திட்டம் குழந்தைகள் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை மேம்படுத்த தொடங்கப்பட்டது. அதே ஆண்டில், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நலனுக்காக பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் கொண்டுவரப்பப்பட்டது.

உடல் பருமன், நீரிழிவு, புற்றுநோய் நோய்களுக்கான தீர்வு காண ஆராய்ச்சி

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விரிவான ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது, இதில் நாட்பட்ட நோய்கள் அடங்கும். மாநில அரசுகள் ஆராய்ச்சி நிறுவனங்களை நிறுவுவதற்கு நிதியுதவி அளிக்கிறது. அரசாங்கம் 2017 ஆம் ஆண்டின் தேசிய சுகாதாரக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்குள் இதய நோய்கள், புற்றுநோய், நீரிழிவு அல்லது நீடித்த சுவாச நோய்களில் இருந்து 25 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும்.

அவசர மருத்துவ சேவை 108 ஐ உலகமாயமாக்குவது

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

அவசர உதவிக்கு பதிலளிக்கும் அமைப்பிற்கான இலவசர எண் 112 நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். காவல், தீயணைப்பு, சுகாதாரம் சேவைகள் இதில், அடங்கும். 2018ல் அவசர உதவி 112 சேவையை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றது இமாச்சல் பிரதேசம்.

தொலைதூரப் பகுதிகளுக்கு தண்ணீர் வசதி கிடைக்கச் செய்வது

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகள் நடந்துவருகின்றன

உலக நீர் கவுன்சில் (WWC) 2017ல் நடத்திய கணக்கெடுப்பின்படி, கடந்த 5 ஆண்டுகளில் குடிநீரின் தரம் அதிகரித்திருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு

தற்காப்புக் கலையை பள்ளிக்கூட பாடத் திட்டத்தில் அறிமுகம் செய்வது.

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

ராஷ்டீரிய மத்யமிக் ஷிக்சா அபிக்யான் (RMSA) மூலமாக மாணவிகளுக்கு தற்காப்புக் கலை கற்பிக்கும் முயற்சியில் 2009ல் இருந்து அரசு ஈடுபட்டு வருகிறது. 2018ல் கல்வி, சமாக்ரா ஷிக்சா என இப்போதைய பள்ளிக் கல்வித் திட்டங்களை ஒரே வரம்புக்குள் கொண்டு வரும் திட்டத்தை அரசு தொடங்கியது. சமாக்ரா ஷிக்சா திட்டத்தின் கீழ், ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு தற்காப்புக் கலை கற்றுத் தரும் விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன. பள்ளிக் கல்வித் திட்டத்தில் தற்காப்புக் கலையை கட்டாயமாக்கும் விதிகள் ஏதும் இல்லை. கூடுதல் கலைக்கான அம்சமாக இது அளிக்கப் படுகிறது.

மேலும் விவரங்களுக்கு

ஒரு நிரந்தர மதநல்லிணக்க ஆலோசனை அமைப்பை உருவாக்குதல்

வகை: சிறுபான்மையினர் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

சர்வதேச மத சுதந்திரம் பற்றிய ஐக்கிய அமெரிக்க கமிஷன் (USCIRF) அறிக்கையில் 'மத சுதந்திரத்தின் அடிப்படையில் இந்தியா ஒரு எதிர்மறையான போக்கு உள்ளதாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் மதநல்லிணக்க ஆய்வு மையத்தை உருவாக்க அரசு முடிவெடுத்தது.

நீதிமன்றங்களை நவீனமயமாக்‍கி செயல்பாட்டு திறனை மேம்படுத்த நிதி ஒதுக்‍குதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

நீதித்துறை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 1993-94 ஆண்டு முதல், மத்திய நிதி உதவி திட்டத்தை அரசு நிர்வகித்து வருகிறது. இத்திட்டத்திற்கு, தொடக்கத்திலிருந்து ஆகஸ்ட் 2018 வரை, ரூ.6355.79 கோடி நிதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2017-18ம் ஆண்டில், ரூ.621.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முழுமையாக பயன்படுத்தப்பட்டது. 2018-19ம் ஆண்டுக்‍கு ரூ.622 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றங்களின் நவீனமயமாக்கலுக்கு தனியாக நிதி ஒதுக்‍கீடு செய்யப்படவில்லை. மாவட்ட மற்றும் கீழ்நிலை நீதிமன்றங்களின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்திற்கான(ICT) செயலாக்கத்திற்கு, அரசு, eCourts திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 2018 வரை eCourts திட்டத்தின் இரண்டாம் கட்ட செலவினத்திற்கு ஒதுக்‍கப்பட்ட ரூ.1670 கோடி நிதியில், ரூ.1073.18 கோடி வழங்கப்பட்டது.

மேலும் தகவல்கள்

பயன்பாட்டில் இல்லாத நிலங்கள் சமூக வனவியலுக்கு பயன்படுத்தப்படும்

வகை: சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

மானாவாரி பகுதிகள், விளைநிலங்கள் மற்றும் பயன்பாட்டில் இல்லாத நிலங்களை வளர்ச்சி அடைய செய்ய, அப்பகுதிகள், பிரதான் மந்திரி கிருஷி சின்சாயி யோஜனா (WDC-PMKSY) நீர்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2009-10 முதல் 2014-15 வரையிலான காலக்கட்டங்களில், 8214 நீர்ப்பிடிப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டன. இந்த திட்டங்கள், தற்போதும், பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.

மேலும் தகவல்கள்

அரசுக்‍கும்– தொழில்துறைக்‍கும் இடையே பேச்சுவார்த்தையை முன்னெடுத்து, வழக்‍கமான தொடர்பை ஏற்படுத்துதல்.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

அரசாங்கம், சில மின்-ஆளுமைத் திட்டங்களை மேற்கொண்டு, அரசு மற்றும் அதன் துறைகளை, நேரடியாக, பொதுமக்களுடன் இணைக்கும் இணையதளங்களை உருவாக்கியுள்ளது. தேசியமின்-ஆளுமைத் திட்டத்தின்கீழ், எந்தவொரு தொழில்துறையும் அரசாங்கத்துடன் இணைக்கப்படாது.

மேலும் தகவல்கள்

பல மாநில கூட்டறவுச் சட்டங்களில் உள்ள இடைவெளிகள் மற்றும் முரண்பாடுகளை அகற்றுவது.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்டம் 2002, நாடாளுமன்றத்தில் 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் எந்த முன்னேற்றமும் இல்லை.

மேலும் தகவல்கள்

பெண்களுக்கென சிறப்பு முதியோர் கல்வியறிவுத் திட்டம்

வகை: பெண்கள் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

முந்தைய அரசால் தொடங்கப்பட்ட கல்வியறிவுத் திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வந்தாலும், முதியோர் கல்வியறிவு என சிறப்புத் திட்டம் எதுவும் உருவாக்கப்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு

பெண்களுக்கான பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது.

வகை: பெண்கள் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

2013 டிசம்பர் நிலவரப்படி 1431 மகளிர் ஐ.டி.ஐ.கள் மற்றும் பொதுவான ஐ.டி.ஐ./ ஐ.டி.சி.களில் 82,390 பயிற்சி இடங்கள் இருந்தன. தொழில் திறன் வளர்ச்சி அமைச்சகம் மாநிலங்களவையில் அளித்த பதில் ஒனறில், 2016-17 நிலவரப்படி 1408 மகளிர் ஐ.டி.ஐ.கள் / ஐ.டி.ஐகளில் மகளிர் பிரிவுகளில் 135459 இடங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஐ.டி.ஐ.களில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப் படுகிறது.

மேலும் விவரங்களுக்கு

ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேகமான W-SME (மகளிர் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்) உருவாக்குதல்.

வகை: பெண்கள் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

MSME வளர்ச்சிக்கு உதவும் வகையில் குறு & சிறு தொழில் நிறுவன தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்தை (MSE-CDP) அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஒரே மாதிரி பிரிவுகளை ஒரு தொகுப்பில் சேர்ப்பதன் மூலம் இது செயல்படுகிறது. பிரத்யேகமான மகளிர் MSME தொகுப்பு (பெரும்பாலான தொகுப்புகள் உற்பத்தி வகை மற்றும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உள்ளன.) எதுவும் இல்லை. மகளிரை உரிமையாளராகக் கொண்ட நிறுவனங்களுக்கு இந்திய அரசின் மானிய விதிகளை இத் திட்டம் வரையறுக்கவில்லை. பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கு பல திட்டங்களை அமைச்சகம் தொடங்கியுள்ளது, பலவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு

சமூக சமையலறைகளை இயக்க தன்னார்வ அமைப்புகளின் பங்கினை பெறுவது.

வகை: சிறுபான்மையினர் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

2018ல், இந்த அரசானது, 2018-20 நிதி ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.325 கோடிகளை ஒதுக்கி, ‘சேவ போஜ் யோஜனா’ என்ற திட்டத்தை துவக்கிற்று. இத்திட்டத்தின்படி, சமூக சமையலறைகள் மூலம், பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் உணவு மற்றும் பிரசாதங்களை வழங்க பணியாற்றும் மத மற்றும் தொண்டு நிறுவனங்கள், கொள்முதல் செய்யும் மூல உணவு பொருட்கள்மேல் விதிக்கப்படும் மத்திய அரசின் வரி மற்றும் மாநிலங்களின் வரி மூலம் அரசுக்கு கிடைக்கும் பங்கினை, திருப்பிகொடுக்க வகை செய்கின்றது. இந்த திட்டத்தில், தன்னார்வ அமைப்புகள் பற்றி குறிப்பிடப்படவில்லை என்றாலும், மாநிலங்களும், அரசு சாரா தன்னார்வ நிறுவனங்களும், இப்பணியாற்ற விரும்பும் தன்னார்வலர்களை தேடும் பொறுப்பினை ஏற்றுள்ளன.

மேலும் தகவல்கள்

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றுதல்

வகை: பெண்கள் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா இன்னும் நிறைவேற்றப் படவில்லை.

மேலும் விவரங்களுக்கு

சுகாதாரம், உணவு, ஊட்டச்சத்து மற்றும் மருந்து துறைகளை, ஒன்றிணைய, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தை, மறுசீரமைத்தல்.

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

சுகாதார கொள்கைக்கு, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பொறுப்பாணை கொள்ளும்பொழுது, ஊட்டச்சத்து, சுகாதார அமைச்சகத்திற்கு கீழ் வருகிறது. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருந்துகள் மற்றும் உணவு தர கட்டுப்பாட்டு பிரிவானது, உணவு பாதுகாப்பினை மேற்கொள்கிறது. மருந்துகள் துறை தனித்தே செயல்படுகின்றது. இவைகள் ஒன்றினைக்கப்படவில்லை.

மேலும் தகவல்கள்

மகளிர் மட்டும் கொண்ட நடமாடும் வங்கி அமைத்தல்

வகை: பெண்கள் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

2014ல் தொடங்கப்பட்ட பாரதிய மகிளா வங்கி (BMB) 2017 ஏப்ரல் 1-ல் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது. இணைப்பு நடந்தபோது அந்த வங்கியில், நாடு முழுக்க இருந்த கிளைகளில் 133 பெண்கள் மட்டுமே பணியில் இருந்தனர். இந்தக் கிளைகளில் எதுவுமே நடமாடும் வங்கி அல்ல.

மேலும் விவரங்களுக்கு

அனைத்து புதிய வீட்டுவசதி குடியிருப்பு வளாகங்களிலும் விளையாட்டு வசதிகள்.

வகை: திறன் மற்றும் சமூக வளர்ச்சி நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

வீட்டு வசதிக் குடியிருப்பு வளாகங்களில் விளையாட்டு வசதிகள் இடம் பெற வேண்டும் என்று அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் இல்லை. வீடுகள் கட்டுவதற்கு பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் உதவி செய்கிறது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி உதவி எதையும் கோராமல், வீட்டின் அளவு மற்றும் வசதிகளை மாநில அரசு மாற்றிக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு

கன்டோண்மெண்ட் மற்றும் இதர இடங்களில் ராணுவ நிலம் குறித்த தகவல்களை டிஜிட்டல்மயமாக்கும் நடவடிக்கைகளைத் தொடங்குதல்.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

கன்டோண்மெண்ட் பகுதியில் உள்ள பாதுகாப்புத் துறை நிலங்கள் குறித்த ஆவணங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் பணிகளை, தேசிய தகவலியல் மையத்துடன் இணைந்து பாதுகாப்புத் துறை எஸ்டேட்கள் டைரக்டர் ஜெனரல் அலுவலகம் 2007ல் தொடங்கியது. அதன் தகவல் தொகுப்பு 2011ல் பொது வெளியில் அளிக்கப்பட்டது. இது தொடர்ச்சியாக நடைபெறும் செயல்பாடு. அப்போதிருந்து, இதுதொடர்பாக புதிதாக எந்த முன்முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு

ஓய்வுபெற்றவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு, ஓய்வுபெற்றவர்கள் ஆணையம் அமைத்தல்.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

முன்னாள் ராணுவத்தினருக்கான தேசிய ஆணைய மசோதா 2015 வரைவு தயாரிக்கப் பட்டுள்ளது. அப்போதிருந்து, அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு

அலுவலர்கள் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, நான்கு பிரத்யேக பாதுகாப்புப் பல்கலைக்கழகங்கள் அமைத்தல்.

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

பினோலா, குர்கான், ஹரியானாவில் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (INDU) அமைக்க 2010ல் அரசு ஒப்புதல் அளித்தது. அவை இன்னும் கட்டுமான நிலையில் உள்ளன. இப்போதைய அரசால் இதுபோன்ற எந்தத் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு

தேசிய கடல்சார் ஆணையம் உருவாக்குதல்

வகை: அறிவியல் மற்றும் பாதுகாப்பு நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

தேசிய கடல்சார் ஆணையம் உருவாக்கப் படவில்லை.

மேலும் விவரங்களுக்கு

பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக பல நாட்டு மாணவர் பரிமாற்றத் திட்டத்தைத் தொடங்குதல்.

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக பல நாட்டு மாணவர் பரிமாற்றத் திட்டத்தைத் தொடங்குவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு

மூலிகை வளர்ப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் மூலிகை வாரியத்தை மாற்றியமைத்தல்.

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

2000 ஆம் ஆண்டில் தேசிய மருத்துவத் தாவர வாரியம் அமைக்கப்பட்டது. மருத்துவ தாவரங்கள் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் நிலையான மேலாண்மை பற்றிய திட்டங்களை இந்த வாரியல் செயல்படுத்தும். இதியல் புதிய திட்டங்கள் எதையும் இந்த வாரியம் உருவாக்கவில்லை.

இமாலயன் தொழில்நுட்பத்துக்கு பிரத்யேகமாக மத்தியப் பல்கலைக்கழம் ஒன்றை உருவாக்குதல்.

வகை: சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

இமாலயன் தொழில்நுட்பத்துக்கென பிரத்யேகமான மத்திய பல்கலைக்கழகம் அமைக்கும் உத்தேசம் எதுவும் அரசுக்கு இல்லை என்று 2015ல் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். அதற்குப் பிறகு, இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு

தேசிய நீதித் துறை ஆணையம் அமைத்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

ஆணையம் உருவாக்குவதற்கு தேசிய நீதித் துறை ஆணைய சட்டம் நாடாளுமன்றத்தில் மோதி அரசின் முதலாவது ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. 2014 டிசம்பர் 31 ஆம் தேதி ஒரு சட்டமாக இது அறிவிக்கை செய்யப்பட்டது. இது ``அரசியல் சட்டத்துக்கு முரணானது, தேவையற்றது'' என்று கூறி உச்ச நீதிமன்றம் இதை ரத்து செய்துவிட்டது.

மேலும் விவரங்களுக்கு

இந்திய மொழிகளில் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான தேசிய லட்சியத் திட்டம் - இ-பாஷை திட்டத்தை ஊக்குவித்தல்.

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், லட்சிய நோக்கம் கொண்டதாக E-பாஷை திட்டத்தை 2015ல் குடியரசுத் தலைவர் முன்வைத்தார். அப்போதிருந்து இதுகுறித்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நாடாளுமன்றத்திலோ அல்லது எந்த அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ இதுபற்றி எந்தத் தகவலும் இல்லை.

மேலும் விவரங்களுக்கு

தேசிய வழக்காடல் கொள்கை அமல் செய்தல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

தேசிய வழக்காடல் கொள்கை, 2010 அரசால் மறு ஆய்வு செய்யப்பட்டு தேசிய வழக்காடல் கொள்கை 2015 கடந்த மூன்று ஆண்டுகளாகப் பரிசீலனையில் இருந்து வருகிறது. இந்தக் கொள்கை அமல் செய்யப்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவது

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களை இணைத்து நடத்துவதன் மூலம், ``நாடு முழுக்க ஒரே முறையில் தேர்தல்'' என்ற சிந்தனையை நரேந்திர மோதியும் பாஜகவும் முன்வைத்தார்கள். இருந்தபோதிலும் இதற்கு அரசியல் சட்ட திருத்தம் செய்யப்பட வேண்டும். இப்போதைக்கு அரசியல் கட்சிகளிடம் இதுகுறித்து ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கான வரைவுத் திட்டத்தை இந்திய சட்ட ஆணையம் 2018ல் வெளியிட்டது. பணியாளர், பொது மக்கள் குறைகேட்பு, சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நிலைக் குழுவும், ``மக்களவைக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு'' என்ற தலைப்பிலான அறிக்கையை 2015ல் சமர்ப்பித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு

சிறப்பாக செயல்படும் பஞ்சாயத்துகளுக்கு கூடுதல் வளர்ச்சி மானியங்கள் அளிப்பது.

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

``ஊரக வளர்ச்சித் திட்டங்களில் சிறந்த செயல்பாடுகளை உருவாக்க, செயல்பாட்டின் அடிப்படையில் நிதி வழங்குதல்'' என்பது குறித்து 2017ல் நிபுணர் கமிட்டி ஒன்று அறிக்கை சமர்ப்பித்தது. கிராம பஞ்சாயத்துகளுக்கு செயல்பாட்டின் அடிப்படையில் நிதி அளிக்கும் திட்டத்தை 2017-18, முதல் 2019-20 ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு அரசு அறிவித்தது. 2016 முதல் 2017 வரையில் கிராம பஞ்சாயத்துகளுக்கு செயல்பாட்டு மானியமாக (PG) மொத்தம் ரூ.3499.45 கோடி அளிக்கப்பட்டது. 2017-18ல் இது ரூ.1106.90 கோடியாகக் குறைந்துவிட்டது.

மேலும் விவரங்களுக்கு

அரசு மற்றும் தனியார் பங்களிப்பு (PPP) முன்மாதிரித் திட்டத்தை மக்கள், அரசு, தனியார் பங்களிப்பு (PPPP) முன்மாதிரித் திட்டமாக உருவாக்குதல்

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

மக்கள் நலனுக்காக அரசு மற்றும் தனியார் துறை இணைந்து செயல்படும் ஒப்பந்தமாக, அரசு மற்றும் தனியார் பங்களிப்பு (PPP) திட்டம் இருக்கிறது. அரசின் பல துறைகள் இந்த முன்மாதிரியைக் கையாள்கின்றன. கட்டமைப்பு உருவாக்கும் துறைகளில் PPP-களுக்கு உதவும் வகையில் அரசு பல திட்டங்களை உருவாக்கி, தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. மருத்துவம், போக்குவரத்து மற்றும் கல்வித் துறையிலும்கூட இந்த முன்மாதிரி நடைமுறை பின்பற்றப் படுகிறது. சில ஐ.ஐ.டி.களும் கூட PPP முன்மாதிரி திட்டத்தில் செயல்படுகின்றன. அரசு, தனியார் மக்கள் பங்களிப்பு (PPPP) முன்மாதிரித் திட்டம் என்பது, PPP திட்டத்தில் மக்களும் சேர்ந்து செயல்படுவது. குடிமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கு பல முனையங்கள் மற்றும் திட்டங்களை அரசு தொடங்கியுள்ள போதிலும், PPP-களில் மக்களையும் ஈடுபடுத்துவதற்கு, உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு

பசு பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்குத் தேவையான சட்ட வரையறைகள் உருவாக்கப்படும். உள்நாட்டு கால்நடை இனங்களை மேம்படுத்தும் திட்டத்தை அமல் செய்வதற்கு, தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியம் அமைக்கப்படும்.

வகை: ஆட்சி நிர்வாகம் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

அதுபோன்ற சட்ட வரையறை எதுவும் உருவாக்கப்படவில்லை. உள்நாட்டு எருது இனங்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் 2014 டிசம்பரில் ராஷ்ட்ரீய கோகுல் மிஷன் என்ற திட்டம் தொடங்கப் பட்டது. இறைச்சிக்காக கால்நடை சந்தைகளில் விலங்குகளை விற்பதைத் தடை செய்யும் சட்டத்தை 2018ல் அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.

மேலும் விவரங்களுக்கு

`இமயமலை வளம் பேணும் நிதி' உருவாக்குதல்

வகை: சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

2015ல் இதுதொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் பதில் அளித்த புவி அறிவியல் அமைச்சகம், இதுபோன்ற ஒரு நிதி உருவாக்கப்படவில்லை என்று தெரிவித்தது. அதற்குப் பிறகு இதுகுறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப் படவில்லை.

மேலும் விவரங்களுக்கு

மிகப்பெரிய திட்டங்களுக்‍கு அனுமதி அளிக்‍க, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வழிமுறைகள் வகுத்தல்.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

மிகப்பெரிய திட்டங்களுக்‍கு அனுமதி அளிக்‍க, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற, எந்த நெறிமுறைகளும் வகுக்‍கப்படவில்லை. நிலுவையில் உள்ள ஒப்புதல் எண்ணிக்கையைக் குறைப்பதில், தனிப்பட்ட துறைகள் மற்றும் அமைச்சகங்கள், தங்களை தாங்களே ஈடுபடுத்திக் கொண்டன.

மேலும் தகவல்கள்

பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தைகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை உருவாக்குதல் மற்றும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தல்.

வகை: பொருளாதாரம் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955 (EC சட்டம்) & கள்ளச் சந்தைத் தடுப்பு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கும் நிலையை பராமரிக்கும் சட்டம், 1980 (PBMMSEC சட்டம்) ஆகியவற்றை அமல் செய்வது குறித்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அரசு அறிவுறுத்தல்களை அனுப்பி வருகிறது. பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தை தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் எதுவும் அமைக்கப்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு

இந்திய உணவுக் கழகத்தின் செயல்பாடுகளைப் பிரித்தல்

வகை: பொருளாதாரம் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

இந்திய உணவுக் கழகத்தை மாற்றி அமைப்பதற்கு ஆலோசனை வழங்குவதற்காக 2014ல் ஒரு கமிட்டியை அரசு அமைத்தது. அந்தக் கமிட்டி 2015ல் அறிக்கை சமர்ப்பித்தது. இந்திய உணவுக் கழகத்தின் செயல்பாடுகளைப் பிரிப்பது பற்றி அதில் பரிந்துரைக்கப்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு

பல வகை பிராண்ட் பொருள்கள் சில்லரை விற்பனையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதிக்காதிருத்தல்.

வகை: பொருளாதாரம் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

2017 வெளிநாட்டு நேரடி முதலீட்டுக் கொள்கையின்படி, பல வகை பிராண்ட் பொருள்கள் சில்லரை விற்பனைக்கான வரம்பு 51%ஆக இருந்தது. அப்போதிருந்து அது மாற்றி அமைக்கப்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு

ஏற்றுமதி மேம்பாட்டு லட்சியத் திட்டத்தை உருவாக்குதல்

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

2014-15 பட்ஜெட்டில் ஏற்றுமதி மேம்பாட்டு லட்சியத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால் பல்வேறு இதர திட்டங்கள் மற்றும் கவுன்சில்கள் மூலம் ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு

MSME துறை செயல்பாடுகளை மறு ஆய்வு செய்து, புத்துயிரூட்டுவதற்கு ஒரு பணிக் குழு அமைக்கப்படும்.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

பாஜக ஆட்சியில் எந்தப் பணிக் குழுவும் அமைக்கப்படவில்லை. கடைசியாக 2009ல் முந்தைய ஆட்சியின் போது ஒரு பணிக் குழு அமைக்கப் பட்டது.

மேலும் விவரங்களுக்கு

குழப்பங்களுக்கு இடம் தராத வகையில் சுற்றுச்சூழல் சட்டங்களை உருவாக்குதல்

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, வனப் பாதுகாப்பு சட்டம் 1980, வனவிலங்குகள் பாதுகாப்புச்சட்டம் போன்ற சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களை மறு ஆய்வு செய்வதற்கு 2014ல் உயர்நிலைக் கமிட்டி அமைக்கப்பட்டது. அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய சுற்றுச்சூழல் சட்டத்தை உருவாக்க வேண்டும், தேசிய அளவிலான சுற்றுச்சூழல் கல்வி நிலையம் அமைப்பது, சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதை முறைப்படுத்துவது உள்ளிட்ட பரிந்துரைகளுடன் இந்தக் கமிட்டி சமர்ப்பித்த அறிக்கையை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆய்வு செய்தது. அதன் பிறகு இதுதொடர்பாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் 2010 மற்றும் 2015 ஆகியவற்றைத் திருத்துவதற்கு வரைவு சட்ட திருத்தங்களை அரசு உருவாக்கியது. ஆனால் அவை குறித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு

தொழில் துறை கடனுக்கு வட்டி விகித சீரமைப்புக்கு நடவடிக்கை எடுத்தல்.

வகை: வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

வட்டி விகித சீரமைப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2016ல் அரசு சில தேசிய சிறுசேமிப்புத் திட்டங்களை ஆய்வு செய்து, அவற்றின் மீதான வட்டி விகிதங்களின் அளவை திருத்தி அமைத்தது. ``பொதுத் துறை வங்கிகளில் வீட்டுவசதி மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் 2008ல் இருந்து 2018 வரையில் குறைந்து வந்திருக்கிறது'' என்று மக்களவையில் ஒரு கேள்விக்கு அளித்த பதிலில் இந்திய அரசின் நிதித் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு

இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கு `\இந்திய இயற்கை வேளாண்மை மற்றும் உரம் கார்ப்பரேஷன்' உருவாக்குவது

வகை: வேளாண்மை நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

அதுபோன்ற கார்ப்பரேஷன் எதுவும் உருவாக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக இயற்கை வேளாண்மை குறித்து ஆய்வு செய்வது மற்றும் ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு ஆராய்ச்சிகள் மற்றும் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. நாட்டில் ரசாயன உரங்கள் இல்லாத வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக 2015-ல் பரம்பரகத் கிரிசி விகாஸ் திட்டத்தை (PKVY) அரசு தொடங்கியது. 2015-16 முதல் இத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு ரூ.582.47 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதே திட்டத்திற்கு 2018-19ல் ரூ.204.32 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. வடகிழக்குப் பிராந்தியத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான பிரத்யேகத் திட்டம் 2015ல் ``வடகிழக்குப் பிராந்தியத்தில் இயற்கை வேளாண்மை மதிப்புத் தொடர் மேம்பாட்டு லட்சியத் திட்டம் (MOVCDNER)'' என்ற பெயரில் ஒரு திட்டம் தொடங்கப் பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 2015-16 முதல் 2017-18 வரையில் 45,918 ஹெக்டர் நிலங்கள் பயன் பெற்றுள்ளன. இதன் மூலம் 50,000 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். இந்தக் காலக்கட்டத்தில் இந்தத் திட்டத்திற்கு மாநிலங்களுக்கு ரூ.235.74 கோடி அளிக்கப் பட்டுள்ளது. ``இயற்கை வேளாண்மை நெட்வொர்க் திட்டத்தின் (NPOF)'' கீழ், அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்றவாறான பயிர் சாகுபடி முறைகளை (PoP) உருவாக்குவதற்கு இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. இப்போது 16 மாநிலங்களில் 20 மையங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு

மூலிகை பொருட்களை பயன்படுத்தி சுழற்சி முறை விவசாயம் அறிமுகம்

வகை: வேளாண்மை நிலையை: பணிகளில் முன்னேற்றமில்லை

சுழற்சிமுறை விவசாயத்தை அறிமுகப்படுத்த, எந்த புதிய திட்டத்தையும் அரசு தொடங்கவில்லை.

மேலும் தகவல்களுக்கு

Ut et suscipit enim. Nam aliquam porttitor sapien elementum mollis. In quis turpis ante. Morbi et ex aliquam, ornare neque sit amet, porttitor est. Quisque eleifend consequat turpis. Curabitur ultrices luctus quam, et dapibus quam bibendum non. Praesent facilisis augue magna, eu volutpat nibh gravida et. Cras pulvinar, ligula vel consectetur molestie, lorem eros euismod arcu, sed condimentum leo metus efficitur ante. Duis eu diam semper, hendrerit est porta, tincidunt odio. Maecenas sagittis justo lacus, ac varius est dictum sit amet. Nam vitae turpis dignissim, tincidunt felis sit amet, dignissim sapien. Integer et iaculis ex. Sed rhoncus elit vitae massa facilisis venenatis.

Curabitur lorem ligula, aliquet id lorem ut, molestie consequat sem. Donec sit amet lacus sagittis, gravida nunc a, volutpat elit. Nullam elementum, leo sed gravida euismod, enim leo venenatis dolor, eget consequat nisi nisl vel tortor. Ut hendrerit non justo nec porttitor. Aenean et dolor laoreet augue vulputate commodo ac ut turpis. Morbi luctus lacinia felis at pellentesque. Interdum et malesuada fames ac ante ipsum primis in faucibus. Nullam tristique faucibus mauris, sed volutpat ante consequat nec. Proin fermentum vehicula tortor, sed bibendum lectus volutpat ac. Cras dignissim elit id aliquam consectetur.